மசாலா கலவை!
தயாரிப்பு: கௌரி கான் (ஷாருக்கான் துணைவி)
இயக்குனர்: பாரா கான் (Farah Khan)
நடிகர்கள்: ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஸ்ரேயாஸ் தல்படே
இசை: விஷால்-சேகர்
ஒளிப்பதிவு: வி. மணிகண்டன்
இது ஒரு முழு நீள மசாலா திரைப்படம். இப்படம் நம் கமல் நடித்த எனக்குள் ஒருவன் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. ஆம் மறுஜென்மம் பற்றிய கதை தான். அதே மாதிரியான பழி வாங்கும் கதை, ஆனால் நகைச்சுவையாக எதுத்திருக்கிறார்கள். லாஜிக் பார்க்காம படத்தை பார்த்தால் நல்லா என்ஜாய் பண்ணலாம்.
ஷாருக்கான் இந்த படத்தில் ஒரு ஜன்மத்தில் சாதிக்க முடியாததை அடுத்த ஜன்மத்தில் சாதித்து காட்டுகிறார். இடைவெளிக்கு முன் வரை 1970களில் நடப்பது போன்று கதையை காட்டி இருக்கிறார்கள். ஷாருக்கானும் அவரது நண்பரும் துணை நடிகர்கள். ஷாருக்கான் தான் ஓம். ஆனால் ஷாருக்கான் ஒரு பெரிய கதாநாயகனாக விரும்புகிறார். அப்போதைய பாலிவுட் டாப் நடிகையாக வருகிறார் இப்படத்தினுடைய நாயகி தீபிகா படுகோனே. இவர் தான் சாந்தி. மிகவும் அழகாக இருக்கிறார், இப்படத்திற்கு பொருத்தமான தேர்வு. அனைவருக்கும் கனவு தேவதையாக திகழும் இவரை ஷாருக்கான் ஒரு தலையாக காதலிக்கிறார், இந்த படத்துல தான், இல்லனா தோணி கொவிச்சுக்குவார். படப்பிடிப்பில் நடக்கும் எதிர்பாராத விபத்து ஒன்றில் இருந்து தீபிகாவை காப்பாற்றி அவரின் நட்பை பெறுகிறார் ஷாருக்கான். பின்னர் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதை அறிந்து மனம் ஒடிந்து போகிறார். இவருக்கு எல்லா படத்துலயும் இதே பொழப்பு தான்.
தீபிகாவை வைத்து ஒரு மிகப்பெரிய படத்தை "ஓம் சாந்தி ஓம்" தயாரிக்கிறார் ஒரு பெரிய தயாரிப்பாளர். இவர்தான் அர்ஜுன் ராம்பால், இப்படத்தின் வில்லன். இவர்தான் தீபிகாவை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால் தீபிகா திருமணம் ஆனவர் என்று தெரிந்தால் அவர் எடுக்கும் படம் ஓடாது என்பதால் அவர்களுக்கு நடந்த திருமணத்தை மறைமுகமாக வைத்து இருக்கிறார்கள். அதை ஷாருக்கான் தற்செயலாக தெரிந்து கொள்கிறார். பின்னர் தீபிகா தான் கர்பமாக இருப்பதாகவும் தான் மேலும் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்றும் அர்ஜுனிடம் சொல்கிறார். இதனால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதால் தீபிகாவை அர்ஜுன் தனது ஓம் சாந்தி ஓம் பட செட்டுக்கு கூட்டி சென்று அங்கேயே அவரை வைத்து அடைத்து செட்டை எரித்து விடுகிறார். அர்ஜுன் அவ்விடத்தை விட்டு சென்ற பிறகு இதை பார்க்கிற ஷாருக், தீபிகாவை காப்பாற்றும் முயற்சியில் தனது உயிரை விடுகிறார்.
உயிரை விடும் ஷாருக் ஒரு பெரிய நடிகருக்கு மகனாய் வந்து பிறக்கிறார். பிறகு அவர் பெரிய நடிராகி, எப்படி அர்ஜுன் ராம்பாலை பழி வாங்குகிறார் என்பது தான் பிற்பாதி கதை. படத்தில் ஒரு பாட்டில் அனைத்து பாலிவுட் ஸ்டார்களும் வந்து போகிறார்கள். ஏகப்பட்ட ஸ்டார் கூட்டம். நல்ல மார்க்கெட்டிங் உத்தி. முதல் பாதியில் ஷாருக் தீபிகாவை கவர தான் ஒரு தென் இந்தியா ஹீரோ என்று கதை விட்டு தமிழில் டயலாக் பேசுகிறார் இல்ல இல்ல கொலை செய்கிறார். பாதி படம் கலக்க போவது யாரு மாதிரி இருக்குது. 1970களில் வந்த படங்களையும், அதில் வரும் டயலாக்குகளையும் நக்கல் விதுவது போல் உள்ளது. படத்தில் செட்டிங்கும், உடைகளும் மிக அருமை. இறந்து போன தீபிகா படுகோனேவும் மறுபடியும் வருகிறார், ஆனால் இவர் மறுஜென்மம் இல்லை. என்ன கொடுமை சார் இது? கதையில் பல காட்சிகளை சுலபமாக யூகித்து விட முடிகிறது.
ஆக மொத்தத்தில் ஒரு மசாலா படத்தை நகைச்சுவையாக அனைவரும் ரசிக்கும் படியும் கொடுத்து இருக்கிறார்கள். இப்படத்தை ஷாருக்கை தவிர வேறு யார் செய்து இருந்தாலும் சுமாராகத்தான் ஓடி இருக்கும். இப்படத்திற்கு rediff 3.5 ரேடிங் கொடுத்தது கொஞ்சம் ஓவர் தான். ஷாருக்கான் படம் எப்படி இருந்தாலும் புகழ்றாங்கப்பா!
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
10 months ago
6 comments:
Vimarsanam romba nalla ezhudhi irukkeenga, aana Padam neenga sonna madhiri sumaar dhan.
ரொம்ப நன்றி தலைவா!
http://www.rediff.com/movies/2007/nov/16srk.htm
மேல இருக்கற செய்திய இப்போதான் படிச்சேன். நான் எழுதினது எவ்வளவு சரி;)
நீங்க சொல்றத பார்த்தா இது ஒரு ஹிந்தி சந்திரமுகி போல இருக்குமோ??? :-))
இதுல சந்திரமுகில வர மாதிரி த்ரில்லிங் இருக்காது, எல்லாம் நீங்க முன்னாடியே யூகிச்சிடலாம். சந்திரமுகியும் ஹிந்தில "பூல் புலையா"னு எடுத்து ரிலீஸ் ஆகி நல்லா ஓடிட்டு இருக்கு.
hi sathi,
wonderful vimarisanam, you look very professional.
kadai rombo sothaiyaa irukku, padikkum pothee parkanumnuu thonalai...but one point which is always true, like rajni (no no for him also our people did not spare baba, we are more sensible fans), shahrukh kahn movie is the only selling point, crazy fans...he is floating up there dangerously, one day he is going fall very badly to a level from where he can never rise again...
-Dhina
Post a Comment