Monday, July 21, 2008

ஒரு சமூக சேவகரின் டைரி குறிப்பில்...

ஒரு நல்ல கிரிக்கெட் பிளேயரின் திறமையும் சரி, ஒரு நல்ல நடிகர் அல்லது பாடகரின் திறமையும் சரி, அவர்களின் சிறு வயதிலேயே வெளிப்படும். அது போல் ஊருக்கு உழைக்கும் ஒரு சமூக சேவகரின் சமூக சேவையும் அவரது சிறு வயதில் இருந்தே தொடங்கிவிடும். அப்படி பட்ட ஒரு சமூக சேவகரின் சிறு வயதில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வினை பற்றி இப்போது பார்ப்போம்.

இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சிங்கார சென்னையில் தான். இவரது ஊருக்கு உழைக்கும் பணி சிறு வயதில் இருந்தே தொடங்கிற்று. இவர் வசித்து வந்த தெருவில் யாருக்கு என்ன வேலை ஆக வேண்டி இருந்தாலும் இவரை கூப்பிட்டு தான் செய்ய சொல்லுவார்கள்.

காய்கறி அங்காடிக்கு சென்று கை கறிகள் வாங்க வேண்டுமா, மாவு மில்லுக்கு சென்று மாவு அரைத்து கொண்டு வரவேண்டுமா, ரேஷன் கடைக்கு சென்று பொருகள் வாங்க வேண்டுமா, இவை அனைத்திற்கும் அத்தெருவில் இருப்பவர்களின் நினைவிற்கு முதலில் வருபவர் இவர் தான். தான் விளையாடிக்கொண்டிருந்தாலும் அவர்கள் பேச்சை தட்ட முடியாமல் விளையாட்டை நிறுத்தி விட்டு சென்று அந்த வேலைகளை முடிப்பார். அவர்கள் புகழ்ந்து கூறும் இரு வார்த்தைகளே இவருக்கு டானிக். தன் அம்மாவே எத்தனையோ முறை கண்டித்தும் இவரது இந்த பணி தொடர்ந்து கொண்டிருந்தது.

இவர் இவ்வளவு உதவிகள் செய்தும், மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்த உதவி இது தான்:

ஒரு நாள் இவரது வீட்டிற்கு பக்கத்து தெருவில் உள்ள நண்பர் ஒருவர் அனுப்பிய ஆள், இவர் வீட்டிற்கு வந்து இவரது அம்மாவிடம் நூறு ரூபாய் கொடுத்தால் ரேஷன் கடையில் இருந்து அட்டை இல்லாமல் சர்க்கரையும், மண்ணெண்ணையும் வாங்கி தருவதாக சொன்னார். அவர் அந்த ரேஷன் கடையில் வேலை பார்ப்பவர் ஒருவரின் சொந்தக்காரர் என்பதால் அது சாத்தியம் என்றார். அப்பொழுதெல்லாம் ரேஷன் கடையில் சர்க்கரையும், மண்ணெண்ணையும் தான் ரொம்ப டிமான்ட். எவ்வளவு கொடுத்தாலும் வாங்கி வச்சுக்குவாங்க.

சரி என்று இவரது அம்மாவும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அந்த நபரிடம் நூறு ரூபாய் பணம் கொடுத்து, ஒரு மஞ்சா பை மற்றும் கிருஷ்ணாயில் கேனுடன் தன் மகனையும் உடன் அனுப்பி வைத்தார். சிறிது தூரம் சென்றதும் அந்த நபர் அச்சிறுவனிடம் வேறு யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் கூட அவர்களுக்கும் வாங்கி கொடுக்கலாம் என்றார். நம்ம ஆள் தான் ஊருக்கு உழைப்பவர் ஆயிற்றே. அக்கம் பக்கத்தில் இருக்கும் தெரிந்தவர்களின் வீட்டிற்கு எல்லாம் அழைத்து சென்று அனைவரிடமும் பணமும், கிருஷ்ணாயில் கேனும், பையும் வாங்கி கொண்டார்கள். அனைவருக்கும் உதவி செய்வதை நினைத்து பெருமையுடன் ரேஷன் கடையை நோக்கி நடை போட்டார்.

ரேஷன் கடை நெருங்கியதும், அந்த நபர் இவரிடம் உள்ள கேன் மற்றும் பைகளை வாங்கி கொண்டு இவரை வீட்டிற்கு செல்லுமாறு கூறினான். இவர் உடன் வந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்பதால் அவ்வாறு கூறினான். அனைவருக்கும் உதவிய மன நிறைவில் இவர் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றுவிட்டார்.

விளையாடி முடித்து ஆறு மணிக்கு மேல் வீட்டிற்கு கிளம்பினார். வீட்டில் இன்று தனக்கு தனி மரியாதை கிடைக்கும் என்ற பெருமிதத்துடன் சென்றார். அப்பாவும், அம்மாவும் இவருக்காக கேட்டின் அருகிலேயே காத்து கொண்டிருந்தனர். இவரை கண்டதும், இவரின் அப்பா "எங்கடா போன இவ்வளோ நேரமா?" என்று கேட்டார். இவரும் கிரிக்கெட் விளையாடி விட்டு வருவதாக சொன்னார். பின் உள்ளே வாடா என்று சொல்லி விட்டு போன தந்தையை பின் தொடர்ந்தார்.

இவர் உதவி செய்த யாரோ ஒருவர் இவரை பார்க்க உள்ளே இருக்கார் போல என்று ஆவலாக சென்றார். உள்ளே சென்று தன் தந்தையிடம் அறை மணி நேரம் ரிவிட் வாங்கிய பின் தான் இவருக்கு அந்த ரேஷன் கடை நபர் ஒரு ஏமாத்து பேர் வழி என்று தெரிந்தது. அம்பையே இந்த வாங்கு வாங்குறாரே அப்பா, எய்த வில்லை என்னா வாங்கு வாங்கி இருப்பார் என்று பரிதாபமாக பக்கத்தில் நின்று கொண்டிருந்த தன் அம்மாவை நினைத்து மனதை தேற்றி கொண்டார்.

இதுக்கப்புறமாவது இவரிடம் வேலை வாங்குவதை நிறுத்தினார்களா? இல்லை. இவரால் ஏமாந்து போனதால் அதை சரி கட்டுவது போல் இன்னும் அதிகமாக வேலை வாங்க ஆரமித்து விட்டார்கள். இப்படி தன் சிறு வயதிலேயே தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்தி கொண்ட அந்த தியாகி வேறு யாரும் இல்லை, அடியேன் தாங்க!

பி.கு. மொக்கைக்கு மன்னிக்கவும்;)

9 comments:

தமிழினி..... said...

//இப்படி தன் சிறு வயதிலேயே தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்தி கொண்ட அந்த தியாகி வேறு யாரும் இல்லை, அடியேன் தாங்க!
//

அடி!!!!!

நான் கூட உண்மையில ஏதோ ஒரு நல்ல உருப்படியான சமூக சேவகர பத்தி தான் எழுதி இருக்கீங்க னு நெனச்சேன் படிக்க ஆரம்பிச்சதும்!!!!இப்படி மொக்கை யா முடிப்பிங்க நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!! :))

//காய்கறி அங்காடிக்கு சென்று கை கறிகள் வாங்க வேண்டுமா, மாவு மில்லுக்கு சென்று மாவு அரைத்து கொண்டு வரவேண்டுமா, ரேஷன் கடைக்கு சென்று பொருகள் வாங்க வேண்டுமா, இவை அனைத்திற்கும் அத்தெருவில் இருப்பவர்களின் நினைவிற்கு முதலில் வருபவர் இவர் தான். தான் விளையாடிக்கொண்டிருந்தாலும் அவர்கள் பேச்சை தட்ட முடியாமல் விளையாட்டை நிறுத்தி விட்டு சென்று அந்த வேலைகளை முடிப்பார்.//

அநியாயத்துக்கு நல்லவரா இருந்து இருக்கீங்க,சின்னதுல!! சரி,இப்ப எப்படி!?? ;)))

வெண்பூ said...

தியாகி சத்யா வாழ்க...தியாகி சத்யா வாழ்க...தியாகி சத்யா வாழ்க...

Srikitchen said...

sathiya anna.... too much! samuga sevagar.. yaru? neenga? yenpa! samuga sevai panravan munjiya partha theriyadha.... yaru yaru epidi pattavanganu... ada indha cinemakaranga than vilambarathukaka yetho seyringana neengaluma....

apo irundhey kepmari veali ellam parthu irukingey...

unga kudumbathuku dubailey 10 petrol kinaru iruka... sing in the rain...

சின்னப் பையன் said...

:-))))))

Sathiya said...

@தமிழினி: இப்போவெல்லாம் அந்த மாதிரி ரொம்ப கிடையாது வித்யா. கொஞ்சம் பட்டிருக்கேன், அதான்! ஆனா இப்பவும் நமக்கு இந்த 'நோ' சொல்வது என்பது ரொம்ப கடினமானது.

@வெண்பூ: வாங்க வெண்பூ! நன்றி நன்றி நன்றி!

@ஸ்ரீலேகா: இந்த மாதிரி ஊருக்கு ஒரு தங்கச்சி இருந்தா போதும், வெளங்கிடும்!

//samuga sevai panravan munjiya partha theriyadha//
அது சரி! மூஞ்சிய பார்த்து சொல்ல இது என்ன அழகி போட்டியா? ஒரு நடிகரையே இப்போவெல்லாம் மூஞ்சிய பார்த்து சொல்ல முடியாது. அப்படியே இருந்தாலும் நீங்க தான் என் மூஞ்சிய பார்த்ததே இல்லையே;)

//unga kudumbathuku dubailey 10 petrol kinaru iruka... sing in the rain...//
Same Blood!

MJS said...

// இப்படி தன் சிறு வயதிலேயே தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்தி கொண்ட அந்த தியாகி வேறு யாரும் இல்லை, அடியேன் தாங்க! //

தியாகி,சமூகசேவகர் என்றெல்லாம் நாங்க தாங்க சொல்லணும். நீங்களே உங்களை சொல்லக்கூடாது.

//அதான்! ஆனா இப்பவும் நமக்கு இந்த 'நோ' சொல்வது என்பது ரொம்ப கடினமானது.//

தங்கமணிக்கு 'நோ' சொல்வது ரொம்ப கடினமா இல்ல மத்தவங்களுக்கு 'நோ' சொல்வது ரொம்ப கடினமா???????? தங்கமணிகிட்டே கேட்டா தான் தெரியும்.

யாத்ரீகன் said...

romba serious-ah yedhirpaarthu vandha :-)))))) is it Vadakupatti ramasami ?!

Sathiya said...

@ஜில் ஜில்:
//தியாகி,சமூகசேவகர் என்றெல்லாம் நாங்க தாங்க சொல்லணும். நீங்களே உங்களை சொல்லக்கூடாது//
சரிங்கோவ்! நீங்களே சொல்லிடுங்க!

//தங்கமணிக்கு 'நோ' சொல்வது ரொம்ப கடினமா இல்ல மத்தவங்களுக்கு 'நோ' சொல்வது ரொம்ப கடினமா???????? தங்கமணிகிட்டே கேட்டா தான் தெரியும்.//
தங்கமணிக்கு 'நோ' சொல்வது ரொம்ப சுலபம். எத்தனை நோ வேணும்னாலும் சொல்லுவேன். ஆனா என்ன

@யாத்ரீகன்: வாங்க யாத்ரீகன்! வடக்குபட்டு ராமசாமியே தான்...இனிமே சீரியஸா எழுதறேங்க;)

Hindu Marriages In India said...

Padikka nandraaka irunthathu.