Saturday, August 25, 2007

எனது ஐயப்பாடுகள்!

1. பாவம் செய்தவர்கள் தான் இந்த பூமி்யில் மனிதனாய் வந்து பிறக்கிறார்களா? அப்படியானால் அவ்வையார் சொன்ன, "அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது" என்பது தவறா?

2. நாம் உயிர் நீத்த பின் நமது ஆத்மா எங்கு செல்கிறது? நிறைவேறாத ஆசைகளோடு இறப்பவர்களின் ஆத்மா ஆவியாக அலைவது உண்மையா? அப்படியானால் நாட்டில் முக்கால் வாசி பேர் ஆவியாகத்தான் அலைவார்கள் இல்லையா? மேலும் மற்ற உயிரினங்களின் ஆத்மாக்கள் எங்கு செல்கிறது?

3. வாயாடி, விதவை, மலடி, வேசி இதற்கெல்லாம் ஆன்பால் என்ன?

4. ஆண்டவனின் படைப்பில் அனைத்திற்கும் ஓர் அர்த்தமுண்டு. ஆயினும், மனிதனைத் தவிர மற்ற அனைத்து (பெரும்பாலும்) உயிரினங்களுக்கும் பிறவியிலேயே நீந்தத் தெரிகிறதே, ஏன்?

5. இராமாயணம் உண்மையா? அப்படியானால் இராவணனுக்கு பத்து தலை இருந்தது உண்மையா? அல்லது பத்து கிரீடமா? பத்து தலை இருந்தது உண்மையானால், அவரால் ஒரே நேரத்தில் பத்து பேரிடம் வெவ்வேறு விஷயத்தை பேச முடியுமா? அவர் தினமும் பத்து தலையில் இருக்கும் பற்களையும் துலக்குவாரா? நான் இராமாயணம் படித்ததில்லை ... தொலைக்காட்சியில் பார்த்ததுதான்;)

இப்போதைக்கு இவ்வளவுதான். இது ஒன்றும் கடினமான கேள்விகள் இல்லை என்று நினைக்கிறேன். யாராவது எனது சந்தேகங்களை கண்டிப்பாக தீர்த்து வைப்பார்கள் என்று நம்புகிறேன்.

என்ன? இதுல சில கேள்விகளை பார்த்தா சிறிப்பு வருதில்ல? ஆனா சில கேள்விகள் யோசிக்க வைக்குதில்ல? இதுக்கு பேரு தான் சிரிக்க வச்சு, சிந்திக்க வைக்கிறது;)

0 comments: