இந்த விஜய் டிவி வந்ததுக்கப்புறம் சன் டிவி பக்கமே இப்போவெல்லாம் போறது இல்ல. சன் டிவில போடற அழுகாச்சி மெகா சீரியல்ல இருந்து ஒரு வழியா வெளிய வந்தாச்சு, வந்து ஒரு ஆறு மாசம் இருக்கும். ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் சிங்கப்பூர்ல விஜய் டிவி ஒளிபரப்ப ஆரமிச்சாங்க. இந்த கால யூத், குழந்தைகள், பெரியவர்கள் எல்லாரும் ரசித்து பார்க்குற மாதிரி எல்லாமே நல்ல நல்ல ப்ரோக்றாம்ஸ்.
இதுல என்ன ரொம்ப கவர்ந்த ஒரு ப்ரோக்ராம்னா அது கனா காணும் காலங்கள் தான். நம்மளுடைய பள்ளி பருவத்த அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்து காட்றாங்க. ஆபீஸ் விட்டு வந்ததுக்கப்புறம் ஒரு அரை மணி நேரம் நல்லா சிரிக்க முடியுது. இந்த மாதிரி ஒரு சீரியல தான் நான் இவ்வளவு நாள் எதிர் பார்த்துக்கிட்டு இருந்தேன். இந்த கனா காணும் காலங்களோட இயக்குனர உண்மையிலேயே பாராட்டனும். நல்லா ரசிச்சி, அனுபவிச்சு எடுக்கறாரு. ஒவ்வொரு கேரக்டருக்கும் பொருத்தமா ஆளை பிடிச்சி போட்டுருக்காரு. எல்லாருமே நல்லா யதார்த்தமா நடிக்கிறாங்க.
சரி ஆறு மாசம் ஆச்சே நம்ம சன் டிவி சீரியல் எல்லாம் எந்த நிலைமைல இருக்குன்னு பார்க்கலாம்னு கொஞ்சம் சேனல மாத்தி பார்த்தேன். ஆனந்தம்ல நம்ம சுகன்யா ஆன்டி அவங்க மாமியார் சவத்த வச்சு வில்லியோட ஏதோ மத்தியஸ்தம் பண்ணி கிட்டு இருந்தாங்க. கொடுமைடானு மாத்திட்டேன். அப்புறம் கோலங்கள். ஒரு வழியா இரண்டு வருஷ எபிசோடுக்கப்புறம் நம்ம தேவயானிக்கு அவங்க அப்பா யாருன்னு தெரிஞ்சிடுச்சி போல. ஆனா இதுல பார்த்தீங்கனா ஒருத்தியும் அவ புருஷனோட இருக்க மாட்டா. இத பார்த்தா எப்படீங்க குடும்பம் உருப்படும்? அடுத்து நம்ம ராதிகாவோட அரசி. ராதிகாக்கு எதுக்கு இந்த வயசுல இதெல்லாம்? அதுவும் டபுள் ஆக்ஷன் வேற. அரசி என்ன ஆச்சுன்னு பார்க்கலாம்னு மாத்தி ஒரு இரண்டு நிமிஷம் தான் இருக்கும், அதுக்குள்ள ஒரு பாம் வெடிச்சு அம்மா ராதிகா ஹாஸ்பிடல்ல இருக்காங்க. என்ன கொடுமை சார் இது? அந்த சினிமாக்காரங்க தான் அப்படீன்னா இங்கயுமா? ஆனா ஒரு விஷயங்க. இந்த சீரியல் எல்லாம் எத்தனை நாள் கழிச்சு பார்த்தாலும் எங்க விட்டமோ அங்கயேதான் இருக்கு.
இதெல்லாம் பார்த்துட்டு கனா காணும் காலங்கள் மாதிரி ஒரு நல்ல சீரியல பார்த்தவுடனே பாராட்டணும்னு தோணுச்சு. அதான் இந்த பதிவு. இதுல வெறும் சிரிக்க மட்டும் வைக்காம எப்படி கடமைக்காக படிக்காம காதலிச்சு படிக்கனும்னு அழகா சொல்லி தராங்க. ஆனா அந்த வயசுல யாருங்க படிப்ப காதலிப்பா;)
2 comments:
hmm....neenga solradhum seri dhaan...adhai vida oru comedy na,adhu Jodi No.1 thaan....adhullla simbhu dhaaan comedy track otturadhu...time kedaichaa miss pannama paarunga...
ஆமாம் சிம்பு இந்த ப்ரோக்ராம ரொம்ப நல்லா யூஸ் பண்ணிகிட்டான். வாரா வாரம் மறக்காம பார்க்கிறேன். மிஸ் பண்ணாலும் டவுன்லோட் பண்ணி பார்க்கிறேன்.
Post a Comment