அது என்னமோ தெரியல, சிறு வயதிலிருந்தே நமக்கு சண்டை என்றால் மி்கவும் பிடித்துவிடுகிறது. நான் கூட எனது பள்ளிப் பருவத்தில் படம் பார்க்கும் பொழுது, முதலில் "சன்டைப் பயிற்சி" என்று டைட்டிலில் வருகிறதா என்று பார்த்துவிட்டு தான் படத்தையே பார்ப்பேன். அதிலும் தேவர் பிலிம்ஸ் என்றால் சொல்லவே வேண்டாம்.
படம் பார்த்து விட்டு என் அப்பாவிடம் சென்று, எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் சண்டை வச்சா யாருப்பா ஜெயிப்பான்னு கேட்டு வாங்கி கட்டிப்பேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் நமக்கு இந்த சண்டை பிடிக்கிறதா? கண்டிப்பாக இல்லை. நிஜ வாழ்க்கையில் நாம் எல்லாம் கைப்புள்ள(வின்னர் பட வடிவேலு) மாதிரி தான். ஒரு சண்டை நடந்தால் அதை நின்று பார்க்கும் பொழுதே நமக்கு அல்லு விட்ரும்(பயம் வந்துவிடும்). இருந்தாலும் அந்த பயத்தை வெளியே காட்டிக்கொள்ள மாட்டோம். ஒத்துக்கறேன், பயத்தை வெளியே காட்டாதவன் தான் வீரன் ஆனால் களத்தில் இறங்க மாவீரனாக இருக்க வேண்டும்.
இப்படித்தான் எங்களுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் கோபால். அப்படியே கைப்புள்ள வடிவேலு மாதிரி. ஏதாச்சும் சண்டையைப் பார்த்தால் உடனே எங்களிடம் சப்ப பஸங்க டா மச்சி, சும்மானா பிலிம் காட்டுராய்ங்கனு சொல்லுவான். அடிக்கடி எங்களிடம் இது மாதிரி அடிதடி கதையா சொல்லுவான். எனக்கு அவன தெரியும் இவன தெரியும், பசங்க கிட்ட சொன்னா அவன பிரிச்சி மேய்ந்துடுவாங்கனு ஒரே பந்தா பண்ணுவான். நாங்களும் இத நம்பி அவன் கூட ஸ்கூல்ல சுத்தும் போது எல்லாம் கொஞ்சம் தெணாவெட்டா சுத்துவோம்.
ஒரு நாள் ஸ்கூல் முடிந்து நானும் எனது மற்றொரு நண்பனும் டியுஷன் சென்று கொண்டிருந்தோம். அப்பொழுது மணி சுமார் ஏழு இருக்கும். சற்று இருட்டி இருந்தது. டியுஷன் சென்டருக்கு சற்று அருகில் இருவர் எங்களை வழி மறித்தனர். அதில் ஒருவன் எங்களுடன் டியுஷன் படிப்பவன் வேற ஸ்கூல், ஆனால் எங்களை விட சீனியர். அவனுடன் வந்திருந்தவன் அந்த ஏரியா சிறிய ரவுடிகளில் ஒருவன்.
சீனியர்: என்னங்கடா தீபாவ ரொம்ப கலாய்க்கிறீங்க போல?
நான்: எந்த தீபாங்க?
சீனியர்: தெரியாத மாதிரி நடிக்காத டா. அதான் உங்க கிலாஸ் படிக்குதே, அந்த தீபா.
என் நண்பன்: அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க!
ரவுடி: என்னடா இல்ல? அவ கிட்ட கொஞ்சம் அளவோட வச்சுக்குங்க, ஏன்னா தீபா இவன் ஆளு.
நான்: இது தீபாக்கு தெரியுமுங்களா?
சீனியர்: டேய்! நீ ரொன்ப பேசற. சொல்லறத மட்டும் செய்டா.
என் நண்பன்: இல்லீங்க, நாங்க பார்த்துக்கறோம். நீங்க கவலைப் படாதீங்க.
ரவுடி: அதான்டா எங்க கவலையே. ஒழுங்கா அவகிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டைன் பன்னுங்க. இல்லைன்னா ஒரு வழி ஆயிடுவீங்க.
இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் கோபால் அங்கு வருகிறான். நாங்கள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டு நேராக எங்களை நோக்கி வருகிறான். அவனை பார்த்தவுடன் எங்களுக்கும் கொஞ்சம் தைரியம் தலை தூக்கியது. வேகமாக வந்த கோபால் எங்களைப் பார்த்து...
கோபால்: மச்சி, என்ன ஆச்சுடா?
அப்பொழுது சற்றும் எதிர்பாராத விதமாக, அந்த ரவுடி கோபாலின் கண்ணத்தில் பளார் என்று ஒரு அரை விடுகிறான். (என்ன கோபமோ தெரியல ஆனா சரியான அடி) அடி வாங்கிய அதிர்ச்சியில் விழிக்கிறான் கோபால்!
ரவுடி: யாருடா நீ? பெரிய பருப்பா?
கோபால்(பரிதாபமாக): இல்ல.....ப்ரெண்ட்ஸ்...
ரவுடி: ப்ரெண்ட்ஸா இருந்தா? நாங்க பேசிகிட்டு இருக்கோம்ல? போடா அங்கிட்டு!
கோபால் வந்த வேகத்தில் கண்ணத்தில் கையை வைத்து தடவிக்கொண்டு திரும்பி செல்வதைக் கண்டு, எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இருப்பினும் முகத்தை சீரியஸாகவும், அப்பவித்தனமாகவும் வைத்துக்கொண்டு அவர்களிடம் பேசி அனுப்பிவிட்டோம்.
பிறகு நாங்கள் கோபாலை கலாய்த்ததை அவன் இன்றும் மறந்திருக்க மாட்டான். அன்றையில் இருந்து கோபால், "கொட்லு கோபால்" (கதை விடுபவன்) என்று எங்களால் செல்லமாக அழைக்கப்பட்டான்;)
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
8 months ago
3 comments:
wow......ungaloda nanbara ninacha sripa varuthunga..nalla eluthi irukinga...
Mikka Nanri!
kattadhurai ku kattam seri ille... [:)]
Post a Comment