அணுசக்தி ஒப்பந்தம் சரியா தவறா என்று ரொம்ப நாளா எனக்கு குழப்பமாகவே இருந்தது. அதுக்கு தான் என் வலைப்பூவில் கூட ஒரு ஓட்டு எடுப்பை போட்டு பார்த்தேன். ஆனால் இப்போ எனக்கு அது தெளிவாகி விட்டது.
இது வரை அணுசக்தி பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட இதைப்பற்றி நிறைய அறிக்கைகள் விட்டுள்ளார்கள். அதை எல்லாம் என்னால் முழுமையாக நம்ப முடியவில்லை. இப்பொழுது நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களே அணுசக்தி ஒப்பந்தம் சரிதான் என்று சொல்லியுள்ளார். இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்களில் நான் பெருதும் மதிப்பவர் திரு அப்துல் கலாம் அவர்கள். அவர் ஜனாதிபதியாக இருக்கும் பொழுது தனது உறவினர்கள் வந்து தன்னுடன் ஜனாதிபதி மாளிகையில் தங்கியதற்கு வாடகை கொடுத்தவர் அவர். எல்லாவற்றிற்கும் மேல், இந்தியாவின் அணுசக்தி தொழில்நுட்பத்தின் தந்தை அவர்.
அவரே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை தான் படித்து பார்த்ததாகவும், அது தேசிய நலனுக்கு நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும் இதை பற்றி படிக்க இங்கே சொடுக்கவும்.
சமாஜ்வாடி கட்சி தலைவர் திரு முலாயம் சிங்க் மிகவும் நல்ல காரியத்தை செய்துள்ளார். இதை வேறு யாரவது முன்னமே செய்திருக்கலாம். முலாயம் சிங்க் தனக்கு தெரியாத விவரங்களை, விவரம் தெரிந்த ஒருவரிடம் கேட்டு அறிந்துள்ளார். விஷயமே தெரியாவிட்டாலும் தெரிந்த மாதிரி காட்டி கொள்ளும் அரசியல் வாதிகளின் மத்தியில், இவர் செய்திருப்பது பாராட்டத்தக்கது.
இதற்கு இடது சாரிகள் என்ன சொல்ல போகிறார்களோ?
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
9 months ago
10 comments:
இரண்டு வருசத்துக்கு பிறகு ஒரு வழியா முடிஞ்சுரும் போல இருக்கு...
:-))
தட்ஸ்தமிழ் ஆசிறியர் ஏ.கே கான் அருமையா விளக்கி எழுதிக்கிட்ட்டு வராரு...புத்தர் சிரித்தார் அப்படீன்னு ஒரு தொடர்...அதனை படிங்க....
:))
முலாயம் சிங் பக்கா அரசியல்வாதி. அணு ஆயுதம் பற்றி திரு அப்துல் கலாம் அவர்களின் நிலை அனைவரும் அறிந்ததே. அவர்கள் இப்போது அவரிடம் சென்று கேட்டது எல்லாம் அவர்களின் மன மாற்றத்திற்கு ஓர் வலு சேர்க்க மட்டுமே. "திரு கலாம் அவர்களே சொல்லி விட்டார் அதனால் செய்கிறோம்", என்று சொல்லிக்கொள்ளலாம்.
கூடவே, இன்னொன்றையும் கூறி விடுகிறேன். கலாம் அவர்கள் ஒரு அரசியல்வாதி அல்ல. அவர் நாட்டு நலனுக்காகவே செந்திப்பவர், செயல்படுபவர். அவரைக் கூட வைத்துகொண்டு யாரும் அரசியல் செய்ய முடியாது. நேர்மை, நீதி, ஒழுங்கு, கட்டுப்பாட்டு என்று இருப்பவரை வைத்து கொண்டு எப்படி செய்ய முடியும் அரசியல்?
@வழிப்போக்கன்:
//இரண்டு வருசத்துக்கு பிறகு ஒரு வழியா முடிஞ்சுரும் போல இருக்கு//
ஆமாங்க! முடிஞ்சா நல்லது. உருப்படியா மத்த பிரச்சனைகளை கவனிக்கலாம்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@செந்தழல் ரவி:
உங்க பெயர் ரொம்ப நல்லா இருக்கு! கண்டிப்பா படிக்கிறேன். வருகைக்கும், கருத்துக்கும், தகவலுக்கும் நன்றி!
@தளபதி:
//முலாயம் சிங் பக்கா அரசியல்வாதி//
ஆமாங்க அவரும் எல்லார் மாதிரியும் ஒரு பக்கா அரசியல் வாதிதான். நீங்க சொன்னது சரியே. எது எப்படியோ, இவர் இப்படி செய்தது எல்லார் வாயையும் அடைத்தது போல் ஆகி விட்டது! இனிமே மக்களை ஏமாத்த மத்தவங்க எல்லாரும் ஒக்கார்ந்து யோசிக்கணும்;)
//அவர் நாட்டு நலனுக்காகவே செந்திப்பவர், செயல்படுபவர்.//
சரியா சொன்னீங்க. என்னையும் உங்களையும் சேர்த்து நமது நாட்டில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் அவர். அவர் தமிழன் என்பதில் எனக்கு பெருத்த மகிழ்ச்சி! அவர் இருக்கும் போது தான் ஜனாதிபதி என்று ஒருவர் நம் நாட்டில் இருக்கிறார் என்பதை உணரவே முடிந்தது
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தளபதி!
சத்யா..
எனக்கு ஒண்ணுமே புரியலீங்க!! நாட்ல நடக்கறதெல்லாம் பாத்தா பேசாம.. ப்ச்.. வேண்டாம்...
(என் கூட ரொம்ப கோவிச்சுட்டீங்க போல.. போய் பாருங்க பதில் சொல்லீட்டேன்!)
வாங்க கிருஷ்ணா! இதையெல்லாம் நெனச்சா எனக்கும் அதே 'ப்ச்' தான்....
(நானும் பதில் சொல்லிட்டேன்! கோவமா? நீங்க வேற! என் பொண்டாட்டிய தவிர என் கோவத்தை இதுவரை யாருமே பார்த்திருக்க மாட்டாங்க;)
hey Sathiya...Bumped in thru Tamizhini's blog!!
very impressive!!
keep up the good work..m adding u in my blog roll!
//hey Sathiya...Bumped in thru Tamizhini's blog!!
very impressive!!
keep up the good work..m adding u in my blog roll!//
Welcome here Suhanya! Thank you very much for the Compliments and adding me in your blog roll!
@செந்தழல் ரவி:
நீங்க சொன்ன அந்த புத்தர் சிரித்தால் தொடரை படிச்சேன்! ரொம்ப அழகான, உபயோகமுள்ள தொடரா இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!
அதன் லிங்க்:
http://thatstamil.oneindia.in/editor-speaks/2008/07/0704-billions-to-flow-if-indo-us-deal-approved.html
Post a Comment