Wednesday, August 29, 2007

மழலைப் பட்டாளம்!

ஒரு நாள் எங்க வீட்டுக்கு சில விருந்தாளிங்க வந்திருந்தாங்க. அதுல சில பொடிசுகளும் உண்டு. எனக்கு கொஞ்சம் போர் அடிச்சதுனால ஒரு பொடியன கூப்பிட்டு பேச்சு கொடுத்தேன்.

நான், "டேய், இங்க வாடா!"

பொடியன், "என்ன?"

நான், "இங்க வாடா சொல்றேன்"

அவனும் கிட்ட வந்தான். கொஞ்ச நேரம் அவன் கிட்ட வழக்கம் போல, பேரு என்ன, என்ன படிக்கிற, நல்லா படிப்பியான்னு மொக்கைய பொட்டுட்டு...சரி, ஒரு கதை சொல்லுடானு கேட்டேன். அவனும் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, கதை சொல்ல ஆரமி்ச்சான்.

நான், "நல்ல காமடி கதையா சொல்லு"

பொடியன், "சரி...ஒரு ஊர்ல ஒரு ஆளு இருந்தானா. அவன் ஒரு நாள் ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தானா..."

திடீல்னு கதைய நிறுத்திட்டு பொடியன் என்கிட்ட, "'ஹும்' சொல்லுங்க..."
நான், "'ஹும்' சொல்லனுமா? எதுக்கு?"

பொடியன், "என் பாட்டி அப்படி சொல்ல சொல்லி தான் கதை சொல்லுவாங்க"
நான், "உன் பாட்டி நீ எங்க தூங்கிடப் போறியோன்னு அப்படி சொல்லி இருப்பாங்க"

பொடியன், "அதெல்லாம் இல்ல...நீங்க ஹும் சொன்னா தான் நான் கதை சொல்லுவேன்"

நான், "சரி, ஹும்"

பொடியன், "எங்க விட்டேன்?"

நான், "அதான் அந்த ஆளு ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தானே"

பொடியன், "ஆமா...அவன் ரோட்டுல நடந்து போயிட்டு இருந்தானா..."

நான், "ஹும்"

பொடியன், "அப்படியே நடந்துகிட்டே இருந்தானா..."

நான், "ஹும்"

பொடியன், "ரொம்ப தூரமா நடந்து போயிட்டு இருந்தானா"

நான், "சரி எவ்வளவு நேரம் தான் நடப்பான்...அப்புறம் சொல்லு?"

பொடியன், "அப்போ திடீல்னு ஒரு வாழபயம் தோல் மேல கால வச்சி வழுக்கி விழுந்துட்டான்" அப்படின்னு சொல்லிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறான் அந்த பொடியன்.

நான், "ஹும் அப்புறம்?"

பொடியன், "அவ்வளோதான்! நீங்களும் சிரீங்க!"

நான், "அடப்பாவி இதுக்காடா இத்தன கிலோ மீட்டர் அந்த ஆள நடக்க வச்ச?"

நான் மனசுக்குள், "உனக்கு வேனும்டா...உனக்கு வேனும். கதையா கேக்குற கதை?"


**********

என் பிரண்ட் வீட்டு மாடில ஒரு டியுஷண் சென்டர் இருந்தது. அங்க முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை உள்ள பசங்களுக்கு டியுஷன் எடுப்பாய்ங்க.

ஒரு நாள் அங்க டியுஷன் படிக்க வந்த இரண்டு குட்டி பசங்க, அவங்க கிலாஸ் மி்ஸ்ஸ பத்தி பெருமையா பேசிக்கிட்டு...இல்ல சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. என் மி்ஸ் தான் சூப்பர், என் மி்ஸ் அடிக்கவே மாட்டாங்கனு...அப்படி இப்படின்னு! என் பிரண்டு அதுல ஒரு பயன கூப்பிட்டான்.

பிரண்ட்: உன் பேரு என்னடா?

பையன்: சந்திரமொவ்லி

பிரண்ட்: எந்த ஸ்கூல்?

பையன்: அலகப்பா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்

பிரண்ட்: எந்த கிலாஸ் படிக்குற?

பையன்: 1ஸ்ட் ஸ்டாண்டர்ட்

பிரண்ட்: உங்க கிலாஸ் மி்ஸ் பேரு என்ன?

பையன்: லதா

பிரண்ட்: உங்க மி்ஸ் அழகா இருப்பாங்களா?

பையன்: ஹும்...நல்ல இருப்பாங்க!...நான் போகனும்!

பிரண்ட்: இருடா...உங்க மி்ஸ்ஸுக்கு கல்யாணம் அயிடுச்சா?

பையன்: தெரியாது!

பிரண்ட்: என்னாடா நீ...இது கூட தெரியாம இருக்க...சரி நாளைக்கு கேட்டுட்டு வறியா?

பையன்: சரி!

பிரண்ட்: என்ன போட்டு கொடுத்துடாதே உங்க மி்ஸ் கிட்ட...நான் உனக்கு சாக்லேட் வாங்கி தர்றேன். சரியா?

பையன்: ஆங்...சரி!

பிரண்ட்: ஆமா...எப்படி மி்ஸ்ஸுக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு தெரிஞ்சிப்ப?

பையன்: அதுவா...எங்க மி்ஸ்ஸோட பையன் என்கூட தான் படிக்கிறான் . . . அவன் கிட்ட கேட்டு சொல்றேன். சரி...நான் போயிட்டு வரேன் அங்கிள்!

பிரண்ட் என்கிட்ட: ஹவ்வ்வ்வ்....சாய்ச்சி புட்டாங்க மச்சான்!


***********

ஒரு நாள் என் பிரண்ட் அவன் பையன பிளே ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர போயிட்டு இருந்தான். என்ன வழியில பார்த்துட்டு என்னையும் கூட வர சொன்னான். இல்லடா நான் வரலன்னு சொன்னாலும் அவன் கேக்கவே இல்ல. சரின்னு நானும் கூட போனேன்.

ஸ்கூல் உள்ள போனோம். அப்ப தான் ஸ்கூல் விட்டு எல்லாம் வீட்டுக்கு போயிட்டிருந்தாங்க. என் பிரண்டோட பையன் வந்தான். என் பிரண்ட் உடனே அவனுக்கு 'கிவ் பைவ்' கொடுத்தான். இப்போ எல்லா சின்ன பசங்களும் இதைத்தான் செய்றாங்க. ஒன்னும் இல்ல, நம்ம இரண்டு கைய நீட்டுனா, மற்றவர் அவங்க இரண்டு கையால நம்ம கைய தட்டுவாய்ங்க. அவ்வளோதான்!

என் பிரண்டு என்னையும் 'கிவ் பைவ்' கொடுக்க சொன்னான். நானும் அப்படியே உட்காந்து, அவனுக்கு 'கிவ் பைவ்' கொடுத்தேன். கொடுத்துட்டு எழுந்து பார்த்தா, ஒரு இருபது இருபத்தைந்து பசங்க வேகமா என்ன பார்த்து ஓடி வராங்க. எனக்கு ஒன்னுமே புரியல. எல்லாரும் கிட்ட வந்த உடனே என்னன்னு கேட்டா, எல்லாருக்கும் 'கிவ் பைவ்' கொடுக்கனுமாம் நான். எல்லாம் என் பிரண்ட் பையனோட கிலாஸ் மேட்ஸாம். ஒரு பதினைந்து நிமி்ஷம், உக்காந்து எல்லாருக்கும் என் கை சிவக்க சிவக்க 'கிவ் பைவ்' கொடுத்தேன்:(

சரி எல்லாம் முடிச்சுதுன்னு நம்பி எழுந்தா, இன்னு ஒரு அஞ்சி பேரு...அவங்க ஆச தீர எங்கிட்ட 'கிவ் பைவ்' வாங்கிட்டாங்க!

இதெல்லாம் பக்கத்துல நின்னு பார்த்து என் பிரண்ட் ரசிச்சிக்கிட்டிருக்கான்! நான், "டேய் நான் தான் அப்பவே வர மாட்டேன்னு சொன்னனேடா . . . கேட்டியா? ஒரு சிங்கத்த கூட்டியாந்து, சின்னாபின்னமாக்கிட்டியேடா"

2 comments:

தமிழினி..... said...

unmaiya sollunga...andha 1st standard paiyan kitta avanga miss ah pathi kaettadhu neenga dhaaneh....Enakku therium....

Sathiya said...

நானா இருந்தாலும் அதான் கேட்டு இருப்பேன்;) ஆனா உண்மைய சொல்லனும்னா இந்த மேட்டர் மட்டும் கற்பனை.