IIFA என்பது சர்வதேச இந்திய திரைப்பட விழா(International Indian Film Academy) ஆகும். 2008க்கான இந்த விழா தற்போது பாங்காக்கில் நடை பெற்று கொண்டிருக்கிறது. சென்ற வருடம் துபாயில் நடைபெற்றது. சர்வதேச விழா என்பதால் வெளிநாடுகளில் நடத்துகிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால் இதில் மிகவும் நெருடலாக இருப்பது அந்த 'இந்தியா' என்பது தான். ஏன் இப்படி சொல்கிறேன் என்று புரியவில்லையா? கீழே உள்ள பட்டியலை பாருங்கள்:
Best Picture: Guru, Chak De India, Jab We Met, Om Shanti Om, Life In A Metro
Best Actor: Abishek Bachchan - Guru, Akshay Kumar - Bhool Bhulaiyaa, Salman Khan - Partner, Shah Rukh Khan - Chak De India, Shahid Kapoor - Jab We Met
Best Actress: Aishwarya Rai - Guru, Deepika Padukone - Om Shanti Om, Kareena Kapoor - Jab We Met, Tabu - Cheeni Kum, Vidya Balan - Bhool Bhulaiyaa
முழு பட்டியலையும் கான இங்கே கிளிக்கவும்.
பட்டியலை பார்த்ததும் உங்களுக்கு நான் சொல்ல வர்றது புரிஞ்சி இருக்கனுமே? இதில் இருப்பது எல்லாம் வெறும் பாலிவுட் படங்கள் மட்டும் தான். இந்தியால இவங்க மட்டும் தான் படம் எடுக்கராங்களா? இவங்க எடுக்குற பத்து படத்துல எட்டு படம் ஏதாவது ஒரு ஆங்கில படத்த பார்த்து காப்பி அடிச்சதா இருக்கும். அது மட்டும் இல்லாம அந்த பத்துல ஒன்னு மட்டும் தான் ஹிட் ஆகும். இவங்க எப்படி இதை 'சர்வதேச இந்திய திரைப்பட விழா' என்று சொல்லலாம்? இதில் இருப்பது வெறும் பாலிவுட் படங்கள் தானே?
இப்போ இங்கயும் கொஞ்ச போயி பாருங்க. ஒசியன் சினிபேன் பெஸ்டிவல் ஆப் ஆசியான் அண்ட் அராப் சினிமா(Osian Cinefan, Festival of Asian & Arab Cinema), இந்திய படங்களின் பிரிவில் பருத்திவீரனை சிறந்த படமாகவும், அதில் நடித்த ப்ரியாமணியை சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்திருக்கிறார்கள். இது மட்டும் இல்லாமல் பெர்லின் திரைப்பட விழாவில் கூட பருத்தி வீரனுக்கு சிறந்த படத்துக்கான சிறப்பு பரிசு கொடுத்திருக்கிறார்கள். இவங்களுக்கு தெரிவது நம்மூர் காரர்களுக்கு ஏன் தெரிய மாட்டேங்குது? தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய எந்த மொழி படத்தையும் இவர்கள் மதிப்பதில்லை. இவர்கள் இப்படி செய்வதால் சர்வதேச அரங்கில் இந்திய படங்கள் என்றாலே பாலிவுட் படங்கள் தான் என்றாகி விட்டது.
போன முறை துபாயில் இந்த விழா நடந்த பொழுது கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இதை எதிர்த்து அந்த விழாவிலேயே குறை கூறி பேசினார். அந்த தைரியம் வேறு யாருக்கும் வராது. அதற்காக அவரை பாராட்டுகிறேன். இதனால் தான் என்னவோ இம்முறை தென்னிந்தியாவில் இருந்து யாரையும் கூப்பிடவில்லை என்று நினைக்கிறேன். அந்த விழாவில் மம்மூட்டி பேசியது இது தான்: "Indian cinema is not just Bollywood, and Hindi is not the only language. Why should our films be called South Indian cinema instead of being under the banner of Indian films?"
இவ்வளோ சொல்லியும் இவங்க இன்னும் திருந்தல. இதுல இன்னொரு விஷயம் கவனிச்சீங்களா? தாரே ஜமீன் பர்(Taare Zameen Par) என்ற அருமையான படம் ஆமிர் கான் இயக்கத்தில் வெளி வந்ததே ஞாபகம் இருக்கா? அந்த படமும் இந்த பட்டியலில் இல்லை. ஷாருக்கான் படத்துக்கு(Chak De India) மட்டும் ஒன்பது விருதுகள். இதுலயுமா அரசியல்? ஒரு வேலை இந்த படம் டிசம்பர் மாதம் வெளி வந்ததால் அடுத்த வருடத்திற்கு எடுத்து கொள்வார்களோ? சரி, நீங்க என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க. ஆனா தயவு செய்து மம்மூட்டி சார் சொன்னது போல் 'சர்வதேச இந்திய திரைப்பட விழா' என்பதை 'சர்வதேச இந்திய பாலிவுட் திரைப்பட விழா' என்று மாற்றி கொள்ளுங்கள்.
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
8 months ago
7 comments:
neenga sonna mathiri.. medailayey Mamooty kandichapo padichirunthaen... andha thairiyam niraya paeruku varaadhu.. chief guest-ah poi pallai ilichitu vandhu irupaanga..
but still they haven't changed.... idhula unity in diversity-nu solikiradhu vera ;-)
எனக்கு வர்ற ஆத்திரத்துல ...இந்த பாலிவுட் பாடுகளை எல்லாம் அடித்து நொறுக்கணும் போல இருக்கு.
இந்த மயிராண்டிக மனசுல என்ன தான் நினைத்து இருக்காங்க..இந்தியா ல ஹிந்தி படம் மட்டும் தான் படமா? இல்ல தெரியாம தான் கேட்கிறேன்..சரி எதோ போன வாட்டி அப்படியாச்சு..அதுக்கு மம்மூட்டி நல்லா நாக்க பிடுங்கிக்கிற மாதிரி அங்கே வச்சு நாலு வார்த்தை நறுக்குன்னு கேட்டுட்டு வந்தாரு யாருக்கும் பயப்படாம ...
இந்த முறை மயிரே போச்சுன்னு இவனுக பாட்டுக்கு விழாவ நடத்திட்டு இருக்கானுக.. இவனுக ப்ளாக் மாதிரி நல்ல படம் ஒரு நாலு தான் எடுத்து இருப்பானுக.. சும்மா மியூசிக் இ அலற விட்டு நாலு பாட்டு.. கிளப் மாதிரி செட்டிங் போட்டு அவுத்து போட்டு ஆடுற இரண்டு பாட்டு ...ஆங்கில படத்தை திருடி இரண்டு சண்டை காட்சி னு பண்ணிட்டு என்னமோ பெருசா கிழிச்ச மாதிரி பீத்திட்டு இருக்கானுக.
நம்ம பக்கமும் இப்படி படங்கள் வருகிறது என்றாலும், கண்டிப்பாக நாம அவர்களை விட சிறப்பாக செய்கிறோம். அதிலும் மலையாள படங்கள் ஒரு சிறப்பு என்றால்.. தொழிநுட்ப முறையிலும் நடிப்பிலும் தமிழகம் கலக்கிட்டு இருக்கு. இங்கு மட்டுமே இத்தனை இசை அமைப்பாளர்கள், வித்யாச இயக்குனர்கள், ஒளி பதிவாளர்கள் என்று ஏகப்பட்ட திறமைசாலிகள்.
பேசாம நானும் இதை பற்றி பதிவு போடலாம், அந்த அளவுக்கு காண்டுல இருக்கேன் ..
வடக்குப்பட்டு ராமசாமி நீங்களாவது நினைவு வைத்து பதிவு போட்டீங்களே. ரொம்ப நன்றி.
கோபத்துடன்
கிரி
சத்யா. தலையில் நச்சுன்னு குட்டின மாதிரி பதிவு போட்டிருக்கீங்க.
சும்மா ' நச்'ன்னு சொன்னீங்க... பார்ட்னர் படத்துக்கு சல்மான்கானுக்கு விருதா...? என்ன கொடுமை ராமசாமி இது?
It is a sheer nonsense of the superior complexed north Indians. They pat on their own backs.
திரைப்படம்,விளையாட்டு னு எல்லா துறையிலும் இவங்க தான் முன்ன இருக்கணும் னு நினைக்கிறது கண்டிக்க பட வேண்டிய விஷயம் தான்...பாலிவுட் காரர்களுக்கு நல்ல குட்டு....!!
//யாத்திரீகன்//
வாங்க யாத்திரீகன்! சரியா சொன்னீங்க! நம்ம ஆளுங்களுக்கு வெ.மா.சூ.சொ எதுவும் இல்லைங்க!
//கிரி//
வாங்க கிரி! நீங்க சொன்ன ப்ளாக் படம் கூட ஒரு ஆங்கில(The Miracle Worker) படத்தின் தழுவல்தான். பருத்தி வீரன், காதல், மொழி போன்ற சமுதாய சிந்தனையும், விழிப்புணர்வும் கொண்ட படங்களை அவர்கள் எடுப்பது இல்லை. அங்கேயும் நம்மூர் காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்களும் பதிவு கண்டிப்பா போடுங்க. இவங்களுக்கு எல்லாம் எத்தனை வாட்டி சொன்னாலும் உறைக்காது. படம் பாக்குற நமக்கே இவ்வளவு கோவம் வருதே, அதை எடுக்கிற நம்மாளுங்க ஒண்ணுமே கேக்க மாட்டேங்கராங்களே?
//பிரேம்ஜி//
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பிரேம்ஜி!
//தமிழ்பறவை//
வாங்க தமிழ்பறவை! பார்ட்னர் படம் நானும் பார்த்தேங்க. அந்த நடிக்க என்ன இருந்தது சல்மான் கானுக்கு? கொடுமைடா சாமி!
//பெத்த ராயுடு//
Exactly பெத்த ராயுடு! Welcome here and thanks for the comments!
//தமிழினி//
வாங்க தமிழினி! நம்மோட போட்டி போட்டு முன்னாடி வந்தா சரிங்க. ஆனா நம்மள போட்டியில இருந்தே விலக்கிட்டு முன்னாடி வந்தா அதை எப்படி ஒத்துகிறது? அட்லீஸ்ட் தேசிய விருதாவது நமக்கு கொடுக்குறான்களே. அதுல வந்து OSO எல்லாம் போட்டி போடட்டும் பார்க்கலாம்!
Post a Comment