காலைல எழுந்ததும் மெயில் செக் பண்ணா கைப்புள்ள கிட்ட இருந்து என்னோட வலைப்பதிவுக்கு பின்னூட்டம். ஆஹா ஒரு பெரியாளு வந்து நம்ம பதிவுக்கு பின்னூட்டம் போட்டிருக்காறேன்னு சந்தோஷமா கிளிக்கி பார்த்தா எனக்கு ஏதோ கொக்கி போட்டிருக்கேன்னு எழுதி இருந்தாரு.
அதை பார்த்ததும் வயித்துல புளிய கரைச்சிது. என்னடா நம்மள ஏதாச்சும் கதை கிதை எழுத சொல்லி இருப்பாறோன்னு பயம். நம்ம தான் எழுதுறதுல கத்து குட்டியாச்சே. இந்த சனி, ஞாயிறுல தான PIT போட்டிக்காக போட்டோ எடுக்கனும்னு இருந்தேன். சரி என்னதான் விஷயம்னு பார்ப்போம்...எதுவும் முடியலனா, "அடி வாங்கினது நான் தான். கப் எனக்கு தான்"னு வடிவேலு மாதிரி சொல்லி சமாளிச்சிரலாம்னு முழுசா படிச்சேன். அப்பாடா... இவ்வளோதானா மேட்டர். நன்றிங்க கைப்ஸ்!
ஆமா, இதுவும் ஒண்ணும் சாதாரண விஷயம் இல்லையே. இந்த டிஜிட்டல் கேமரா கண்டுபிடிச்சாலும் பிடிச்சாங்க பக்கத்து தெரு வரைக்கும் கேமரா எடுத்துட்டு போனாலே ஒரு 50 படமாச்சும் கிளிக்கிடறேன். அதுல எங்க இருந்து ஒன்னே ஒன்ன மட்டும் செலக்ட் பண்றது. சரின்னு போன வருஷம் எடுத்த எல்லா படத்தையும் ஒரு லுக் விட்டப்புறம் தான் புரியுது, வேலை ரொம்ப சுளுவுன்னு. நான் ரொம்ப நல்லா எடுத்து இருக்கேன்னு நெனச்சிகிட்டு இருந்த படம் எல்லாம் இப்போ பார்த்தா அவ்வளவா பிடிக்கலை. கடைசியா தேறுன ஒரு ஏழு எட்டு படத்துல இதை போட்டிருக்கேன்.
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
10 months ago
8 comments:
இன்னும் கொக்கி போடவில்லை!!! ஆமா பெரிய ஆளுங்க எல்லாம் இதை பற்றி போஸ்ட் போடும் பொழுது நான் எதைங்க போடுவது? அவ்வ்வ்வ்வ்வ்
சில்ஹுவெட் படங்கள்னா எனக்கும் ரொம்ப பிடிக்கும். இந்தப் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு...பி.சி.சத்யா எஃபெக்ட் இருக்கு :)
//பிரியாணில் இருந்த லவங்கத்தைக் கடிச்ச மாதிரி//
எப்படிங்க இந்த மாதிரில்லாம் உவமை எல்லாம் குடுக்கறீங்க? :)))
கலக்கல்ஸ்
:)
சில்ஹுவெட் படங்கள்னா எனக்கும் ரொம்ப பிடிக்கும். இந்தப் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு...பி.சி.சத்யா எஃபெக்ட் இருக்கு :)
//பிரியாணில் இருந்த லவங்கத்தைக் கடிச்ச மாதிரி//
எப்படிங்க இந்த மாதிரில்லாம் உவமை எல்லாம் குடுக்கறீங்க? :)))
கலக்கல்ஸ்
:)
--குசும்பன்--
நீங்க போட்டிக்கு அனுப்பியிருக்கிற ரெண்டு படம் போதுமே....நீங்களும் பெரிய ஆளு தான்;)
--கைப்புள்ள--
நன்றிங்க கைப்ஸ்! உவமை எல்லாம் ஏதோ பிளோவுல வந்தது;)
உங்க கொக்கியை ஜனவரி போட்டோ போட்டிக்கு அனுப்பும் போதுதான் பார்த்தேன்.நாட்டாமைகள் கொடுக்கிற வீட்டு வேலையே முடியறதில்லீங்க!இருந்தும் உங்க கொக்கி அழைப்புக்கு நன்றி.நேரம் கிடைக்கும் போது மீண்டும் வருகிறேன்.
கண்டிப்பா வாங்க நட்டு!
விடியலை நேர்லயே பார்த்த மாதிரி இருக்கு சத்யா....நல்லா தான் படம் எடுத்துருகீங்க....
நன்றி தமிழினி. இது விடியல் இல்லை அஸ்தமனம்;) நீங்க சொன்னதுக்கப்புறம் தான் யோசிச்சி பார்க்கிறேன், ரெண்டுத்துக்கும் பெருசா வித்யாசம் இல்லை!
Post a Comment