"ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சனையில் விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை"னு கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா திட்டவட்டமாக அறிவிச்சிருக்காராம். இன்னும் விரிவாக படிக்க இங்கே சொடுக்குங்கள்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்துல இவங்க விட்டு கொடுக்க என்ன இருக்கு? அதை இவ்வளோ நாள் தள்ளி வச்சு நாம தான் விட்டு கொடுத்து இருக்கோம். இதை கேக்கவா கருணாநிதி இவ்வளோ நாள் இந்த திட்டத்தை தள்ளி வச்சார்? இந்த பிரச்சனையும் தீராது போல!
இதை படித்து கொண்டிருக்கும் போதே, இந்த செய்தியும் படித்தேன்:
பெங்களூரில் தமிழ் படக் குழு மீது கன்னட அமைப்பு தாக்குதல்
இதை படித்த நீங்கள், இதையும் படியுங்கள்:
"பெங்களூரில் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடா, பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரத்தை திடீரென சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப் பின்னர் இனிமேல் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம், சகோதரர்களாக இருப்போம் என கெளடா அறிவித்துள்ளார்."
இது தானா சார் உங்க டக்கு ஸாரி வாக்கு? நம்ம ஆளுங்களையும் சொல்லணும். இவங்களுக்கு படப்பிடிப்பு நடத்த வேற இடமே கிடைக்கலியா? நம்ம ஊருல இல்லாத அப்படி என்னத்த கண்டாங்க அங்க? எப்படியும் எடுக்க போறது மொக்க படம் தான். மதியாதார் வாசலையே மிதியாதேனு சொல்லுவாங்க. இவங்க என்னடானா, போட்டு மிதிப்போர் வாசலையே திரும்ப திரும்ப மிதிக்கறாங்க. திருந்துங்கடா. இல்ல சத்யராஜ் அண்ணாச்சி கிட்ட போட்டு கொடுத்துடுவேன்.
2 comments:
//நம்ம ஊருல இல்லாத அப்படி என்னத்த கண்டாங்க அங்க? எப்படியும் எடுக்க போறது மொக்க படம் தான்.//
இது மேட்டரு...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாலாஜி! இப்போவெல்லாம் வருஷத்துக்கு ரெண்டு, மூணு நல்ல படங்கள் தாங்க வருது. அதுலயும் சில எங்கயாவது பார்த்து காப்பி அடிச்சதா இருக்கு.
Post a Comment