Thursday, July 24, 2008

சிங் இஸ் கிங்

இது அக்ஷய் குமார் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'சிங் இஸ் கிங்' படத்தின் விமர்சனம் இல்லைங்க, நம்ம மன்மோகன் சிங்கை தான் இப்போ நிறைய பத்திரிகைகள்ல இப்படி போட்டிருக்காங்க.


சும்மா சொல்ல கூடாது மனுஷன் சாதிச்சு காட்டி இருக்கார். தன்னை பலவீனமான பிரதமர் என்று கூறியவர்கள் முகத்தில் கரியை பூசி இருக்கார். ஆனால் இனிமேல் தான் அவர் ஜாக்கிரதையாக செயல்பட வேண்டும். கம்யூனிஸ்ட்களின் தொல்லை இனிமேலும் தொடரும். அதை எல்லாம் எதிர்த்து அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றி, அதனால் இந்தியாவிற்கு கிடைக்கும் பயன்பாட்டை நிரூபிக்க கடமை பட்டிருக்கிறார். அவர் நாட்டிற்கு நல்லது செய்வார் என்று நம்புகிறேன்.


அவரை பாராளுமன்றத்தில் பேச விடாமல் கூச்சலிட்டதால் அவரது தனது உரையை படிக்காமல் சமர்ப்பித்து விட்டார். ரொம்ப வலிமையான உரை. அதை படிக்க இங்கே கிளிக்கவும்.


மன்மோகன் சிங்கை பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு உபரி தகவல். இப்பொழுது இந்தியா இந்தளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேறி, நாமெல்லாம் கணினி துறையில் இந்தளவுக்கு சம்பாரித்து கொண்டிருக்கிறோம் என்றால், அது '1991'ல் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்த பொழுது, நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளியல் சீர்திருத்தமே(Economic Reforms) காரணம்.

**********

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்று விடுவோம் என்று தெரிந்ததோ என்னவோ, பாராளுமன்றதிற்குள் பணத்தை எல்லாம் கொண்டு வந்து திசை திருப்ப பார்த்தார்கள். இப்போ யாரை பார்த்தாலும் குதிரை பேரம், குதிரை பேரம் என்று அறிக்கை விட்டு கொண்டிருக்கிறார்கள். இது இரு தரப்பிலும் நடந்த விஷயம் என்றே நான் நினைக்கிறேன். இன்னும் சொல்ல போனால் எதிர் கட்சியினருக்கே இதன் அவசியம் அதிகம்.


இதெல்லாம் இருக்கட்டும்! எனக்கு ஒரு சந்தேகம். லஞ்சம் கொடுத்தவரை விட வாங்கினவரை தானே எப்பொழுதும் குறை கூறுவார்கள். இங்கே மட்டும் ஏன் தலை கீழாக நடக்குது? நாட்டை பற்றியும் கவலை இல்லாமல், தனது கட்சியை பற்றியும் கவலை இல்லாமல் இப்படி பணம் வாங்கும் மந்திரிகளை குறை சொல்வதை விடுத்து மற்றவரை குறை சொல்வதில் என்ன ஞயாயம்?

**********

இவ்வளவு தீவிரமாக எல்லாம் நடந்து கொண்டிருக்கையில், தனியாக தமாஷ் பண்ணி கொண்டிருக்கிறார் அத்வானி அவர்கள். இவர் நேருஜியும், மொரார்ஜி தேசாயும் '' ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்று சொல்ல போக, அதற்கு பிரணாப் முகர்ஜி நேரு இறந்து போனது ''ல் '' ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது ''ல் தான், இறந்து போன நேரு எப்படி இந்த ஒப்பந்தத்தை எதிர்த்திருக்க முடியும் என்று கேட்டு மூக்கை உடைத்திருக்கிறார். வாஜ்பாய் கிட்ட இருந்த கொஞ்சமாவது இவர் கற்று கொண்டிருக்கலாம்.

**********

இன்னொரு பக்கம் லாலு 'இடது சாரிகள் மரக்கிளை நுனியில் அமர்ந்து கொண்டு கிளையின் அடிபாகத்தை வெட்டுகிறார்கள்' என்று ஜோக் அடித்து காமெடி பண்ணி இருக்கார். யார் எவ்வளோ கூச்சல் போட்டாலும் இந்த மனுஷன் பேசும்போது மட்டும் எல்லாரும் அமைதியாக உட்கார்ந்து கொண்டு பேச்சை கேட்டு சிரித்து ரசிக்கிறார்கள். உண்மையிலேயே திறமையான மனுஷன் தான்.

**********

இப்போ இடது சாரிகள், மாயாவதி என்று ஒரு பத்து கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஒரு மூனாவது அணியை உருவாக்கி இருக்கிறார்கள். இதெல்லாம் எவ்வளோ நாள் தாக்கு பிடிக்கும் தெரியுமா? யார் பிரதமந்திரி வேட்பாளர் என்று முடிவாகும் போது பாதி பேரு பிச்சிகிட்டு போய்டுவாங்க. சீனா இந்த அணு ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கையெழுத்திட்டு விட்டார்கள். நாம் கையெழுத்திடுவதற்கு மட்டும் இந்த இடது சாரிகள் எதற்கு இப்படி பிரச்சனை செய்கிறார்கள்?

**********

இன்னொரு விஷயத்தை பற்றி இப்போ தான் நான் கேள்வி பட்டேன். இதுவும் லாலு பாராளு மன்றத்தில் கூறியது தான். கிருஷ்ணர் தூக்கிய கோவர்தன மலை தெரியுமல்லவா? அதை அந்த ஊரில் ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா அதில் கிடைக்கும் கணிமங்களுக்காக குடைந்து கொண்டிருக்கிறதாம். நம்ம ஊரில் சேது பாலத்துக்கு இராமர் பெயரை இழுத்து பிரச்சனை பண்ணியவர்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் பாருங்கள்?

**********

அப்புறம் இன்னொரு காமெடி என்னவென்றால், சமாஜ்வாடி மந்திரி(அதீக் அகமது) ஒருத்தர் அணுசக்தி ஒப்பந்தம் தலையும் புரியலை, வாழும் புரியலை என்று கூறி உள்ளார். இப்படி இருக்கும் பொழுது நாட்டு மக்களுக்கு எப்படி புரியும் என்று கேட்டுள்ளார். நாட்டு மக்கள் இருக்கட்டும். இவருக்கு புரியலைன்னு சொல்றார் பாருங்க, அடங்கப்பா! இங்க இவ்வளோ பிரச்சனை நடந்துட்டிருக்கு, ஏதோ ஒரு ஊர்ல ஆணி புடிங்கிட்டிருக்க நாமலே அது என்ன ஏதுன்னு தேடி கண்டு பிடிச்சி தெரிஞ்சிக்கிறோம், இவர் இவ்வளோ நாள் என்ன செஞ்சிட்டிருந்தாரோ? இவரும் ஒரு மத்திய மந்திரி.

9 comments:

Karthik said...

//சிங் இஸ் கிங்

What about Amar Singh?

தமிழினி..... said...

//அது '1991'ல் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்த பொழுது, நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளியல் சீர்திருத்தமே(Economic Reforms) காரணம்//

இதை நான் வழி மொழிகிறேன்....அவரு மட்டும் 91 ல அப்படி பண்ணலேன்னா,நாமெல்லாம் என்ன செஞ்சுட்டு இருப்போம் னு தெரில?!இத பத்தி நான் அடிக்கடி யோசிப்பேன்..!!!

நல்ல பதிவு!!

//இவர் இவ்வளோ நாள் என்ன செஞ்சிட்டிருந்தாரோ? இவரும் ஒரு மத்திய மந்திரி.//

வேற என்ன பெருசா பண்ணிருப்பாரு /......வழக்கம் போல தூங்கிகிட்டு இருந்துருப்பாரு... :))))

vimal said...

//Sathiya said..
ஆஹா! நம்ம வலைப்பதிவையும் போட்டிருக்கீங்க. ரொம்ப நன்றி கோவை விமல்! நானும் உங்களை மாதிரி தான், எழுதி பழக்கமில்லை. நீங்களாவது படித்து பழகி இருக்கிறீர்கள், நான் சின்ன வயசில் அம்புலிமாமா, சிறுவர் மலர் படித்ததோடு சரி;) //

வாங்க சத்தியா, உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் பதிவுகள் சிறிதே என்றாலும் அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது அதுதான் உங்கள் வலை பதிவுக்கும் சுட்டி கொடுத்தேன், அது மட்டும் இல்லாமல், நானும் கவுண்டமணி ரசிகன். அந்த வடக்கபட்டி ராமசாமி காமடி மறக்க முடியாது..

உங்கள் வீரசாமி விமர்சனம் அருமை, மற்றவர்களை காட்டிலும் நீங்கள் உங்கள் வாழ்க்கை சம்பவங்களுடன் செய்த விமர்சனம் மிக அருமை.
அதிலும் உங்கள் தங்கமணி முகம் மாறும் காட்சி விளக்கம், விழுந்து விழுந்து சிரித்தேன்..:-))

MJS said...

An award is waiting for you at my blog.......

Sathiya said...

@karthik:
வாங்க கார்த்திக். அமர் சிங்கை வேணும்னா மந்திரியா இல்ல தளபதியா வச்சுக்கலாம்;)

@தமிழினி:
//நாமெல்லாம் என்ன செஞ்சுட்டு இருப்போம் னு தெரில?!இத பத்தி நான் அடிக்கடி யோசிப்பேன்..!!!//
ஆமாங்க! அதே மாதிரி இப்போ அவர் பண்ண போற அணுசக்தி ஒப்பந்ததால இன்னும் பத்து வருஷத்துல இந்தியா பல மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கும்னு நம்பறேன்.

//வழக்கம் போல தூங்கிகிட்டு இருந்துருப்பாரு...//
:))) ஆமா ஆமா, இப்போ கூட யாரோ கால மிதிசிட்டாங்க போல. அதன் பாதியில எழுந்திட்டிருக்கார்;)

MJS said...

//லஞ்சம் கொடுத்தவரை விட வாங்கினவரை தானே எப்பொழுதும் குறை கூறுவார்கள். இங்கே மட்டும் ஏன் தலை கீழாக நடக்குது? நாட்டை பற்றியும் கவலை இல்லாமல், தனது கட்சியை பற்றியும் கவலை இல்லாமல் இப்படி பணம் வாங்கும் மந்திரிகளை குறை சொல்வதை விடுத்து மற்றவரை குறை சொல்வதில் என்ன ஞயாயம்?//

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

Sathiya said...

@கோவை விமல்():
ரொம்ப நன்றி விமல். நீங்க எழுதி இருக்கறத படிச்சதும் அப்படி நாயகன் கமல் மாதிரி அழுது ஆனந்த கண்ணீர் விட்டேன்;) நெஞ்ச நக்கிடீங்க!

நான் கவுண்டமணியோட மிகப்பெரிய விசிறி. அவரை அடிச்சுக்க ஆளே இல்லை போங்க! அதான் என் வலைப்பூவுக்கு அவரோட காமெடில வர பேரையே வச்சு, அவரோட படத்தையே போட்டுட்டேன்;)

Sathiya said...

@ஜில் ஜில்:
ஆஹா! ஆரமிச்சிட்டாங்கையா ஆரமிச்சிட்டாங்க;) ரொம்ப நன்றி ஜில் ஜில்.

Anonymous said...

அது '1991'ல் ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்த பொழுது, நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளியல் சீர்திருத்தமே(Economic Reforms) காரணம்
hey wait a sec...
He is considered one of the most influential figures in India's recent history, mainly because of the economic reforms he had initiated in 1991 when he was Finance Minister under Prime Minister Narasimha Rao.
for more info (http://en.wikipedia.org/wiki/Manmohan_Singh) and karur
btw,Rajiv Gandhi died 2 December 1989