Saturday, January 26, 2008

ஊர் வம்பு!

ஏசுதாஸ்: அடுத்து யாருடைய பாட்ட ரீமிக்ஸ் பண்ண போறாங்கலாம்?
எம்.ஸ்.வி: அந்த எழவ எவன் கண்டான்?
ஏசுதாஸ்: உங்கப்பா பாட்ட கூட ரீமிக்ஸ் பண்ண போறாங்களாமே?
சிவசிதம்பரம்: ரீமிக்ஸ்ஸா... அடங்கப்பா கப்பு தாங்கல!
*****

பாலச்சந்தர்: ஏம்மா, கேஸ் எல்லாம் எப்படி போயிட்டிருக்கு?
குஸ்பூ: அத ஏன் சார் கேக்கறீங்க? இப்போவெல்லாம் நான் டாய்லெட் கூட செருப்பு போட்டுக்கிட்டு போறதில்ல.

*****

ஷங்கர்: ஸ்ரியாவ பார்த்தீங்களா? சிவாஜில கூட இப்படி காஸ்ட்யும் கொடுக்கலையே அவங்களுக்கு? மிஸ் பண்ணிட்டோமா?

*****

ரஜினி: ஆமா, கமல் உங்க பொண்ணு ஹீரோயினா நடிக்குதாமே? சொல்லவே இல்ல?
கமல்: இல்ல ரஜினி! நீங்க உங்க அடுத்த படத்துக்கு ஹீரோயின் தேடுறீங்கன்னு சொன்னாங்க. அதன் சொல்லல!
கமல்: கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ?
ரஜினி: ச்சே! தெரியாத்தனமா கேட்டுட்டோமோ?
பிரபு: கேட்டீங்களா விஷயத்த? கமல் ரஜினி ஸார நக்கல் அடிசிட்டாராம்.
கமல்: ஏதோ, தெரியாம மனசுல இருந்தத அப்படியே பேசிட்டேன். நீங்க தான் ரஜினிய சமாதானம் பண்ணனும்.
பாலச்சந்தர்: ஏதோ, தெரிஞ்சோ தெரியாமலோ உண்மைய சொல்லிட்ட. நான் பார்த்துக்குறேன், விடு!

Saturday, January 19, 2008

சிரிக்கப் படாது!

நாடு ரொம்ப கெட்டு கெடக்குதுங்க. நம்ம பய புள்ளைங்க வர வர எந்த விஷயத்தையுமே சீரியஸா எடுத்துக்கறதில்ல. எது சொன்னாலும் ஒரு நக்கலு, நய்யாண்டி, ஏகத்தாளம்...என்னத்த சொல்ல. நான் போன வாரம் வந்த சில செய்திய நண்பர்கள் கிட்ட சொன்னா நக்கலா சிரிக்கிறாங்க. எவ்வளவு சீரியஸான மேட்டர். சரி, நீங்களாச்சும் சிரிக்காம இந்த விஷயத்தை எல்லாம் கொஞ்சம் படிங்க. இதெல்லாம் போன வாரம் சில தலைவர்களால் விடப்பட்ட அறிக்கைகளில் இருந்து எடுக்கப்பட்டவை.

அதிமுக கட்சி தலைவி கூறியதில் இருந்து சில வரிகள்:

எப்போது அதிமுக ஆட்சி என் தலைமையில் மலரும் என்று மக்கள் கேட்க தொடங்கி விட்டார்கள்.
(அப்படியா. சொல்லவே இல்ல. எப்போ? என் காதுல விழவே இல்லையே?)

தற்போது, சில புதிய கட்சிகள் புற்றீசல்கள் போல வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை பற்றி எல்லாம் நாம் கவலைபட தேவையில்லை. மக்களும் அக்கட்சிகளை பற்றி பொருட்படுத்தவும் இல்லை.
(இதையும் சொல்லவே இல்ல? எங்களை பத்தி எங்களை விட உங்களுக்கு நல்லா தெரியுதுங்கோ!)

எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு 20 ஆண்டு காலம் கழித்து இன்று தான் நான் ராமாவரம் தோட்டத்திற்கு வந்திருப்பதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்திருக்கிறது. ஆனால் அத்தகைய செய்திகள் தவறு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிறகு 1995-ம் ஆண்டு நான் முதல் அமைச்சராக இருந்த போது ஜானகி அம்மாவை சந்திப்பதற்கு இந்த இல்லத்திற்கு வந்திருந்தேன். அதன் பிறகு 1996-ம் ஆண்டில் ஜானகி அம்மையார் மறைந்து விட்டார் என்ற செய்தி கேள்விபட்டதும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த நான் இங்கே வந்திருந்தேன்.
(அதான. எதுக்கு இப்படி தப்பு தாப்பா செய்தி போடறாங்களோ தெரியல. ராஸ்கோல்ஸ்! நீங்க தான் ரெகுலரா பத்து வருஷத்துக்கு ஒரு வாட்டி போயிட்டு வந்துடறீங்களே!)

சில பேர் எம்.ஜிஆர். போலவே அரசியலில் வந்துவிடலாம் என்று எண்ணி திடீர் திடீர் என்று கட்சிகளை தொடங்குகிறார்கள். இன்ஸ்டன்ட் காப்பி தயாரித்து விடலாம். இன்ஸ்டன்ட் தலைவர்களை தயாரிக்க முடியாது. இவ்வாறு முயற்சி செய்வதை பார்க்கும் போது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம் அந்த கதைதான் நினைவுக்கு வருகிறது. எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசுகள் நாம்தான். வேறு யாராவது நாங்கள் தான் எம்.ஜி.ஆர். வாரிசு என்று சொன்னால் மக்கள் எள்ளி நகையாடுவார்கள்.
(ஹா ஹா ஹா ஹா ஹா! எள்ளி நகையாடிவிட்டேன். என்ன ஒரு உவமை. நீங்க சொல்றது சரி தான். நீங்க சொல்றதுல ஒருத்தர் ஒடம்பு முழுக்க சூடு போட்ட மாதிரி தான் இருப்பார். ஆனா ரொம்ப கோவக்காரர். அநியாயம் நடக்கறத பார்த்தா பல்ல தட்டி கேப்பார். அப்படியும் ஒண்ணும் ஆகலைன்னா பேசியே சாகடிச்சிடுவார். படத்துல தாங்க.)

சிலருக்கு சில நேரங்களில் பித்தம் ஏறுவது இயற்கை. பித்தம் தலைக்கு ஏறியது தெளிய வேண்டும் என்றால் சிறிது நேரம் ஆட விடவேண்டும்.
(ஆஹா! இது வேறயா. ஆடுங்கைய்யா, ஆடுங்க)


**********************

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சொன்னதில் இருந்து சில வரிகள்:

புற்றீசல்கள் போல பெருகி வரும் கட்சிகளை கண்டு அதிமுகவினர் பயப்பட வேண்டாம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அவரின் இந்த அறிக்கையில் இருந்தே அவர் பயப்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.அவர் எம்.ஜி.ஆர். பயறை சொல்லி மக்களை ஏமாற்ற பார்க்கிறார். கருப்பு என்.ஜி.ஆர். என்று சொல்லி வருகிறார்கள். யாரும் எம்.ஜி.ஆர். ஆகி விட முடியாது. நான் சிறு வயதில் இருந்தே என்.ஜி.ஆரை முன் உதாரணமாக கொண்டு வாழ்ந்து வருகிறேன். அவர் வழியில் செயல்பட்டு, தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்பதற்கு பாடுபடுவேன்.
(முதல சொன்னது பாயிண்ட். ஆனா கடைசில நீங்களும் அவர் பேரையே சொல்றீங்களே. இன்னும் எத்தனை பேருயா இது மாதிரி கெளம்பி இருக்கீங்க?)

**********************

நடராஜன் அறிக்கையில் இருந்து சில வரிகள்:

இன்னும் 3 மாதத்தில் நீ திருந்தாவிட்டால் புதிய கட்சி தொடங்கி உன்னை சந்திப்பேன். நீ அரசியலை விட்டு விலகி ஹைதராபாத் ஓட இருந்ததை ஒரு காலத்தில் தடுத்த நான், இப்போது உன்னை எச்சரிக்கிறேன். இன்னும் 3 மாதத்தில் நீ திருந்தாவிட்டால் புதிய கட்சி தொடங்கி உன்னை சந்திப்பேன். ஆட்சியை தீர்மானிப்பது பெரும்பான்மையினர் என்பது கருணாநிதிக்குத் தெரியும் என்பதால் அவர் எச்சரிக்கையாக இருக்கிறார். நீ வீட்டை விட்டே வெளியே வர மாட்டாய். நான் மக்களோடு மக்களாக இருப்பவன்.
(அட்ரா அட்ரா! சபாஷ். சரியான போட்டி! ஆனா, நான் உங்களை மக்களோடு மக்களாக பார்த்ததே இல்லையா?)

உன்னை உருவாக்கிய எம்ஜிஆரை மறந்துவிட்டு ஜெயா டிவி, ஜெயா பிளஸ் டிவிக்களை துவங்குகிறார். விரைவில் நான் எம்ஜிஆர் டிவியை துவங்குவேன். என் தலையை அடகு வைத்தாவது அதை நடத்துவேன்.
(இது பாயிண்ட். இது இவ்வளவு நாளா எனக்கு தோனவே இல்லையே! ஆமாம். நீங்களும் கெளம்பிட்டீங்களா? அவர் ஒருத்தர் பேர வச்சு இன்னும் எத்தனை பேருயா?)
**********************
ஸ்ஸ்ஸ்...அப்பாடா...கண்ண கட்டுதே. எனக்கு எப்பவெல்லாம் மனசு சரியில்லாம இருக்கோ அப்பவெல்லாம் இந்த மாதிரி செய்திய படிச்சி மனச தேதிக்குவேன்! ஹும்!

Saturday, January 12, 2008

2007ல் எடுத்ததில் பிடித்தது - படத்தொடர்

காலைல எழுந்ததும் மெயில் செக் பண்ணா கைப்புள்ள கிட்ட இருந்து என்னோட வலைப்பதிவுக்கு பின்னூட்டம். ஆஹா ஒரு பெரியாளு வந்து நம்ம பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருக்காறேன்னு சந்தோஷமா கிளிக்கி பார்த்தா எனக்கு ஏதோ கொக்கி போட்டிருக்கேன்னு எழுதி இருந்தாரு.
அதை பார்த்ததும் வயித்துல புளிய கரைச்சிது. என்னடா நம்மள ஏதாச்சும் கதை கிதை எழுத சொல்லி இருப்பாறோன்னு பயம். நம்ம தான் எழுதுறதுல கத்து குட்டியாச்சே. இந்த சனி, ஞாயிறுல தான PIT போட்டிக்காக போட்டோ எடுக்கனும்னு
இருந்தேன். சரி என்னதான் விஷயம்னு பார்ப்போம்...எதுவும் முடியலனா, "அடி வாங்கினது நான் தான். கப் எனக்கு தான்"னு வடிவேலு மாதிரி சொல்லி சமாளிச்சிரலாம்னு முழுசா படிச்சேன். அப்பாடா... இவ்வளோதானா மேட்டர். நன்றிங்க கைப்ஸ்!

ஆமா, இதுவும் ஒண்ணும் சாதாரண விஷயம் இல்லையே. இந்த டிஜிட்டல் கேமரா கண்டுபிடிச்சாலும் பிடிச்சாங்க பக்கத்து தெரு வரைக்கும் கேமரா எடுத்துட்டு போனாலே ஒரு 50 படமாச்சும் கிளிக்கிடறேன். அதுல எங்க இருந்து ஒன்னே ஒன்ன மட்டும் செலக்ட் பண்றது. சரின்னு போன வருஷம் எடுத்த எல்லா படத்தையும் ஒரு லுக் விட்டப்புறம் தான் புரியுது, வேலை ரொம்ப சுளுவுன்னு. நான் ரொம்ப நல்லா எடுத்து இருக்கேன்னு நெனச்சிகிட்டு இருந்த படம் எல்லாம் இப்போ பார்த்தா அவ்வளவா பிடிக்கலை. கடைசியா தேறுன ஒரு ஏழு எட்டு படத்துல இதை போட்டிருக்கேன்.


இதை நான் தென் கொரியா ஊர் சுத்த போயிருந்தப்ப யதேற்சியா எடுத்தது. இதை காட்டி எல்லார் கிட்டயும், படத்த எடுத்தது பி.சி.சத்யா'னு சொல்லி அலம்பினது இன்னும் ஞாபகம் இருக்கு. கேட்டவங்களோட ரியாக்க்ஷன பார்க்கணுமே, பிரியாணியில லவங்கத்த கடிச்ச உடனே ஒரு ரியாக்க்ஷேன் கொடுப்பாங்களே அதே மாதிரி. சரி, அதெல்லாம் எதுக்கு இப்போ. இந்த மாதிரி படம் எல்லாம் என்னாலயும் எடுக்க முடியும்னு எனக்கு காட்டுன படம். சுத்தி வெளிச்சமா இருந்த போதும், எங்கயோ தூர தெரிஞ்ச இந்த சூரிய அஸ்தமனத்தை Canon S3-IS மூலம் 10x zoomல் எடுத்தது. 2007ல் என் மனம் கவர்ந்த படம் இதுதான்.

சரி. இப்போ மூணு பேருக்கு கொக்கி போடணும். யார் யாருக்கு எல்லாம் ஏற்கனவே கொக்கி போட்டாச்சு, இதை ஆரமிச்சது யாருன்னு பார்க்கலாம்னு பார்த்தா போயிட்டே இருக்கு. தலை, கால் கண்டுபிடிக்க முடியல. எனக்கு தெரிஞ்சவங்கள்ல இவங்களுக்கு கொக்கி போடறேன்:
இவங்களுக்கு ஏற்கனவே கொக்கி போட்டாசான்னு தெரியல. (அதை கண்டு பிடிக்க ஏதாச்சும் வழி இருக்கா?)

PIT போட்டி ஜனவரி 2008

நான் தான் முதல்ல...
குத்துங்க எஜமான் குத்துங்க...
பார்க்க நல்லா தான் இருக்கும், வந்து தொங்கி பாரு எங்க கஷ்டம் புரியும்...
குழலூதும்...
வந்தே மாதரம்!
அடப்பாவி வாயில போடுவேன்னு பார்த்தா இப்படி கீழ போட்டு உருட்டுறியேடா?

Monday, January 7, 2008

தாரே சமீன் பர் (Taare Zameen Par) திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: ஆமிர் கான் (Aamir Khan), தர்ஷீல் ஸாபரி (Darsheel Safary), திஸ்கா சோப்ரா (Tisca Chopra)
இயக்குனர்: ஆமிர் கான் (Aamir Khan)
இசை: ஷங்கர் மஹாதேவன் (Shankar Mahadevan), ஏசான் நூராணி (Ehsaan Noorani), லாய் மென்டான்ஸா (Loy Mendonsa)
கதை: அமோல் குப்டே (Amole Gupte)
எடிட்டிங்: தீபா பாடியா (Deepa Bhatia)
ஒளிப்பதிவு: சேது (Setu)
தயாரிப்பு: ஆமிர் கான் (Aamir Khan)
இணை தயாரிப்பு: அஜய் பிஜ்லி (Ajay Bijli) & சஞ்சீவ் கே. பிஜ்லி (Sanjeev K. Bijli)


நட்சத்திரங்கள் பூமியில்(Taare Zameen Par)...என்ன ஒரு அழகான தலைப்பு. அதற்கு ஏற்ப மிக அழகான ஒரு படத்தை நமக்கு தந்திருக்கிறார் ஆமிர் கான். இது அவருடைய முதல் இயக்கம் என்பது சொன்னால் தான் தெரியும். அந்த அளவுக்கு அருமையாக எடுத்திருக்கிறார் படத்தை. இப்படம் குழந்தைகள் படம் மட்டும் அல்ல, முக்கியமாக எல்லா பெற்றோர்களும், ஆசிரியர்களும் பார்க்க வேண்டிய படம்.

படத்தின் கதாநாயகன் ஆமிர் கான் அல்ல, குழந்தை நட்சத்திரமாக வரும் தர்ஷீல் ஸாபரி தான் இப்படத்தின் கதாநாயகன். ஆமிர் கானையே தன் நடிப்பால் மிஞ்சி விட்டான் இந்த சிறுவன். இச்சிறுவனை பற்றி தான் இப்படத்தின் கதையே. ஆமிர் கான் படத்தின் பாதியில் தான் அறிமுகம் ஆகிறார். இச்சிறுவன் டிஸ்லெக்ஸ்யா (dyslexia) என்ற ஒரு விதமான இயலாமையால் பாதிக்கப்படுகிறான். எழுத்துக்களை அறிவதிலும், படிப்பதிலும் ஏற்படும் சிரமமே டிஸ்லெக்ஸ்யா. உதாரணத்துக்கு "b/d" "w/m" போன்று ஒரே மாதிரியாக தோன்றும் எழுத்துக்களை பார்க்கும் பொழுது குழப்பம் ஏற்படும். எழுத்துக்களை மாற்றி மாற்றி எழுதி விடுவர்.


இதனால் மூன்றாம் வகுப்பு படிக்கும் இச்சிறுவனால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகிறது. அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைகிறான். பாடங்களில் மட்டுமே இவன் இப்படி, ஆனால் ஓவியம் வரைவதில் இவன் தன் வயதிற்கு மிஞ்சிய ஆற்றல் கொண்டவன். இவனது சிரமம் தெரியாத ஆசிரியர்களும், பெற்றோர்களும் இவனை எவ்வளவோ கண்டித்து பார்த்தும் ஒரு முன்னேற்றமும் இல்லாததால் இவனை போர்டிங் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். விருப்பமில்லாமல் போர்டிங் பள்ளியில் சேரும் அச்சிறுவனின் பிரச்சனை இன்னும் அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் அவன் யாரிடமும் பேசுவதையே நிறுத்தி விடுகிறான், தன் பெற்றோரிடம் கூட. இந்நிலையில் தான் ஆமிர் கான் கலை ஆசிரியராக அந்த பள்ளிக்கு வருகிறார். இச்சிறுவனின் பிரச்சனையை தெரிந்து கொண்டு அதை தீர்த்து வைக்க போராடுகிறார். இதுவே படத்தின் கதை.

தவமாய் தவமிருந்து படத்தை யாரெல்லாம் அழுது கொண்டே பார்த்தீர்களோ அவங்கெல்லாம் இந்த படத்தை பார்க்க செல்லும் பொழுது மறக்காம கைக்குட்டையை எடுத்து செல்லவும். ரொம்ப தேவைப்படும். ஒவ்வொரு நெஞ்சை நக்குற காட்சியிலும் பக்கத்துல உக்கார்ந்து இருக்கவங்களுக்கு தெரியாம கைக்குட்டையை எடுத்து கண்ணை துடைச்சிட்டு வைக்கறதுக்குள்ள...அப்பப்பா போதும் போதும்னு ஆயிடுது. இதுல முக்கியமா அந்த சிறுவனுடைய அப்பா, அம்மா பாத்திரங்களை சொல்லியே ஆக வேண்டும். ரெண்டு பேரும் ரொம்ப நல்லா நடிச்சிருக்காங்க. இவங்க ரெண்டு பேர் கேரக்டர பார்க்கும் பொழுது எல்லாருக்கும் அவங்க அவங்க அப்பா அம்மா ஞாபகம் வருவாங்க. படம் கொஞ்சம் மெதுவா தான் போது. ஆனாலும் நல்லா இருக்கு. அசுதோஷ் கௌரிகர்(Ashutosh Gowrikar - லகான் & ஸ்வதேஸ்) ஸ்டைல் கொஞ்சம் படத்துல தெரியுது. படத்தில் சில காட்சிகளில் மிக அழகாக அனிமேஷன் செய்து குழந்தைகளை கவரும் வண்ணம் வித்யாசமாக காட்டியிருக்கிறார்கள். இந்த படம் மெதுவாக பிக் அப் ஆகி சூப்பர் ஹிட் ஆகும்.

படத்தின் பாடல்கள் எல்லாம் மிக அருமை. நம்ம ஷங்கர் மஹாதேவன் "மா"(ஹிந்தி 'அம்மா') என்று ஒரு பாடல் பாடி இருக்கிறார். அதை கண்டிப்பா கேளுங்க. பாட்டும் அருமை, பாட்டின் வரிகளும், கருத்தும் அதை விட அருமை. இந்த படத்துல சொல்லி இருக்கற விஷயம் (Dyslexia) இதுக்கு முன்னாடி நானே கேள்வி பட்டதில்லை. நூத்துல பத்து சதவீதம் பேருக்கு இந்த மாதிரி பிரச்சனை இருக்குமாம். அதனால எல்லாரும் இதை பத்தி தெரிஞ்சிகிட்டா நல்லது.

நம் வீடுகளில் தினசரி நடக்கும் விஷயங்களைக் கொண்டு, நம் உணர்வுகளை தூண்டும் அளவிற்கு மிக அழகாக யதார்த்தமாக எடுக்க பட்டிருக்கும் இப்படத்தை கண்டிப்பா பாருங்க. ஆமிர் கானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!