நடிகர்கள்: ஹ்ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய்
இயக்குனர்: அஷுடோஷ் கோவாரிகர்
தயாரிப்பு: ரோன்னி ஸ்க்ருவாலா, அஷுடோஷ் கோவாரிகர்
கதை: ஹைதர் அலி
இசை: ஏ. ஆர். ரஹ்மான்
ஒளிப்பதிவு: கிரண் தியோஹன்ஸ்
எடிட்டிங்: பல்லு சலுஜா
வீர பாண்டிய கட்டபொம்மனுக்கு எப்படி ஒரு சிவாஜி கணேசனோ அது மாதிரி அக்பருக்கு ஒரு ஹ்ரித்திக் ரோஷன்னு சொல்லலாம். சிவாஜி பேசிய அளவுக்கு நீண்ட வசனங்கள் இல்லை என்றாலும் கூட அக்பர் இப்படி தான் இருந்திருப்பார் என்று கண்டிப்பாக நம்பும் படியாக கன கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இனி அக்பர் என்றாலே எனக்கு ஹ்ரித்திக் தான் ஞாபத்துக்கு வருவார்.
எப்போதுமே இந்த மாதிரி சரித்திர படங்களை எதுப்பது ஒரு பெரிய ரிஸ்க். இந்த படத்தை அஷுடோஷ் கோவாரிகர் எடுக்க போறாருன்னு கேள்வி பட்டவுடனே எங்க படம் ஊத்திக்க போகுதோன்னு ரொம்ப கவலை பட்டேன். படம் வெளியாகி ஓரளவுக்கு நல்லா ஓடுதுன்னு தெரிஞ்சவுடனே தான் நிம்மதி பெருமூச்சு விட்டேன். ஏன்னா நான் கோவாரிகரோட மிகப்பெரிய விசிறி. அவர் படம் எடுக்குற உத்தி எனக்கு ரொம்ப பிடிக்கும். ரொம்ப யதார்த்தமா எடுப்பார். இந்த படமும் அப்படிதான். ஆனா ரொம்ப பிரமாண்டமா எடுத்திருக்கார். நம்ம நாட்டுலையும் இந்த மாதிரி ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் எடுக்கறாங்களேனு ரொம்ப பெருமையா இருக்கு. படத்துல வர போர் கட்சிகளை எல்லாம் பார்த்து அசந்து போயிட்டேன்.
எனக்கு ஹ்ரித்திக் ரோஷனுடைய நடிப்பு பெருசா ஒண்ணும் பிடிக்காது. அவருடைய படம் சிலது நல்லா இருக்கும், ஆள் நல்லா நடனம் ஆடுவார். அவ்வளோதான் அவரை பற்றி என்னுடைய அபிப்பிராயம். ஆனா இந்த படத்துல அவர் பின்னி பிடல் எடுத்துட்டார். அப்படியே அக்பராகவே வாழ்ந்து இருக்கார். இதுல கோவாரிகருடைய பங்கும் இருக்கும்னு நினைக்கிறேன். ஐஸ்வர்யா ராயும் ஜோதா பாத்திரத்தில் நல்லா பொருந்தி இருக்கார். அவருடைய பாத்திரத்தை அறிந்து அழகாக செய்திருக்கிறார்.
அக்பர் ஹிந்துஸ்தானை முழுவதுமாக முகலாயர்கள் ஆள வேண்டும் என்ற தன் முன்னோர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக முயற்சி செய்கிறார். அந்த முயற்சியின் ஒரு பங்காக தான் அவர் ஜோதாவை திருமணம் செய்து கொள்கிறார். ஜோதா ராஜ்புட் வம்சத்தை சேர்ந்தவள். அவர் ஒரு ஹிந்து, அதிலும் சுத்த சைவம். இவர்களின் திருமணம், அதில் எழும் பிரச்சனை, திருமணத்திற்கு பின் இவர்களுக்குள் உதிக்கும் காதல், உள்நாட்டு சதி, அக்பரின் ஆட்சி திறன், அவர் நல்லாட்சி செய்ய எடுத்து கொண்ட முயற்சி என அனைத்தையும் மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள்.
"அக்பர் தி கிரேட்" பேரை கேட்டாலே ஒரு கம்பீரம் தெரியுது இல்ல. அதை இந்த படத்துல பார்க்கலாம். படத்துல வர நிறைய விஷயங்கள் சின்ன வயசுல ஹிஸ்ட்ரி புத்தகத்துல படிச்சதெல்லாம் ஞாபகப்படுத்துது. இந்த மாதிரி நாலு படம் பார்த்தா போதும் புத்தகத்தையே படிக்க வேண்டாம். படத்துல ஒளிப்பதிவும், இசையும் பிரமாதம். ஒளிப்பதிவு நான் முன்னமே சொன்ன மாதிரி ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கு. இசையை பத்தி சொல்லவே வேண்டாம். ஏ. ஆர். ரஹ்மான் திரும்பவும் அவர் ஒரு ஜீநியஸ்னு நிரூபிச்சிருக்கார். பாட்டெல்லாம் அப்படியே மெய் சிலிர்க்க வைக்குது. இதை படிக்கும் போது என் வலைப்பூவில் ஒலிக்கும் இசையும் இந்த படத்தில் வருவது தான். ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கோவாரிகருக்கும் கெமிஸ்ட்ரி நல்லா வொர்க்-அவுட் ஆகுது. இவர்கள் இணைந்து செய்த மூன்று படத்திலும் பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்.
படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் ரொம்ப நல்லா இருக்கு. அஷுடோஷ் இந்த மாதிரி எப்பவுமே நல்ல படங்களா எடுக்கனும்னு நான் மனதார வாழ்த்துகிறேன்!
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
8 months ago
0 comments:
Post a Comment