இது என் குலோஸ் ப்ரென்ட் என் கிட்ட சொன்னது. என் ப்ரென்ட் அப்போ ஹைட்ராபாட்ல ஒரு கம்பனில வொர்க் பன்னி கிட்டு இருந்தான். அவன் கூட வொர்க் பன்ற ஒரு 3 ப்ரென்ட்ஸோட சேர்ந்து ரூம் எடுத்து தங்கி இருந்தான். அது ஒரு ப்லாட். என் ப்ரென்ட்ஸ தவிர அவங்க ரூம சுத்தி எல்லாரும் பேமி்லியொட இருந்தாங்க.
ஒரு நாள் மதியம் என் ப்ரென்டும் இன்னும் 2 பேரும் சேர்ந்து சமையல் பன்னிகிட்டு இருந்தாங்க. அன்றைக்கு எல்லோருக்கும் நைட் ஷிப்ட். பாசெலர் பசங்க ரூம்ல எப்படி இருப்பாங்கனு உங்களுக்கே தெரியும். ஒருத்தன் வெரும் டவல் கட்டி கிட்டு இருந்தான். இன்னொருத்தன் ஒரு சின்ன ஜட்டி போட்டுகிட்டு எக்ஸர்சைஸ் பன்னிகிட்டு இருந்தான். என் ப்ரென்ட் ஷார்ட்ஸ் போட்டுகிட்டு இருந்தான். இதுல வேற அவங்க கதவ எப்பவும் லாக் பன்னி வக்க மாட்டாங்க.
ஸ்டவ்ல ப்ரெஷ்ஷர் குக்கர்ல பருப்பு வேகிட்டு இருந்தது. அப்போ டிடீல்னு ஒரு பயங்கர சத்ததோட ஸ்டவ்ல இருந்த குக்கர் எகிரி கீழ வந்து விழுந்திடுச்சு. வீடெல்லாம் ஒரே புகை மன்டலமா இருந்துச்சு. நல்ல வேலையா யாருக்கும் ஒன்னும் ஆகல. இந்த சத்தம் கேட்டவுடனே அக்கம் பக்கத்து வீட்டுல இருந்து ஒரு நாலு அஞ்சு ஆண்டீஸும் அவங்க பொன்னுங்க ரெண்டு பேரும் திடு திப்புனு இவங்க வீட்டுக்குல்ல வந்துட்டாங்க. வந்தவங்க என்ன ஆச்சு என்ன ஆச்சுன்னு கேட்டுக்கிட்டே நேரா கிட்செனுக்கு போயிட்டாங்க. பசங்களுக்கு குக்கர் இப்படி ஆனத விட இவங்க எல்லோரயும் பார்த்தவுடனே பயங்கர ஷாக். பசங்க ஜட்டி/டவலோட நிக்கறத பார்த்து அந்த ரெண்டு பொன்னுங்க மட்டும் நைசா நழுவிட்டாங்க. ஆண்டீஸ் மட்டும் அங்கயே நின்னு பேசிகிட்டு இருந்தாங்க.
ஒவ்வொரு பசங்களா அப்படியே அசடு வழிஞ்ஜுகிட்டே நைசா நழுவி ரூமுக்கு போறதுக்குல்ல போதும் போதும்னு ஆகிடுச்சாம்! எல்லாம் அந்த குக்கரால வந்த வினை!
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
9 months ago
4 comments:
hey nice blg da,
but who is taht great person. Can u reply on this
he he he...naan uyiroda irukkaradhu unakku pidikkalaiya;)
sollu da vonum avadhu nanu pathakre tell na who it is???
nee parthukittu dhan iruppa...vera onnum seiyya mudiyadhu;) let's discuss it in chat.
Post a Comment