Monday, June 16, 2008

தசாவதாரத்தின் டாப் 10 அவதாரங்கள்


தசாவதாரத்தின் விமர்சனத்தை அனைவரும் எழுதிவிட்டதால், நானும் எதற்கு அதையே எழுதனும்னு நினைத்தேன். அதனால் தான், சரி படத்தில் வரும் எல்லா அவதாரங்களை பற்றியும் ஒரு விமர்சனம் போடுவோம்னு முடிவு செய்தேன். இதை பற்றியும் ஏற்கனவே போட்டுட்டாங்கனு சொல்றீங்களா? போட்டிருந்தா என்னங்க? வந்துட்டீங்கள்ள? மறுவாதையா படிச்சுட்டு போங்க. இல்லனா அழுதுடுவேன்!

படத்தில் கதை இல்லை என்று குறை கூறுபவர்கள் சற்று இதை படியுங்கள். பிரமிக்க வைக்கும் கமல் சாரின் நடிப்பை மட்டுமே எதிர் பார்த்து போங்க. ஒரு ஏமாற்றமும் இருக்காது.

ஒரு புதிய முயற்சியை செய்ய அவர் எடுத்துக்கொண்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை. நோவாம நோம்பு கும்முடுற நடிகர்கள் இருக்குற இந்த காலத்துல, இந்த வயசுலயும் இவ்வளவு சிரம பட்டிருக்கார் என்று நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்கு. அவர் தமிழன் என்பதில் பெருமிதமாவும் இருக்கு! அவருக்காக இந்த படத்த கண்டிப்பா பார்க்கலாம். இதை சொல்லும் நான் ஒரு ரஜினி ரசிகன்.

சரி, இப்போ அந்த பத்து அவதாரகளையும் கொஞ்சம் அலசுவோம், எனக்கு பிடித்த வரிசையில்!

1. ரங்கராஜ நம்பி

படத்தில் என்னை மிகவும் கவர்ந்த அவதாரம் இது தான். கமல் இதே தோற்றத்தில் ஒரு முழு நீல சரித்திர படம் எடுத்தால் ரொம்ப நல்லா வரும். அந்த அளவுக்கு பொருந்தி இருப்பார். ரங்கராஜ நம்பியாய் அவர் தன் கண்களால் வெளிப்படுத்தும் கோவமும், இயலாமையும், அவரின் உடற் கட்டும், புத்திசாலித்தனமான வசனமும் டாப். கமலை முழு கமலாக கான முடிந்தது இந்த அவதாரத்தில் தான். சிறிது நேரமே வந்தாலும் என்னை மிகவும் கவர்ந்தவர்.

2. பல்ராம் நாயுடு

படம் முழுவதும் வரும் இன்னொரு பாத்திரம் இது. இதில் கமலை அடிச்சுக்க ஆளே இல்லை. இவர் ஒரு தமிழ் பேசும் தெலுங்கர். படத்தின் முதல் காமெடியன் இவர்தான். இருப்பினும் இவர் தன்னிடம் ஆங்கிலம் பேசும் கமலிடம், "தெலுங்கு ஆளான நானே தமிழ் கத்துகிட்டு பேசறேன். தமிழ் ஆளு நீ இங்கிலீஷ்ல பேசற. இப்படி இருந்தா எப்படியா தமிழ் வளரும்னு" கேக்கற இடத்தில் சில பேருக்கு கண்டிப்பா அறை விட்ட மாதிரி இருந்திருக்கும். எந்த தெலுங்கு பெயரை கேட்டாலும் சந்தோஷத்தில் இவர் முகம் மலர்ந்து 'தெலுங்கு வாடானு' கேப்பார் பாருங்க, சான்ஸ்ஸே இல்லை. இவரின் உதவியாளர், இவரை பற்றி பெருமையாக 'Sir can speak in five languages of Telugu' என்று சொல்லும் இடத்தில் சிரிப்பை அடக்க முடியாது. இது மாதிரி இன்னும் நிறைய.

3. வின்சென்ட் பூவராகன்

இந்த பாத்திரத்தில் கமலின் குரல் மட்டும் இல்லையென்றால் இவரை அடையாளமே கான முடியாது. படத்தில் இவர் போட்ட மற்ற அனைத்து வேஷங்களையும் விட இது தான் சற்று இயற்கையாக தெரிந்தது. இதில் இவர் பேசும் தோரணை சூப்பர். அசத்தி விட்டார். பாத்திர படைப்பும் அருமை. ஒருவர் இந்த கமலை பார்த்து, "நீ என்ன உலக நாயகனா" என்று கேட்க, அதற்கு கமல், 'ஆமாம். நான் மட்டும் இல்லை. இருநூறு லட்சம் விந்துக்களிடம் தான் ஒன்று மட்டும் போட்டி போட்டு ஜெயித்து மனிதனாக வெளியே வரும் ஒவ்வொருவரும் உலக நாயகன் தான்'(வசனம் சரியாக நினைவில்லை) என்று சொல்லும் இடத்தில் வசனகர்த்தா கமல் நிற்கிறார்.

4. கிருஷ்ணவேணி

இந்த பாத்திரம் நாம் அனைவரும் ஏற்கனவே அவ்வை ஷன்முகியில் பார்த்த ஒன்றாக இருந்தாலும், இதில் இவர் எடுத்து கொண்ட சிரத்தை அபாரம். இதில் பாட்டியாக நடித்தது மட்டும் இல்லாமல், உயரம் கம்மியாகவும் இருப்பார். பார்க்க ஆச்சரியமாக இருந்தது. 'முகுந்தா முகுந்தா' பாட்டில் கமலே இந்த பாட்டி பாடுவது போல் பாடியிருப்பரே, அது அவரால் எப்படி தான் முடிந்ததோ. இந்த பாட்டி தான் பிராமினராக இருந்தாலும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனை தன் மகனாக நினைத்து கட்டி அழுவும் போது, அவரை தடுப்பவரை பார்த்து, "போடா ஜாதி பிசாசே' என்று திட்டும் போது நெஞ்சில் நிற்கிறார்.

5. கிறிஸ்டியன் ஃபிலெட்சர்

இவரும் படம் முழுவதும் வருவார். ஆரம்பத்தில் இவரது வேஷம் சற்று செயற்கையாக தெரிந்தாலும், போக போக அதில் கமல் தெரிய மாட்டார். யாரோ ஒரு நிஜமான ஹாலிவுட் வில்லன் போல தான் தோன்றும். அந்த அளவுக்கு அருமையாக பண்ணி இருப்பார் கமல். அவரது ஆங்கில ஸ்லாங் ரொம்ப நல்லா இருக்கும்.

6. ஜார்ஜ் புஷ்

இந்த படத்தின் இரண்டாவது காமெடியன் இவர்தாங்க. சான்ஸ்ஸே இல்லை. இவரது காட்சிகள் அனைத்தும் சிரிப்பை வரவழைக்கும். இதை எப்படி தைரியமாக புஷுக்கே போட்டு காமிக்க முயற்சி பண்ணுகிறார்களோ தெரியல. ரொம்ப தைரியம் தான். உதாரணத்துக்கு ஒன்றை சொல்லுகிறேன். புஷ் தன் உதவியாளரை பார்த்து ஒரு விளக்கத்தை கேப்பார். அதற்கு அவர், "It's so complicated. Let me explain" என்று கூறுவர். உடனே புஷ், "If it's so complicated, then no need to explain" என்று சொல்லிவிட்டு ஒரு ரியாக்சன் கொடுப்பார். இன்னொரு இடத்தில், அந்த பயோகெமிக்கல் கிருமியை அழிக்க அவர் தன் உதவியாளரிடம், "Can we do something about this with Nuclear weapons?" என்று கேட்கும் இடத்தில் ங்கொக்கா, மக்கா அடக்க முடியல. சிரிப்பை தாங்க. கமலுக்கு எவ்வளோ குசும்பு பாருங்க.

7. கோவிந்தராஜன் ராமசுவாமி

இவர் தான் ஒரு விஞ்ஞானி. படம் பூராவும் இவர்தான் ஓடிக்கொண்டே இருப்பார். இந்த பாத்திரம் நமக்கு மிகவும் பரிட்சயமானது. அதனால் அவ்வளவாக ஈர்க்கவில்லை. இவர், "கடவுள் இல்லைன்னு எங்கே சொன்னேன், இருந்திருந்தா நல்லா இருக்கும்னு தானே சொன்னேன்" என்று சொல்லும் வசனம் இன்னும் மனதில் நிற்கிறது.

8. ஷிங்கென் நரஹசி

இந்த கமல் ஒரு ஜப்பானிய கராத்தே மாஸ்டர் பாத்திரம். இதில் இவர் முக அமைப்பே வேறு மாதிரியாக இருக்கும். கண்களும் சற்று வித்யாசமாக தெரியும். ஆனால் கூடவே அந்த செயற்கை தனமும் தெரியும். இதையும் மிக சிறப்பாக செய்திருக்கிறார் கமல். கடைசியில் போடும் சண்டை காட்சி அற்புதம். அப்போது இவரை பார்த்து ஃபிலெட்சர் கமல் "Remember Hiroshima" என்று சொல்ல, பதிலுக்கு இவர் "Remember Pearl Harbour" என்று சொல்வது அபாரம்.

9. அவதார் சிங்

இந்த கமல் ஒரு தமிழ் தெரிந்த பாட்டு பாடும் சிங். இதில் இவரது வேஷம் ரொம்பவே செயற்கையாக தெரிந்தது எனக்கு. இதில் இவரது நடிப்பும் சற்று பரிட்சயமாகவே இருந்தது. அதனால் இந்த பாத்திரம் என்னை அவ்வளவாக கவரவில்லை.

10. கலிஃபுல்லா முக்தார்

இது ஒரு ஏழு அடி உள்ள உயரமான முஸ்லீம் இளைஞன் பாத்திரம். இந்த வேஷமும் ரொம்பவே செயற்கையாக தெரிந்தது. ஆனால் கமலின் நடிப்பால் அதை கொஞ்சம் மறைத்து விட்டார். இதில் இவர் பேசும் தோரணையும் ரொம்ப நல்லா இருக்கும்.

சரி இப்போ படத்தின் நிறைகளையும், குறைகளையும் பார்ப்போம்.


நிறைகள்:

1. கமலின் அபார நடிப்பும், புதுமையான முயற்சியும். கண்ணை மூடிக்கொண்டு வெறும் வசனத்தை கேட்டாலே எது எந்த கமல் என்று சுலபமாக சொல்லிவிட முடியும்.

2. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட காட்சி.

3. படத்தின் வசனமும், அருமையான பின்னணி இசையும்.

4. அருமையான ஒளிப்பதிவு.


குறைகள்:

1. பாடல்கள். முதல் பாடல் 'கல்லை மட்டும்' நல்லா இருக்குன்னு பார்த்தால் அது காப்பி அடித்த பாடலாம். அந்த பாடலை பார்க்கும் பொழுது நான் பின்னணியில் தான் வருகிறது என்று நினைத்தேன். பிறகு பார்த்தால் அதை கமல் பாடுகிறார். அவருக்கு அந்த குரல் சற்றும் பொருந்தவில்லை. என்னை மிகவும் கவர்ந்த பாடல் 'முகுந்தா' பாடல் தான். இதற்கு ரேஷ்மையா தான் இசையமைத்தாரா என்று நம்ப முடியவில்லை.

2. அஸின் பாத்திரம் கொஞ்சம் எரிச்சலை மூட்டுகிறது. உயிரும், மானமும் போகும் நேரத்திலும் சும்மா பெருமாள், பெருமாள் என்று சுற்றி கொண்டிருப்பது கொஞ்சம் ஓவர்.

3. வன்முறை காட்சிகள். கொலைகளும், இரத்தமும் நிறைய இருக்கிறது படத்தில்.

4. புரிந்து கொள்ள சற்று கடினமான திரைக்கதை. கமலிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் அவர் தன் லெவெலுக்கே யோசித்து படத்தை எடுத்து விடுவார். சாதாரண மக்களுக்கும் புரியிற மாதிரி எடுக்க மாட்டார். உதாரணத்திற்கு "Jurassic Park" படத்தை எடுத்து கொண்டால் அதில் Dinosaursசை எப்படி ஒரு கொசுவில் இருந்து உருவாக்கினார்கள் என்பதை தெளிவாக காண்பித்திருப்பார்கள். அதே போல் கமலும் இந்த "Chaos", "Butterfly effect", இதை எல்லாம் கொஞ்சம் விளக்கி இருக்கலாம்.

5. படத்தில் இன்னொரு நெருடலான விஷயம் கடைசியில் சுனாமி வந்துட்டு போனதுக்கப்புறம் ஊரே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு, அலறிக்கொண்டு இருக்கும் போது, கமலும் அசினும் நின்று ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருப்பது. இதை தவிர்த்திருக்கலாம்.

15 comments:

Bleachingpowder said...

என்னங்க முக்கியமானத வுட்டுடீங்க...அப்போ சோதனை கூடத்துல செத்த குரங்கு கமல் இல்லையா ??

Sathiya said...

இல்லைங்க. இது தசாவதாரம், பத்து வேஷம் தான் போட முடியும்.

தமிழினி..... said...

Padam innum paarkala....tamilnaatukku pogum bodhu paarkalam nu wait pannitu irukken...anyways thanks for putting all the fotographs of Kamal's "Dasaavadhaaram"-s...I like Kamal.. :))))

Sathiya said...

கண்டிப்பா பாருங்க தமிழினி! எத்தனையோ மொக்கை படத்தை திரையரங்கு சென்று பார்க்கிறோம். இந்த படத்தை கமலின் உழைப்புக்காகவாச்சும் கண்டிப்பா பார்க்கணும்!

Illatharasi said...

உங்களுக்கு ஒரு Surprise...... எனது வலைக்கு வந்து பாருங்க!!!!

Sathiya said...

எனக்கா? ரொம்ப நன்றிங்க இல்லத்தரசி!

தமிழினி..... said...

Visit my blog pls!!!

:))))

தமிழினி..... said...

yeah...kandippa paakuren...

தமிழினி..... said...

adhu epadi tamilmanam la padiyaradhu...time irukkum bodhu epadi nu sollunga.

Sathiya said...

இங்கு சென்று உங்கள் வலைப்பூவை இணைத்து கொள்ளுங்கள்:
http://tamilmanam.net/user_blog_submission.php

முடிந்தால் இதில் உள்ளது போல் பதிவுப்பட்டையை இணைத்து கொள்ளவும்.
http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html

இல்லையென்றால், ஒவ்வொரு பதிவை போட்ட பிறகு தமிழ்மணம் சென்று, முகப்பில், "இடுகைகளைப் புதுப்பிக்க" என்னும் இடத்தில் உங்கள் வலைப்பூ முகவரியை கொடுத்து உங்கள் பதிவை இணைத்து கொள்ளலாம்.

தமிழினி..... said...

Thats a very useful piece of info.Thanks for the same..Vaalga valamudan!! :)))

தமிழினி..... said...

dasavatharam paarthachu...enakku padam pidichurundhadhu...adha vachu oru padhivum pottachu...heheheh.
:)))

Sathiya said...

தமிழினி~ உங்க பதிவ படிச்சாச்சு! கமெண்டும் போட்டாச்சு!

Vidhya said...

miga arumayaana vimarsanam. Thanks for the visit to my blog and for the comment. Do visit my other blogs too.

Sathiya said...

@வித்யா: வருகைக்கும், கருத்துக்கும் நன்றி! கண்டிப்பாக வருகிறேன்.