தம் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் ஸாரி சத்தியா மீண்டும் PIT புகைப்படப் போட்டிக்காக தன் படத்தை பதிவிட்டான்;)
காஞ்சிபோன பூமி எல்லாம் வற்றாத நதியை பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போயிட்டா? துன்ப படரவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா அந்த தெய்வமே கலங்கி நின்னா, அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?
போட்டில கலந்துக்குற நாங்கெல்லாம் எங்க படத்த விமர்சனம் செய்ய அந்த நடுவர்கள் கிட்ட முறையிடுவோம், ஆனா அந்த நடுவர்களே களத்துல இறங்குனா, இந்த கத்துகுட்டிகளுக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்;) ரொம்ப பேசிட்டேனோ? ரைட் விடு ஜூட்!
மேலே உள்ள படம் தமிழில் புகைப்படக்கலை வலைப்பூவில் நடத்தப்படும் போட்டிக்காக பதிக்கப்பட்டது.
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
9 months ago
6 comments:
ஐயோடா சாமி... தனிமைன்னா இது தனிமை .....சுத்து வட்டாரத்திலே எட்டுப் பட்டிக் கடலேயும் ஒரு ஈ காக்கா இல்லேடா....இந்த நாட்டாமை சொல்றேன் பரிசு உங்களுக்குத்தான்.....[யாரோ கத்ற மாதிரி இருக்கே"நாட்டாமே!!!! தீர்ப்பை மாத்திச் சொல்லு "]
அது எப்படி? நாட்டமை தீர்ப்புக்கு மறு பேச்சு கிடையாது. இந்த நாட்டமை தீர்ப்புக்கு எட்டு பட்டி சனமும் கட்டு பட்டே ஆகணும். ஆரு கட்டு படலைன்னாலும் அவிங்கள இந்த ஊரு விட்டே ஒதிக்கி வைக்கிறோம். அவங்களுக்கு ஆரும் தண்ணி கொடுக்க கூடாது, இட்லிக்கு சட்னி கொடுக்க கூடாது, தலை வார சீப்பு கொடுக்க கூடாது;) வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கோமா. இதுவே பரிசு கிடைத்த மாதிரி இருக்கு எனக்கு;)
சத்தியா..
உங்க படமும் அழகு. அவ்வளவு உயரத்தில எடுக்க, எங்கே இடமிருந்தது?
நன்றி சிவா. இது பயணிகள் கப்பலில்(Star Cruise) போகும் போது எடுத்தது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவிற்கு நடுவில்.
//நன்றி சிவா. இது பயணிகள் கப்பலில்(Star Cruise) போகும் போது எடுத்தது//
இந்த கமெண்டையும் உங்க ப்ரொஃபைல் படத்தையும் இணைச்சு பாக்கறேன். டைட்டானிக் படத்துல லியானர்டோ டிகேப்ரியோ ரோல்ல நம்ம கவுண்டர் நடிச்சிருந்தா எப்படி இருக்கும்னு...காலங்காத்தால சிரிப்பை அடக்க முடியலை.
:)
ஓடம் படமும் நல்லாருக்கு. வாழ்த்துகள்.
நன்றி கைப்ஸ்! நானும் நீங்க சொன்னத நெனச்சு பார்த்தேன், சிரிப்பு தாங்கல;) நீங்க சொன்ன இந்த ரோல கௌண்டர் பொன்னுவீட்டுக்காரன் படத்துல விசித்ரவோட செய்திருப்பார். பாருங்க!
Post a Comment