Sunday, February 24, 2008

ஜோதா அக்பர் திரைப்பட விமர்சனம்!













நடிகர்கள்: ஹ்ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய்
இயக்குனர்: அஷுடோஷ் கோவாரிகர்
தயாரிப்பு: ரோன்னி ஸ்க்ருவாலா, அஷுடோஷ் கோவாரிகர்
கதை: ஹைதர் அலி
இசை: ஏ. ஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு: கிரண் தியோஹன்ஸ்
எடிட்டிங்: பல்லு சலுஜா

வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு எப்படி ஒரு சிவாஜி கணேசனோ அது மாதிரி அக்பருக்கு ஒரு ஹ்ரித்திக் ரோஷன்னு சொல்லலாம். சிவாஜி பேசிய அளவுக்கு நீண்ட வசனங்கள் இல்லை என்றாலும் கூட அக்பர் இப்படி தான் இருந்திருப்பார் என்று கண்டிப்பாக நம்பும் படியாக கன கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இனி அக்பர் என்றாலே எனக்கு ஹ்ரித்திக் தான் ஞாபத்துக்கு வருவார்.

எப்போதுமே இந்த மாதிரி சரித்திர படங்களை எதுப்பது ஒரு பெரிய ரிஸ்க். இந்த படத்தை அஷுடோஷ் கோவாரிகர் எடுக்க போறாருன்னு கேள்வி பட்டவுடனே எங்க படம் ஊத்திக்க போகுதோன்னு ரொம்ப கவலை பட்டேன். படம் வெளியாகி ஓரளவுக்கு நல்லா ஓடுதுன்னு தெரிஞ்சவுடனே தான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஏன்னா நான் கோவாரிகரோட மிகப்பெரிய விசிறி. அவர் படம் எடுக்குற உத்தி எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப யதார்த்தமா எடுப்பார். இந்த படமும் அப்படிதான். ஆனா ரொம்ப பிரமாண்டமா எடுத்திருக்கார். நம்ம நாட்டுலையும் இந்த மாதிரி ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்கறாங்களேனு ரொம்ப பெருமையா இருக்கு. படத்துல வர போர் கட்சிகளை எல்லாம் பார்த்து அசந்து போயிட்டேன்.

எனக்கு ஹ்ரித்திக் ரோஷனுடைய நடிப்பு பெருசா ஒண்ணும் பிடிக்காது. அவருடைய படம் சிலது நல்லா இருக்கும், ஆள் நல்லா நடனம் ஆடுவார். அவ்வளோதான் அவரை பற்றி என்னுடைய அபிப்பிராயம். ஆனா இந்த படத்துல அவர் பின்னி பிடல் எடுத்துட்டார். அப்படியே அக்பராகவே வாழ்ந்து இருக்கார். இதுல கோவாரிகருடைய பங்கும் இருக்கும்னு நினைக்கிறேன். ஐஸ்வர்யா ராயும் ஜோதா பாத்திரத்தில் நல்லா பொருந்தி இருக்கார். அவருடைய பாத்திரத்தை அறிந்து அழகாக செய்திருக்கிறார்.

அக்பர் ஹிந்துஸ்தானை முழுவதுமாக முகலாயர்கள் ஆள வேண்டும் என்ற தன் முன்னோர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக முயற்சி செய்கிறார். அந்த முயற்சியின் ஒரு பங்காக தான் அவர் ஜோதாவை திருமணம் செய்து கொள்கிறார். ஜோதா ராஜ்புட் வம்சத்தை சேர்ந்தவள். அவர் ஒரு ஹிந்து, அதிலும் சுத்த சைவம். இவர்களின் திருமணம், அதில் எழும் பிரச்சனை, திருமணத்திற்கு பின் இவர்களுக்குள் உதிக்கும் காதல், உள்நாட்டு சதி, அக்பரின் ஆட்சி திறன், அவர் நல்லாட்சி செய்ய எடுத்து கொண்ட முயற்சி என அனைத்தையும் மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.

"அக்பர் தி கிரேட்" பேரை கேட்டாலே ஒரு கம்பீரம் தெரியுது இல்ல. அதை இந்த படத்துல பார்க்கலாம். படத்துல வர நிறைய விஷயங்கள் சின்ன வயசுல ஹிஸ்ட்ரி புத்தகத்துல படிச்சதெல்லாம் ஞாபகப்படுத்துது. இந்த மாதிரி நாலு படம் பார்த்தா போதும் புத்தகத்தையே படிக்க வேண்டாம். படத்துல ஒளிப்பதிவும், இசையும் பிரமாதம். ஒளிப்பதிவு நான் முன்னமே சொன்ன மாதிரி ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு. இசையை பத்தி சொல்லவே வேண்டாம். ஏ. ஆர். ரஹ்மான் திரும்பவும் அவர் ஒரு ஜீநியஸ்னு நிரூபிச்சிருக்கார். பாட்டெல்லாம் அப்படியே மெய் சிலிர்க்க வைக்குது. இதை படிக்கும் போது என் வலைப்பூவில் ஒலிக்கும் இசையும் இந்த படத்தில் வருவது தான். ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கோவாரிகருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க்-அவுட் ஆகுது. இவர்கள் இணைந்து செய்த மூன்று படத்திலும் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்.

படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கு. அஷுடோஷ் இந்த மாதிரி எப்பவுமே நல்ல படங்களா எடுக்கனும்னு நான் மனதார வாழ்த்துகிறேன்!

Friday, February 22, 2008

ஆன்சைட் டிராவல்

ஆன்சைட் டிராவல்னாலே எல்லாரும் ரொம்ப ஆவலா இருப்போம். எப்படா நம்மள அனுப்புவாங்கலோனு காத்துகினு இருப்போம். ஆனா எங்க டீம்ல அப்படி இல்லைங்க. எங்கடா நம்மள ஆன்சைட் அனுப்பிட போறாங்கலோனு பயந்துகிட்டே இருப்பாங்க. எதுக்குன்னு பாக்கறீங்களா? வேற ஒண்ணும் இல்ல, ஆன்சைட்னாலே அது சப்போர்ட் வேலைக்காக தான் இருக்கும். சப்போர்ட் வேலைன்னா சும்மா இல்ல பென்ட் கயண்டிடும். காத்தால ஏழு மணிக்கு போனா நைட் எட்டு மணி வரைக்கும் வேலை பார்க்கணும். அதுவும் இந்த டிரேடிங் பன்றவங்களுக்கு மத்தில. இது தெரியாம ஒருத்தன் புதுசா வந்து எங்க டீம்ல சேர்ந்தான்.

அவன் சேர்ந்த கொஞ்ச நாள்ல ஆன்சைட் வாய்ப்பு வந்தது. ஏற்கனவே போயிட்டு வந்த இரண்டு பேர்ல ஒருத்தர அனுப்பலாம்னு கேட்டாங்க. முதலாம் நபர், "நான் இப்போ தான போயிட்டு வந்தேன். நீ போயிட்டு வாயேன்னு" இரண்டாம் நபரை பார்த்து சொன்னார். இரண்டாம் நபர், "நான் தான் ஏற்கனவே போயிருக்கேனே. இவரு போயிட்டு வரட்டுமே. ஒரு நல்ல அனுபவமா இருக்கும்" அப்படீன்னு புதுசா சேர்ந்தவரை பார்த்து சொன்னார். புதுசா வந்து சேர்ந்தவருக்கு தலை கால் புரியல. என்னடா இவங்க எல்லாம் இவ்வளோ நல்லவங்களா இருக்காய்ங்க. தனக்கு வந்த வாய்ப்ப இப்படி நமக்கு விட்டு தராங்களேனு ஒரே வியப்பு அவருக்கு. இவ்வளவு நல்லவங்கள நான் பார்த்ததே இல்லையே, 'கிரி' வடிவேலுவ இவங்க மிஞ்சிட்டாங்கனு அவரு நெனச்சது அவரு முகத்துல தெரிஞ்சது.

ரொம்ப சந்தோஷமா சரின்னு தலை ஆட்டுன அவர் எல்லாருக்கும் தன் நன்றியை வாரி இறைச்சார். எஸ்கேப் ஆன இரண்டு பேரும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிச்சிகிட்டாங்க. அப்பாடா எப்படியோ எஸ்கேப் ஆகிட்டோம்னு நெனச்சிகிட்டாங்க. அந்த புது நபர ஊர், ஹோட்டல், அலுவலகம், ஊர் சுத்தும் இடம் எல்லாத்தை பத்தியும் சொல்லி ரொம்ப ஜாக்கிரதையா பலி ஆட்டுக்கு நல்லா தீனிய போட்டு ரெடி பண்ற மாதிரி ரெடி பண்ணி அனுப்பினாங்க. அவரும் ரொம்ப கெத்தா இந்த மாதிரி கெளம்பி போனாரு:


இரண்டு வாரமா அவரு கிட்ட இருந்து ஒரு போன் கால் கூட வரல. இரண்டு வாரம் கழிச்சி மனுஷன் திரும்பி வந்தாரு. எப்படி வந்தாரு தெரியுமா? இப்படி தான், அந்த கொடுமைய நீங்களே பாருங்க!


என்ன என்ஜாய் பண்ணீங்களா? ட்ரிப் எப்படி இருந்ததுன்னு எல்லாரும் கேட்டதுக்கு ஒண்ணும் பேசாம இப்படி ஒரு முறை முறைச்சாரு:

எங்க எல்லாருக்கும் சிப்பு தாங்கல. சாரி பார் தி பிரேக்னு சொல்லிட்டு ஆணிய பிடுங்க ஆரமிசிட்டோம். இவரை சிபாரிசு செய்த அந்த இரண்டு பேரையும் மேலயும், கீழயும் ஒரு லுக் விட்டார். "கடைசீல என்ன 'கிரி' வடிவேலு மாதிரி ஆக்கிட்டீங்கலேடான்னு" அவரு இப்போ நெனக்கிறது நல்லா தெரியுது;)

துணுக்கு மூட்டை

விஜயகாந்த் தனது கட்சிக்காக புதுசா டிவி சானல் தொடங்க போறாராம். என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சிகிட்டிருக்காறாம். அதுக்கு எதுக்கு ரோசனை? 'கேப்டன்' டிவின்னு ஆரமிச்சிட வேண்டியதுதானே? இதுதவிர முழுக்க முழுக்க அரசியல்மயமான பத்திரிக்கையையும் அவர் தொடாங்கவிருக்கிறாராம். அப்போ காமெடி பத்திரிக்கையா? ஹையா;)


*****

நம்ம அமீர் எதுத்த பருத்தி வீரன் படத்தோட புகழ் உலகம் முழுசா பரவுதுங்க. ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் 58-வது சர்வதேச படவிழாவில் திரையிட இந்தியாவில் இருந்து பருத்தி வீரன் படமும் ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படமும் தேர்வாகி இருக்காம். பருத்தி வீரன் சரி, அது எப்படி ஓம் சாந்தி ஓம் படத்த தேர்வு பண்ணாங்க? அது முழுக்க முழுக்க மசாலா படம். தாரே சமீன் பர் மாதிரி நல்ல படம் எல்லாம் இருக்கும் போது இதை போய் தேர்வு பண்ணி இருக்காங்க? அடக் கடவுளே!

*****
இந்த செய்திய படிச்சதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. "இந்தி நடிகர் ஷாருக்கான், கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரின் தபால் தலைகள் வெளியிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது." அடப்பாவிங்களா? என்ன இப்படி இறங்கிட்டீங்க? டெண்டுல்கர் சரி, சானியா நேத்து பெய்த மழைல இன்னைக்கு முளைச்ச காளான் - சாதிக்க இன்னும் நிறைய இருக்கு, ஷாருக்கான் எனக்கு தெரிஞ்சி ஒண்ணுமே செய்யல நாட்டுக்கு. போற போக்குல விஜய்க்கு 'தமிழன்' படத்துல தபால் தலை வெளியிடுவாங்களே அது நிறைவேறிடும் போல;)

*****

என் அலுவலகத்துல கூட வேலை பார்க்குற நண்பர் ஒருத்தர் விழுந்து விழுந்து வேலை பார்ப்பார். எப்போ அவருக்கு மீட்டிங் ரிக்குவெஸ்ட் போடலாம்னு பார்த்தாலும் அவர் காலண்டர் பிசியாவே இருக்கும். பயங்கரமா வேலை செய்யறார் போலன்னு நாங்களும் நெனசிப்போம். ஒரு தடவை அவர் அவரது கணினியை லாக் பண்ணாம எங்கேயோ போயிருந்தார். அப்போன்னு பார்த்து ஒரு மீட்டிங் ரிமைன்டர் கிளிங்னு சத்ததோட அவர் கணினியில இருந்து வந்தது. நானும் ஏதாச்சும் முக்கியமான மீட்டிங் இருக்க போகுதுன்னு உடனே எழுந்து போயி பார்த்தா, இதாங்க அந்த மீட்டிங் ரிக்குவெஸ்ட், "India Times + Rediff Newspaper". இந்த கொடுமைய எங்கிட்டு போயி சொல்ல?

Friday, February 8, 2008

வட்டம் - பிப்ரவரி 2008 PIT புகைப்படப் போட்டி

வெங்காயத்துலையும் வட்டம் கீதுங்க...
புல்லாங்குழலில் ஒளி வட்டம்...
இவைகள் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டவை.

Sunday, February 3, 2008

விஜயகாந்த்-மைக்கேல் ஜாக்சன் ரீமிக்ஸ்!

இது என்னோட இரண்டாவது ரீமிக்ஸ். இதுல கேப்டன் விஜயகாந்த் மைக்கேல் ஜாக்சனின் Dangerous பாட்டுக்கு ஆடியிருக்கார். பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.



இதனுடைய youtube லிங்க்: http://www.youtube.com/watch?v=Gggr-H7eyLM

Saturday, February 2, 2008

செய்திகள் வாசிப்பது வடக்குபட்டு ராமசாமி!

இந்த செய்தி என்ன ரொம்பவே டச் பண்ணிடுச்சு. இடுக்கியில் இந்த வாரம் ஒரு தலைமை ஆசிரியை தனது பள்ளிக்கூடத்தில் பணம் திருடிய மாணவனை திருத்துவதற்காக தனக்கு தானே பிரம்படி கொடுத்துக்கொண்டாராம். திருடியவர் தனது குற்றத்தை ஒப்பு கொண்டு பணத்தை திருப்பி கொடுத்து விட வேண்டும் என்று இவர் அன்போடு கேட்டும் எந்த பலனும் இல்லை. உடனே பியூனிடம் ஒரு பிரம்பை கொண்டு வர உத்தரவிட்டார். 'யாருக்கு அடி விழா போகிறதோ?' என்று மாணவர்கள் நடுங்கியபடி இருக்க, இவர் தன்னை தானே அடிக்க ஆரம்பித்தார். மற்ற ஆசிரியர்களும் மாணவர்களும் தடுக்க முயன்றும் அவர் கேட்கவில்லை.

சிறிது நேரத்திற்கு பின் அந்த பணத்தை திருடிய மாணவன் கண்ணீர் விட்டு அழுத படி முன்னே வந்து, "என்னை மன்னித்து விடுங்கள் டீச்சர். நான் தன் பணத்தை திருடினேன். நான் திருந்தி விட்டேன். இனி இது போல் தப்பு செய்ய மாட்டேன்" என்று கூறினானாம். ஆசிரியை மீனாட்சி குட்டி அம்மா அந்த மாணவனை மன்னித்து அனுப்பி வைத்தாராம்.

இதை விட ஒரு சிறந்த தண்டனை அந்த மாணவருக்கு கொடுக்க முடியுமா? இனி அவன் திருடுவதை பற்றி கனவு கூட காண மாட்டான். மீனாட்சி குட்டி அம்மா 25 ஆண்டுகளாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறாராம். ஆனால் இது வரை அவர் யாரையும் அடித்ததில்லயாம். என் சார்பில் இந்த ஆசிரியைக்கு ஒரு ஓஓஓஓஒ போடறேன்!


*****

"இசைஞானி இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருதினை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாரத ரத்னா விருதை வைத்து பல சர்ச்சைகள் சமீபத்தில் உருவாகின. வாஜ்பாய் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை பலருடைய பெயர்களும் இந்த விருதுக்காக பலரால் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால், 2007ம் ஆண்டுக்கான பாரத ரத்னாவை யாருக்கும் வழங்குவதில்லை என்று மத்திய அரசு முடிவெடுத்துவிட்டது."

அப்பாடா! விட்டா ராமர் பாலம், காவேரி பிரச்சனை மாதிரி இதையும் அரசியல் ஆக்கிட்டிருப்பாங்க. பாரத ரத்னா விருதுக்கு ஒரு மரியாதையே இல்லாம போச்சு (நான் நம்ம இளையராஜாவ சொல்லலீங்க). என்ன கேட்டா நம்ம இளைய தளபதி டாக்டர் விஜய்க்கு தான் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்;)

*****

"சினிமாவில் புகை பிடிக்கும் காட்சியில் நடிக்க கூடாது என்று மத்திய மந்திரி அன்புமணி விடுத்த வேண்டுகோளை நடிகர் ஷாருக்கான் நிராகரித்துள்ளார். சினிமா துறையினருக்கு படைப்பு சுதந்திரம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்."

புகை பிடிக்கிறதுல என்ன படைப்பு சுதந்திரம்? இவரு என்னத்த கிங் ஹாப் பாலிவுட்டோ?

*****

"பொய் வழக்கு போடப்பட்டது தி.மு.க. ஆட்சி காலத்திலா அல்லது அ.தி.மு.க. ஆட்சி காலத்திலா என்பது குறித்து சட்டசபையில் காரசார வாக்குவாதம் நடைபெற்றது."

அட்ரா, அட்ரா...இந்த மாதிரி உண்மை உங்க வாயில இருந்தே வெளியே வந்தா சர்தான்!

*****

"சிவாஜி பட விழாவில் நடிகை ஷ்ரேயா அணிந்து வந்தா ஆபாச உடை விவகாரத்தை நேற்று சட்டசபையில் பா.ம.க. உறுப்பினர் வேல்முருகன் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆற்காடு வீராசாமி நடிகைகள் எப்படி உடை அணிய வேண்டும் என்று சட்டம் கொண்டுவர முடியாது என்றார்."

ஆஹா! சட்ட சபையில பேச வேண்டிய ரொம்ப முக்கியமான பிரச்சனை இது தாங்க. எல்லாரும் என்னன்னவோ யோசிச்சிகிட்டிருக்கப்ப இவரு மட்டும் எதை பத்தி யோசிச்சிகிட்டிருக்காருன்னு பாருங்க?

*****

ராமர் பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்தது. நீதிபதிகள் "ஒரே விஷயத்தில் எத்தனை மனுக்கள்தான் தாக்கல் செய்வீர்கள்?" என்று கேட்டனர். மேலும், "சேது சமுத்திர திட்டத்துக்கு 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் கழித்து ஒரு மக்கள் பிரதிநிதி வழக்கு போடுகிறார். அந்த அமைப்பை யாரும் பார்த்து இல்லை. அதை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது பற்றி யாரும் சிந்திக்கவில்லை. இந்த நிலையில் அவரிடம் இருந்து இந்த கோரிக்கை வந்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நீதிபதிகள் கருத்தை கேட்ட வக்கீல் குரு கிருஷ்ண குமார், "ராமர் பாலத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும்" என்ற கோரிக்கையை வாபஸ் பெறுவதாக கூறினார்.

இவங்க பண்ற காமெடிக்கு அளவே இல்லாம போச்சுய்யா. நீதிபதிகள் ஆச்சரிய படர அளவிற்கு இதுல ஒண்ணுமில்லையே? இதெல்லாம் அவங்களுக்கு ஜகஜம் தானே! இவங்க எப்பவுமே இப்படி தான் எஜமான்!