அம்மா காலைல ஏழு மணிக்கு சரியா எழுப்பிடுங்கனு சொல்லிட்டு தூங்க சென்றான் ராமு. அவன் சென்ற அடுத்த நிமிடம், அவன் சொன்னதை டிவி பார்த்து கொண்டே கேட்டு கொண்டிருந்த அவனது அண்ணன் சோமு தன் அம்மாவிடம் ஓடி வந்து, "அம்மா என்னையும் ஏழு மணிக்கு எழுப்பிடுங்க" என்று சொல்லிவிட்டு தூங்க சென்றான்.
மறுநாள் காலை தனது உள்ளுணர்வு எழுப்பி விட 6.45 மணிக்கே எழுந்து விட்டான் சோமு. பின்னர் அம்மா வந்து எழுப்பியதும் எழுந்த ராமு, சோமு ஏற்கனவே எழுந்து விட்டதை பார்த்து கடுப்பாகி போனான். இவர்களை காம்பிளான் குடிப்பதற்காக பல் துலக்க சொல்லி அம்மா எவ்வளோ சொல்லியும் கேட்காமல் மிகவும் பரபரப்பாக அங்கும் இங்கும் உலாத்தி கொண்டிருந்தார்கள்.
கடிகாரத்தையும் வீட்டு வாசலையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தார்கள். நேரம் செல்ல செல்ல அவர்களின் முகத்தில் தெரியும் பரபரப்பும் அதிகரித்து கொண்டே இருந்தது.
ராமு சற்று வேகமாக இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தான். அடிக்கடி தனது இறந்து கால்களையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பின்னி கொண்டு நின்றிருந்தான். ஆத்திரத்தை அடக்க முடியும் ஆனால் அவசரத்தை(புரியுதில்ல?) அடக்க முடியாதுன்னு சொல்வாங்க இல்ல, ஆனால் ராமு அவனது இந்த உத்தியின் மூலம் அதையும் அடக்கி கொண்டு நின்றிருந்தான்.
சிறிது நேரம் கழித்து வாசலில் சைக்கிள் மணியோசை அடிக்கும் சப்தம் கேட்டு இருவரும் விழுந்ததித்து கொண்டு கேட்டை நோக்கி ஓடுகிறார்கள். முட்டி மோதிக்கொண்டு, ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கொண்டு ஓடி சென்றவர்கள் அதே வேகத்தில் உள்ளே ஓடி வருகிறார்கள். முதலில் வந்த சோமு(பெரியவன் ஆயிற்றே) ஒரு ரூமுக்குள் சென்று கதவை தாளிட்டு கொள்கிறான்.
தனக்கிருந்த முழு கடுப்பில் அழுது கொண்டே அம்மாவிடம் சென்று முறையிட்டான் ராமு, "அம்மா! பாரும்மா சிறுவர் மலரை சோமு எடுத்துகிட்டு ரூமுக்குள்ள போயிட்டாமா. தர சொல்லுங்கம்மா!"
(பி.கு. இதுல வர அந்த சோமு நான்தாங்க. இந்த சிறுவர் மலருக்காகவே எங்க அப்பா கிட்ட கேட்டு, அந்த ஒரு நாள் மட்டும் தின மலர் வாங்குவோம். அதுக்கு அப்படி ஒரு சண்டை போடுவோம்;)
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
10 months ago
17 comments:
அவ்வ்வ்வ்!! கொசுவத்தி!!
இங்கயும் இப்படித்தான்! ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்...
mmm.... malarum ninaivugala..... thaangaley pa.... idhey padichutu enaku kannellam koosuthu pa .........
உங்கள் வலைப்பூவின் பன்ச் சூப்பர்!
அன்புடன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
@சிநேகிதன்: வாங்க சிநேகிதன்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! அதெல்லாம் மலரும் நினைவுகள்!!!
@மங்களூர் சிவா: வருகைக்கும், அந்த சிரிப்புக்கும் நன்றி சிவா;)
@ஸ்ரீலேகா: கண்ணு கூசுதா? கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்ல வெளிச்சத்தை கொஞ்சம் கம்மியா வச்சுட்டு படிங்க;)
@அறுவை பாஸ்கர்: வாங்க பாஸ்கர்! மொத்தத்துல பஞ்ச் மட்டும் தான் நல்லா இருக்குன்னு சொல்றீங்களா;) வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாஸ்கர்!
saringa anna velichathai koraichutom
எனக்கும் இப்படிப்பட்ட அனுபவம் இருக்கு சிறு வயதில், எங்கள் வீட்டில் வாங்குவதிலை, ஆனால் வெள்ளி ஆனால் போதும் அடுத்த வீட்டு மாமா வீட்டில் (தின மலர் வாங்கும் வீடு) (சொம்மா 6 மணி நேரம் கிரிக்கெட் விளையாடித்து தண்ணி குடிக்க சண்டை போடுவோமே நண்பர்களுடன்) அதுபோல நிற்பேன். :-))
இப்போ கூட நேரம் கிடைத்தால் இணையத்தில் சிறுவர் மலர் படிப்பேன் :-))))
Oh nice blog.Came to know about your blog from illatharasis's only today.Very interesting.Though I cant write Tamil I can nicely read and enjoy.Both of you doing great work.
@கோவை விமல்:
//சொம்மா 6 மணி நேரம் கிரிக்கெட் விளையாடித்து தண்ணி குடிக்க சண்டை போடுவோமே நண்பர்களுடன்//
ஆமாங்க...நீங்க சொன்னவுடனே தான் ஞாபகம் வருது;) ஒவ்வொருத்தன் ஒரு சோம்பு தண்ணிய வாயில இருந்து வெளிய எடுக்காம அப்படியே முழுசா குடிக்கறத பார்த்து எரியும் பாருங்க;)
@Solai: Thank you very much Solai!
தம்பிகிட்ட சண்டை போட்டு சிறுவர் மலர் வாங்கி படித்ததை பதிவாக போட்ட சத்யா அண்ணன்..வாழ்க..வாழ்க...
சத்யா அண்ணே..வாணி அண்ணி கொடுத்த அவார்ட் இப்ப உங்களுக்கு கொடுத்துருக்கேன்...ப்ளாக வந்து பாருங்க...
வாங்க வித்யா! வாழ்த்துக்கு நன்றி!
இந்த அவார்ட் கொடுக்கறத இன்னும் நிறுத்தலையா;) ஆனா இந்த அவார்டோட தலைப்பு நல்லா இருக்கு: "Blogging Friends Forever". ரொம்ப ரொம்ப நன்றி தங்கச்சி!
எனக்கு என்னவோ சின்ன வயசுலேந்தே வாரமலர் துணுக்கு மூட்டை படிக்க தாங்க ஆர்வம். ஒரு வேலை பாப்பாவா இருக்கும் போது படிக்க தெரிஞ்சி இருந்தா சிறுவர் மலர் படிச்சி இருப்பேன் !!
ஆனா ஒண்ணுங்க, இந்த மாதிரி விசயத்துக்கு சரியா எழுந்துப்போம் !
******கால்களையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பின்னி கொண்டு*****
***சிநேகிதன்...இங்கயும் இப்படித்தான்!***
நீங்களுமா ?
enna ana roma naala aalai kanom!
Konjam velaila busyaa irukken. Adhaan! Thalaivar padam kooda paarka mudiyala!
@அவனும் அவளும்: வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிங்க!
//ஆனா ஒண்ணுங்க, இந்த மாதிரி விசயத்துக்கு சரியா எழுந்துப்போம் !//
சரியா சொன்னீங்க;)
//******கால்களையும் ஒன்றன் மீது ஒன்றாக வைத்து பின்னி கொண்டு*****
நீங்களுமா ?//
எனக்கு தெரிஞ்சு எல்லாருமே இந்த டெக்னிக் தான் யூஸ் பண்ணுவாங்கனு நினைக்கிறேன்;)
same blood. aana young world.. I used to grab it, color the picture before my little sister does ;) Konjam settai than.
@Deekshanya: Ikkaraikku Akkarai Pachai:)
Post a Comment