Wednesday, June 25, 2008

மெகா சீரியல் வோட்டு!

(பெப்சி உமா தோரணையில்)என்னை ரொம்ப ஆச்சர்ய பட வைக்கிற விஷயம், எப்படி எல்லாருக்கும் ஒரே விஷயம் பிடிசிருக்குன்றது தான். இந்த மெகா சீரியல் விஷயத்துல நாமெல்லாம் ரொம்ப தெளிவாதான் இருக்கோம்! மேலே படத்தில் உள்ள வோட்டுகளை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.

என்பத்தேழு ஓட்டுல எழுபத்தோரு பேர் 'இது எல்லாமே கொடுமைதான்'னு வோட்டு போட்டிருக்காங்க. எவ்வளோ பீல் பண்ணி இதை போட்டிருப்பாங்கன்னு எனக்கு புரியுது. ஆனா வீட்டுல இருக்க நம்ம அப்பா, அம்மாக்களுக்கு தான் இது புரிய மாட்டேங்குது. கேட்டா, "நாங்க என்ன உங்கள மாதிரி சினிமா கினிமானா சுத்தறோம். எங்களுக்கு இருக்குற ஒரே பொழுது போக்கு இதான"னு நம்மளையே மடக்கிடறாங்க. இவங்களோட சேர்ந்து வேற வழி இல்லாம இந்த கொடுமையை அனுபவிக்கிறவர்கள் இங்கு பல பேர் உண்டு. சினிமாவாவது இரண்டரை மணி நேரத்துல முடிஞ்சிடும் ஆனா இந்த மெகா சீரியல்ஸ் இரண்டரை வருஷம் ஆனாலும் முடிய மாட்டேங்குது.

முன்னாடி எல்லாம் கடைசி சீரியல் ஒன்பதரை மணிக்கு இருந்தது. இப்போ பதினோரு மணி வரைக்கும் போயிடுச்சு! இவ்வளோ இருந்தும் "இது எல்லாமே சூப்பர்"னு வோட்டு பண்ண அந்த தெய்வங்கள் யாருன்னு தெரியல. நீங்க எங்க இருந்தாலும் உங்களோட அந்த மன தைரியத்தை நான் பாராட்டுறேன்! அவ்வ்!

4 comments:

தமிழினி..... said...

ellaththayum vida indha kolangal oru serial varudhu paarunga.....ayooo.....anumaar vaaludhaan adhu.....

Sathiya said...

சரியா சொன்னீங்க தமிழினி. என் அப்பா ஒரு ஒன்னரை வருஷம் முன்னாடி எனக்கு போன் பண்ணப்போ "டேய் கோலங்கள் முடிய போவுதுன்னு நினைக்கிறேன். பாருடா'னு சொன்னாருங்க. நானும் பார்த்தேன். அதே வார இறுதியில் ஒரு ட்விஸ்டை போட்டு மறுபடியும் முதல்ல இருந்து ஆரமிச்சாங்க பாருங்க அப்போ விட்டது தான். எப்போவாச்சும் நடுவுல சும்மா திருப்பி பார்போம், ஒரு நாலு அடியாளுங்க சுத்திக்கிட்டு இருப்பாங்க. அவ்வளோதான்! தேவயானி ஒரு மாசம் பணக்காரியாவும், இன்னொரு மாசம் ஏழையாவும் அடங்கப்பா...இதுல நடிக்க வந்ததுக்கப்புறம் அவங்க இரண்டு குழந்தை பெத்துட்டாங்க!

ராமலக்ஷ்மி said...

//ஆனா இந்த மெகா சீரியல்ஸ் இரண்டரை வருஷம் ஆனாலும் முடிய மாட்டேங்குது//

நான் சொல்ல வந்ததை தமிழினியும் சொல்லியிருக்காங்க. அது இப்போ வெற்றிகரமான ஐந்தாவது வாரத்தில் என விகடனில் டைரக்டர் பேட்டி கொடுத்திருந்தார். நேரம் இருந்தால் எனது சென்ற மாத இடுகையான "மெகா முதலைகள்"-யை பாருங்கள். URL...நாளை வந்து தருகிறேனே:)!

Sathiya said...

@ராமலக்ஷ்மி:
//நான் சொல்ல வந்ததை தமிழினியும் சொல்லியிருக்காங்க. அது இப்போ வெற்றிகரமான ஐந்தாவது வாரத்தில் என விகடனில் டைரக்டர் பேட்டி கொடுத்திருந்தார். நேரம் இருந்தால் எனது சென்ற மாத இடுகையான "மெகா முதலைகள்"-யை பாருங்கள். URL...நாளை வந்து தருகிறேனே:)!//

நீங்க சொல்ல வந்தது ஐந்தாவது வருஷம் தானே? இதுல என்ன பெருசா சாதிச்சிட்டாராம் அவர்? பார்க்கறவங்க எல்லாம் புலிவாலை புடிச்ச மாதிரி, முதல் ஒரு வருஷம் பார்த்துட்டு, அதுக்கப்புறம் எப்படா முடுஞ்சி தொலையும்னு இல்ல பார்த்து கிட்டு இருக்காங்க! உங்க மெகா முதலைகள்யும் படிச்சேங்க. அருமையா எழுதி இருக்கீங்க!