என் நண்பர் ஒருவர் மின் அஞ்சல் மூலம் இதை எனக்கு அனுப்பி இருந்தார். பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியலை. அதான் யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்னு இங்க போட்டுட்டேன்.
நம்ம ஆளுங்களுக்கு கற்பனை குதிரை கன்னா பின்னானு பறக்குது. இருந்தாலும் இது கொஞ்சம் ஓவரு. நல்ல வேலை நம்ம கருப்பு எம்.ஜி.ஆர்(அப்படிதான் சொல்லிக்கறாங்க) இதில் போட்டுருக்குற வேடங்களுக்கு சொந்தகாரங்க இப்போ உசுரோட இல்லை. இருந்து இதை பார்த்திருந்தாங்கனா தேவை இல்லாத கொலை பழி கேப்டனுக்கு வந்திருக்கும்.
இந்த போஸ்டரை செஞ்சவங்க உண்மையிலேயே இவர் கட்சி தானா? பின்ன எதுக்கு இவர வச்சு இப்படி காமெடி பண்றாங்க?
ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா...இப்பவே கண்ண கட்டுதே! டமிலன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா!
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
9 months ago
9 comments:
அவர் மென்பொருள் நிபுணராக வந்து தீவிரவாதத்துக்கு எதிரான மென்பொருள் கண்டுபிடித்து தூள் கிளப்பியதை பார்த்துள்ளீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
யார் யார் வேடம் என அடையாளம் தெரியாமல் பார்பவர்கள் தடுமாறிவிடப் போகிறார்கள் என்று மேல்குறிப்பில் தலைவர்களின் பெயரையும் குறிப்பிட்டு இருக்கிறார்கள் !
நீங்கள் என்ன நையாண்டி பண்ணினாலும் நாங்க அசரமாட்டோம்ல என்றிருப்பவர்களை என்ன செய்யலாம்
டோண்டு ராகவன்--> வருகைக்கு நன்றி. உங்க பதிவையும் பார்த்து ரசித்தேன். கேப்டன் இப்படி எடுப்பார் கைப்புள்ளையா ஆயிட்டாரே;)
கோவி கண்ணன்--> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ரொம்ப சரியா சொன்னீங்க. இதுல என்னை ரொம்பவும் உறுத்தினது பாரதியார் வேஷம் தான். டமில் தாகத்திலே பாரதியாராம்;)
கோமா--> அப்படி அசராமல் இருப்பவர்களை அவர்களின் போக்கிலேயே விட்டுவிட்டு, இப்படி பதிவ போட்டு குஷியா இருக்க வேண்டியது தான்;)
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Wireless, I hope you enjoy. The address is http://wireless-brasil.blogspot.com. A hug.
ஹா..ஹா.. :))))))))
பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றிகள் சத்யா:)
Wireless--> Thanks for the comments wireless.
ரசிகன்--> வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரசிகன்!
Unequivocally, excellent answer
ennaikum captain captain thaan...
captaina pathu siricha.. azhivu than
Post a Comment