Monday, June 9, 2008

குங்ஃபூ பாண்டா - கண்டிப்பா பாருங்க!


சென்ற சனிக்கிழமை ஏதாவது ஒரு படத்துக்கு போலாம்னு முடிவு பண்ணோம். என்ன படம் போறதுன்னு ஒரே குழப்பம். கடந்த இரண்டு மாதமாய் வந்த எந்த படங்களும் திரையரங்கு சென்று பார்க்கும் அளவுக்கு என்னை தூண்டவில்லை.

கடைசியாக தங்கமணிக்கு அனிமேஷன் படங்கள் பிடிக்கும் என்பதால் இந்த 'குங்ஃபூ பாண்டா' படத்துக்கு டிக்கெட் புக் செய்தேன். இப்படத்தின் விளம்பரங்கள் பல நாட்களாக சிங்கப்பூர் ரயில் நிலையங்களில் ஒளிபரப்ப பட்டு வருகின்றன. அதை பார்த்த பொழுது கூட எனக்கு இப்படத்தை பார்க்க வேண்டும் என்று தோனியதில்லை. காரணம் படத்தின் தலைப்பு. இது ஏதோ சீனா குங்ஃபூ சம்பந்த பட்ட சண்டை படம் என்று நினைத்தேன்.

படம் பார்க்க சென்று அமர்ந்து விட்டோம். படம் ஆரம்பித்தது. முதல் காட்சியே சில கார்டூன் கதாபாத்திரங்கள் வந்து கன்னா பின்னாவென்று சண்டை போட்டுக்கொண்டது. எனக்கோ சரியான கடுப்பு. ஆஹா இதை பார்க்கவா வந்தோம்? இது அனிமேஷன் படம் இல்லையா? கார்ட்டூன் படமா? அப்பாடா! அது வெறும் கனவு காட்சி. இப்படத்தின் நாயகன் பொ'வின் (பாண்டா கரடி) கனவு அது. பொ'வை(Po) பார்த்தவுடன் எனக்கு அதை மிகவும் பிடித்துவிட்டது.

சரி இப்போ கதையை பார்ப்போம். பொவின் அப்பா ஒரு நூடுல்ஸ் கடை வைத்து நடத்துவார். அவருக்கு பொவிற்கும் தனது நூடுல்ஸ் செய்யும் ரகசியத்தை சொல்லிகொடுத்து அந்த கடையை பொவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால் பொவிற்கோ குங்ஃபூ மீது அலாதி பிரியம். இருப்பினும் பொ சற்று சோம்பேறி. சாப்பாடு என்றால் பொவிற்கு கொள்ளை பிரியம்.

இது இப்படி இருக்கையில் பொ இருக்கும் ஊரின் குங்ஃபூ மாஸ்டர் ஊக்வே(Oogway), டாய் லுங்(Tai Lung) என்னும் தீய சிறுத்தையை எதிர்த்து சண்டையிட ஒரு டிராகன் வாரியரை (Dragon Warrior) தேர்ந்தெடுக்கப்போவதாக அறிவிக்கிறார். இதை பார்க்க செல்லும் பொவை மாஸ்டர் ஊக்வே தற்செயலாக டிராகன் வரியராக தேர்ந்தெடுக்கிறார். இது மாஸ்டர் ஷிபுவிற்கும்(Shifu) அவரின் ஐந்து சீடர்களுக்கும் பிடிக்கவில்லை. மாஸ்டர் ஊக்வேவிற்கு பிறகு அப்பதவியை ஏற்க போவது மாஸ்டர் ஷிபு தான். டாய் லுங்கை சிறுவயதில் எடுத்து வளர்த்து குங்ஃபூ கற்று கொடுத்ததும் மாஸ்டர் ஷிபு தான். ஆனால் மாஸ்டர் ஊக்வே டாய் லுங்கின் மனதில் தீய எண்ணங்கள் இருப்பதால் அதை டிராகன் வாரியராக தேர்ந்தெடுக்க மறுத்து விடுகிறார். மேலும் அதை சிறையும் வைத்து விடுகின்றனர்.

அதன் பிறகு தான் மாஸ்டர் ஷிபு இந்த ஐந்து சீடர்களையும் தேர்ந்தெடுத்து குங்ஃபூ கற்று கொடுக்கிறார். தற்போது அவர்களுக்கும் அந்த டிராகன் வாரியர் பதவி கிடைக்கவில்லை. அதான் இந்த கோவம். இதன் பிறகு பொ எப்படி ஷிபு மாஸ்டரின் நம்பிக்கையையும், ஐந்து சீடர்களின் நட்பையும் பெற்று, குங்ஃபூ கற்று கொண்டு டாய் லுங்கை வெல்கிறது என்பது தான் கதை. அந்த ஐந்து சீடர்களில் ஒன்றான குரங்குக்கு குரல் கொடுத்திருப்பது ஜாக்கி சான்(Jackie Chan), இன்னொரு சீடரான புலிக்கு குரல் கொடுத்திருப்பது ஏஞ்சலினா ஜோலி(Angelina Jolie). விரியன் பாம்பிற்கு குரல் கொடுத்திருப்பது லூஸி லியு(Lucy Liu).

இதில் பொ அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை. அது அடிக்கும் ஒவ்வொரு லூட்டியும் உங்கள் வயிற்றை பதம் பார்ப்பது நிச்சயம். பண்டைய சீனாவை மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். வசனங்கள் அனைத்தும் மிக நகைச்சுவையாக எழுதப்பட்டு படம் முழுவதையும் ஒரு நகைச்சுவை படமாக எடுத்து இருக்கிறார்கள். இந்த மாதிரி முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை கலந்த அனிமேஷன் படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை.

ஸ்ரேக்(Shrek) படம் போல இதன் தொடர்ச்சி படங்களும் வரும் என்று எதிர்பார்கிறேன். இவ்வருடத்தின் மிக பெரிய ஹிட் படங்களின் வரிசையில் இதுவும் கண்டிப்பாக இருக்கும் என்பது நிச்சயம். ஆகமொத்தத்தில் பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய படம் இது. இப்படத்தின் வலைப்பூவை காண இங்கே சொடுக்கவும்.

4 comments:

பிரேம்ஜி said...

சத்யா! நானும் பார்த்துட்டேன். ரொம்ப நல்லா இருந்திச்சு. குழந்தைகள்,பெரியவர்களுக்கும் ஏற்ற படம் இது.கிராபிக்ஸ் ல் வித்தை காண்பித்திருக்கிறார்கள்.

Sathiya said...

வாங்க பிரேம்ஜி! ஆமாம் கிராபிக்ஸ் நல்லா பண்ணி இருக்காங்க. இன்னொரு வாட்டி பார்க்கலாம் போல இருக்கு.

பிரேம்ஜி said...

வணக்கம் சத்யா!ஒரு சிறு உதவி வேண்டும் உங்களிடமிருந்து.நீங்கள் செய்திருப்பது போல் வலை பதிவின் முகப்பில் Flickr Slide Show இணைப்பது எப்படி என்பது குறித்து தகவல்கள் தர முடியுமா? நன்றி.

Sathiya said...

கண்டிப்பா! அது ரொம்ப சுலபம் பிரேம்ஜி. இது மாதிரி செய்யுங்க:
1. Go to Layout -> Page Elements
2. Click Add a Page Element
3. In the Page Element pop-up, select 'Slideshow'
4. It will ask for Title and Source.
5. Give any title and in the Source Select Picasa, Flickr or Photobucket
6. Now in the Option, select Album instead of Keyword.
7. Give your Picasa/Flickr Username in the username box
8. Now in the Album list, you can find all your public albums. Just select one of them and click Save.
9. That's it. You are done.
10. You can now place this Page Element whereever you want.
Hope this helps.