ஏ.ஆர். ரஹ்மானுடைய சமீபத்திய பாட்டு கேட்டீங்களா? ஒரு ஹிந்தி படத்துக்கு போட்டிருக்கார். பாட்டெல்லாம் சும்மா டக்கரா இருக்கு. அதுல ஒரு பாட்டு தான் 'பப்பு கான்ட் டான்ஸ் சாலா' என்கிற பாட்டு. சரியான பார்ட்டி(Party) சாங் இது. பாட்டுகளை பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.
அமீர் கான் தயாரிச்ச படம் இது. ஜெனிலியா தான் ஹீரோயின். ஹீரோ இம்ரான் கான் அமீர்கானுடைய சொந்தம். படத்தின் பெயரை சொல்லவே இல்லையே. படத்தின் பெயர் 'ஜானே து யா ஜானே நா'(Jaane Tu Ya Jaane Na), அப்படீனா 'உனக்கு தெரியுமோ தெரியாதோ'.
படம் எப்படி இருக்கும்னுலாம் தெரியல. இதுல வர அந்த 'பப்பு கான்ட் டான்ஸ்' பாட்டுக்கு நம்ம டி.ஆர் டான்ஸ் ஆடுனா எப்படி இருக்கும்னு நெனச்சி பார்த்தேன். அதை அப்படியே எடிட்டும் பண்ணிட்டேன். சும்மா சொல்ல கூடாது, இந்த வயசுலயும் மனுஷன் என்னமா டான்ஸ் ஆடறார். அதான் குட்டி முப்பத்திரெண்டு அடி பாயுது போல. பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
10 months ago
6 comments:
enna kodumai sir ithu :((
ம்ம்முடியல :))
போதும் விட்றுங்க
@ila, கப்பி, முரளிகண்ணன்: வருகைக்கும், கருத்துக்கும், வீடியோவை பார்த்த அந்த மன தைரியதுக்கும் நன்றி;)
அம்மே....
அண்ணே, ஒங்களுக்கு ஏனிந்த கொலைவெறி.... ??? :(
வாங்க இராம்! அது வேற ஒண்ணும் இல்ல. போன வாரம் வீராசாமி பார்த்த எபெக்ட். அப்படியே மனசுல நிக்குது. மறக்க முடியல. முல்ல முல்லால எடுக்கனும்கிற மாதிரி அரசாங்கம் பார்க்கணும் போல;)
Post a Comment