இந்த விஷயம் ஒரு வாரமா பரபரப்பா தமிழ் நாட்டுல நடந்துக்கிட்டிருக்கு. மருத்துவ படிப்பு காலத்தை 51/2 ஆண்டில் இருந்து 61/2 ஆண்டாக உயர்த்துவதை எதிர்த்து தமிழ் நாட்டுல இருக்க எல்லா அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்திட்டு இருக்காங்க. இந்த விஷயத்தை சில பேர் அரசியலாக்கி ஆதாயம் தேடுறாங்க.
ஆனா உண்மையிலேயே மாணவர்களுக்கு என்ன பிரச்சனை? மருத்துவ படிப்பு காலம் 51/2 ஆண்டில் இருந்து 61/2 ஆண்டாக உயர்த்தப்படுவதாக இருந்தால் அவர்களின் போராட்டம் சரியே. ஆனால் உண்மை இதுவல்ல என்று சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையானால், 51/2 ஆண்டு படிப்பு முடிந்த பின் 1 வருடம் அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்கும் திட்டமே இது. அதுவும் முதல் 4 மாதம் கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அடுத்த 4 மாதம் தாலுகா மருத்துவமனையிலும், கடைசி 4 மாதம் மாவட்ட மருத்துவமனையிலும் பணியாற்ற வேண்டும் என்று 'அறிக்கை' தாஸ் (டாக்டர் ராமதாஸ்) சொல்கிறார். இதுல 4 மாதம் மட்டும் தான் கிராமத்தில் பணி புரிய வேண்டுமாம். இத செய்ய இவங்களுக்கு என்னவாம்? இவங்களுக்கு கிராமத்துல கிடைக்கிற அனுபவம் வேற எங்க கிடைக்கும்!
அது மட்டும் இல்லாம ரூ. 8,000 ஊக்கத் தொகையாக வேற தராங்களாம். அப்புறம் என்னங்க பிரச்சனை இவங்களுக்கு? எனக்கு தெரிஞ்சு நிறைய எம்.பி.பி.எஸ் படிச்ச டாக்டருங்க வேலை கிடைக்காம சுத்திட்டு இருக்காங்க. இன்னும் நிறைய பேர் ரொம்ப கம்மியான சம்பளத்துல சின்ன சின்ன வேலை பார்த்துட்டு இருக்காங்க. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, மெரிட்ல சீட் வாங்கி படிக்க வந்த எந்த மாணவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். எம்.பி.பி.எஸ் படிக்க பல லட்சம் பணம் செலவு செய்து விட்டு, படித்து முடித்தவுடன் மேல் படிப்பிற்காக மேலை நாடுகள் செல்ல திட்ட மிட்டிருக்கும் மாணவர்கள் தான் இதை எதிர்ப்பவர்கள் என்று நினைக்கிறேன். எம்.பி.ஏ படிக்க இரண்டு வருடம் வேலை அனுபவம் கேட்கிறார்களே, அது போல இவங்களுக்கு ஒன்னும் கிடையாதா? இதை விசாரிக்க சாம்பசிவராவ் குழுன்னு ஒன்னு அமைச்சு இருக்காங்களாம். அவங்க பல ஊர்ல கருத்து கேட்டுட்டு இங்க வந்து, தமிழ் நாட்ட தவிர வேற எங்கேயும் இந்த மாதிரி எதிர்ப்பு தெரிவிக்கலைன்னு சொல்றாங்க.
இந்த திட்டம் இன்னும் சட்டமாக கொண்டு வரலை, அதுக்குள்ள எதுக்கு இந்த போராட்டம்? அப்படியே வந்தாலும், அது இனிமே எம்.பி.பி.எஸ் படிக்க வரவங்களுக்கு தானே பொருந்தும்? இதை எல்லாம் முதல்ல அரசாங்கம் தெளிவுப் படுத்தனும். அப்படி தெளிவு படுத்துன பிறகும் இந்த போராட்டம் தொடர்ந்துச்சுனா இந்த பய புள்ளைங்க வேலைக்கு ஆக மாட்டாய்ங்க! இதுல எனக்குத் தெரியாத மறைந்து கிடக்கும் ரகசியம் ஏதாவது இருந்தால் சொல்லுங்க. கேட்டுக்கறேன்!
5 comments:
என் friends சிலர் இந்த மருத்துவ துறையில இருக்காங்க..அவங்க கருத்து என்ன னு பார்த்திங்கன்னா நல்ல மருத்துவ மனையில house surgeon பண்ணா தான் நல்ல future இருக்கும் ங்கறாங்க..ஆனா எனக்கென்னவோ 6 1/2 வருஷம் ங்கறது கொஞ்சம் அதிகம் னு தான் தோணுது ....ஆனா கிராம புரங்களோட முன்னேற்றத்த மனசுல வச்சு,இத நாம செஞ்சு தான் ஆகணும் !!!
அவங்க சொல்றதும் ஒரு விதத்துல சரி தான். எல்லாருக்கும் அவங்களோட எதிர்காலம் முக்கியம். ஆனா படிச்சு முடிக்கிற எல்லாருக்கும் நல்ல மருத்துவ மனையில House Surgeon வேலை கிடைக்குமா? அது இல்லாம இத விட்டா இவங்க யாரும் கிராமத்துல போய் கண்டிப்பா வேலை செய்ய மாட்டாங்க. இப்போ IT பீல்டுல இருக்கற கிராமத்து பசங்க கூட அமெரிக்கா கிரீன் கார்டு வச்சு இருக்காங்க. இரண்டு அல்லது மூணு வருஷத்துக்கு ஒரு தரம் தான் இந்தியாவே வராங்க. நான் எல்லாரையும் சொல்லல. எனக்கு தெரிஞ்சி ஒரு சிலர் வாய்ப்பு கிடைத்தாலும் தனக்கு இந்தியாவே போதும் வெளி நாடு எல்லாம் போக மாட்டேன்னு சொல்றாங்க. என்ன சொல்ல வரேன்னா ஒரு வருஷம் சேவை செய்யறதால பெருசா ஒண்ணும் அவங்க இழக்க போறதில்ல. அதை ஒரு added advantage'a எடுத்துக்கலாம்.
--Narayana H--
Hello Sathya,
I'm also jotting my views.
Probably everybody is ready to serve in a village for 1 year. But this is not merely time spending job and unlike other services, medical line is important one. If one has to extend proper care to people, in the medical line first of all good knowledge & practice is essential besides having minimum facilities like instruments, lab facility, medicines, technical staff, transportation, etc.. Without all these, it is difficult to survive & to do real service and medical students will become scapegoat in the hands of politicians, village heads and rowdies. Also it isn’t possible to provide all the above facilities overnight in all villages by Govt.
My uncle was a Customs Officer in Bodinayakanur in Madurai . While exercising his duties with good morale, he was given pressure to marry a girl of a PULLY. Also parallaly he was forced to lower the taxes imposed. When he was reluctant to do so, he has been taken to a remote place and threatended and kicked (without injury) him by miscreants and sent him back to Madras . As there was no use in bringing this to higher-ups, he became sick and admitted in spl ward in Stanley Hospital where he passed away sounding “ Hi Gopal, Gopal “. That’s the end of his chapter.
sathi did you write this yourself? if so i see a good reporter in you, jodi no.1 stylelaa sonnal, super!!!
-Dhina
http://www.payanangal.in/2008/04/150.html
Post a Comment