(Picture Courtesy: Daily Thanthi)
விஷ்வ ஹிந்து பரிஷத் நேற்று நடத்திய பந்த்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
இந்த படத்தை பார்க்கும் பொழுதே நன்றாக தெரிகிறது, அந்த வாகனத்தில் உள்ளவருக்கும் பந்த்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று. அவர் போது மக்களில் ஒருவர். அவரை போட்டு அடிப்பதாலும், கடைகளை வலுக்கட்டாயமாக அடைப்பதாலும் இவர்கள் நடத்தும் பந்த் வெற்றி அடைந்து விடுமா?
இப்படி பட்ட காரியங்களினால் மக்களிடத்தில் அவர்கள் மதிப்பு இறங்கிவிடுமே தவிர வேறு எந்த பயனும் கிடைக்காது. சரி தானே? இவர்கள் கடையை அடைக்க சொன்னதால் ஒரு கடைக்காரர் தீக்குளித்து வேறு இருக்கிறார்.
பெண்களே இப்படி வன்முறையில் ஈடுபட்டால், அப்பப்பா! நம்ம நாட்டை நினைச்சா பயமா இருக்குதுங்க!
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
9 months ago
12 comments:
அச்சச்சோ இதென்னா ஒண்ணுமே புரியாம இருக்கீங்க. மகளிர் அணி போட்ட குத்தாட்டம்லாம் ரொம்ப நாள் முன்னாலயே நமக்கு பரிச்சயம். புரியலன்னா சுப்பிரமணிய சாமியை கேளுங்க
இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கின்றார்கள்.
வேற என்ன சொல்ல? அரசியல் கட்சிகள் ( எல்லா கட்சிகளும் தான்) தொண்டர்களை இப்போதொல்லாம், குண்டர்களாகத்தான் பயன்படுத்துகின்றன.
உண்மைத்தொண்டர்களை எந்த கட்சியிலும் இனி பார்க்க முடியாது.
வாங்க வெண்பூ! திரைக்கு மறைவா நடக்குற சங்கதிகளை எல்லாம் நானும் படித்திருக்கிறேன், கேள்வி பட்டிருக்கிறேன். இப்படி வெட்ட வெளியில், ஊர் நடுவே, பத்திரிக்கையாளர்கள் தங்களை படம் பிடிப்பதை அறிந்தும் தைரியமாக இந்த மாதிரி அராஜகம் செய்வது எனக்கு இதற்கு முன்னாடி பார்த்தா ஞாபகம் இல்லை.
சரியா சொன்னீங்க ஜோசப்! ஆனா செய்வது என்னவென்று தெரியாமல் செய்ய இவர்கள் என்ன குழந்தைகளா?
இவர்களெல்லாம் அடுத்தவர் உணர்ச்சிகள் மற்றும் உரிமைகளுக்கு மதிப்பளிக்காத கூட்டம் தமிழ் நாட்டில் பி ஜே பி யில் ஒரு சுருட்டைத்தலை பெண்மனி அவங்க பெயர் தெறியாது தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சிகளில் பேசும்போது பார்த்திருக்கிறேன் எதிர்க்கருத்து கூறுபவர்க்கு பேச இடம் கொடாமல் அவர் பேசும்போதெல்லாம் மறித்துப்பேசுவது என்ன அனாகரிகமான செயல் ஒரு பொது நிகழ்ச்சியில் ஒருவரின் பேச்சுரிமைக்கும் உண்ர்ச்சிக்கும் இடம்கொடாமல் நடந்து கொல்வது என்பதை நான் நேராக காணமுடிந்தது. எந்த கொள்கைக்காக பி ஜே பி யை பிடித்து அனைவரும் தொங்குகிறார்கள் என்று தெறியவில்லை. அமர் நாத் கோவிலுக்கு இடம் வேண்டுமானால் அந்த அமர் நாத் சிவனே வந்து கேட்கவேண்டியதுதானே இவர்களுக்கு ஏன் இந்த வீன்வேலை
வாங்க புரட்சி தமிழன்!
பி.ஜே.பியில் இருந்த ஒரே நல்ல தலைவர் வாஜ்பாயீ தான். இந்த அத்வானி கிட்ட ஆட்சி போச்சுன்னா என்ன ஆவும்னே சொல்ல முடியாது. பி.ஜே.பியின் ஒரே ஆயுதம் மதம் தான். அதை வைத்து கொண்டு தான் அவர்கள் அரசியல் செய்கிறார்கள். அதே காரணத்துக்கு தான் எனக்கு அவர்களை பிடிக்காது. இதுல இன்னொரு கொடுமை என்னன்னா, இந்த மாதிரி விஷயத்தை எல்லாம் rediff வலைத்தளத்தில் போடுவதே இல்லை.
இவர்கள் வீரத்தையெல்லாம் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் காட்டினால் ஏதாவது பிரயோஜனம் இருக்கும். ஒரு அப்பாவியை, புள்ள பூச்சியை போட்டு இப்படி அடிப்பதால் என்ன பிரயோஜனம்?
சதியா,
இதை நான் செய்தியில் கவனித்தேன். என்ன செய்வது, ஒரு வன்முறைக்கு இன்னும் ஒரு வன்முறை திர்வு ஆகது, இதை அனைவரும் புரிந்து கொன்றால் சரிதான். இப்பொதெல்லம் எங்களாலும் வன்முறை செய்யமுடியும் என்று பெண்களும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். பாவம் வண்டில வந்தவரு. அவருக்கு எமது அனுதாபங்கள்.
நட்புடன்
--மஸ்தான்
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி மஸ்தான். நீங்கள் சொல்வது சரி. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. இது அவர்களுக்கும் தெரியும். இருந்தாலும் அவர்கள் நடத்தும் பந்த்தை வெற்றி அடைய செய்ய, மக்களை பயமுறுத்தி வெளியில் வராமல் இருக்க செய்ய அவர்கள் கையாளும் முறை இது. இவங்களை எல்லாம் திருத்த முடியாது. கட்டைல போற வயசுலயும் இவங்க அடங்க மாட்டறாங்க! அதற்கு தான் அப்துல் கலாம் இளைய தலைமுறையினரிடம் கவனம் செலுத்துகிறார்.
அண்ணாச்சி இவங்க தொல்லை தாங்க முடியல்.. இங்க இந்தோர்ல ரெண்டு நாளா ஊரடங்கு உத்தரவு போட்டு வெளிய நடக்கக்கூட முடியல..
பத்து,பதினைஞ்சு கொலை வேற நடந்திருக்கு.. எப்போ என்ன நடக்குமோன்னு தெரியல.. வீட்டுக்குள்ளயே அடைபட்டுக் கிடக்கிறோம்..
எங்கயோ பிரச்சினைக்கு(அமர்னாத்) இவிங்க பண்ற அலும்பு தாங்க முடியல.. இதுல இவிங்கதான் ஆளுங்கட்சி வேற..சரியான காட்டுப்பசங்க...
வாங்க தமிழ் பறவை! ஜாக்கிரதையா இருங்க பாஸ்! நிலைமை சரியாகர வரைக்கும் வீட்டுக்குள்ளயே எதையாச்சும் வரைஞ்சு கிட்டு இருங்க இல்ல பதிவ போடுங்க. இவங்க உண்மையிலேயே காட்டுபசங்க தான். மக்கள் ஏன் இவங்களுக்கு திரும்ப திரும்ப வோட்டு போடறாங்கனே புரிய மாட்டேங்குது.
என்ன கொடுமை சார் இது???
//என்ன கொடுமை சார் இது???//
கொடுமையோ கொடுமை;)
Post a Comment