Friday, February 22, 2008

துணுக்கு மூட்டை

விஜயகாந்த் தனது கட்சிக்காக புதுசா டிவி சானல் தொடங்க போறாராம். என்ன பேர் வைக்கலாம்னு யோசிச்சிகிட்டிருக்காறாம். அதுக்கு எதுக்கு ரோசனை? 'கேப்டன்' டிவின்னு ஆரமிச்சிட வேண்டியதுதானே? இதுதவிர முழுக்க முழுக்க அரசியல்மயமான பத்திரிக்கையையும் அவர் தொடாங்கவிருக்கிறாராம். அப்போ காமெடி பத்திரிக்கையா? ஹையா;)


*****

நம்ம அமீர் எதுத்த பருத்தி வீரன் படத்தோட புகழ் உலகம் முழுசா பரவுதுங்க. ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் 58-வது சர்வதேச படவிழாவில் திரையிட இந்தியாவில் இருந்து பருத்தி வீரன் படமும் ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் படமும் தேர்வாகி இருக்காம். பருத்தி வீரன் சரி, அது எப்படி ஓம் சாந்தி ஓம் படத்த தேர்வு பண்ணாங்க? அது முழுக்க முழுக்க மசாலா படம். தாரே சமீன் பர் மாதிரி நல்ல படம் எல்லாம் இருக்கும் போது இதை போய் தேர்வு பண்ணி இருக்காங்க? அடக் கடவுளே!

*****
இந்த செய்திய படிச்சதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. "இந்தி நடிகர் ஷாருக்கான், கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோரின் தபால் தலைகள் வெளியிடுவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது." அடப்பாவிங்களா? என்ன இப்படி இறங்கிட்டீங்க? டெண்டுல்கர் சரி, சானியா நேத்து பெய்த மழைல இன்னைக்கு முளைச்ச காளான் - சாதிக்க இன்னும் நிறைய இருக்கு, ஷாருக்கான் எனக்கு தெரிஞ்சி ஒண்ணுமே செய்யல நாட்டுக்கு. போற போக்குல விஜய்க்கு 'தமிழன்' படத்துல தபால் தலை வெளியிடுவாங்களே அது நிறைவேறிடும் போல;)

*****

என் அலுவலகத்துல கூட வேலை பார்க்குற நண்பர் ஒருத்தர் விழுந்து விழுந்து வேலை பார்ப்பார். எப்போ அவருக்கு மீட்டிங் ரிக்குவெஸ்ட் போடலாம்னு பார்த்தாலும் அவர் காலண்டர் பிசியாவே இருக்கும். பயங்கரமா வேலை செய்யறார் போலன்னு நாங்களும் நெனசிப்போம். ஒரு தடவை அவர் அவரது கணினியை லாக் பண்ணாம எங்கேயோ போயிருந்தார். அப்போன்னு பார்த்து ஒரு மீட்டிங் ரிமைன்டர் கிளிங்னு சத்ததோட அவர் கணினியில இருந்து வந்தது. நானும் ஏதாச்சும் முக்கியமான மீட்டிங் இருக்க போகுதுன்னு உடனே எழுந்து போயி பார்த்தா, இதாங்க அந்த மீட்டிங் ரிக்குவெஸ்ட், "India Times + Rediff Newspaper". இந்த கொடுமைய எங்கிட்டு போயி சொல்ல?

2 comments:

Vino said...

என் அலுவலகத்துல கூட வேலை பார்க்குற நண்பர் ஒருத்தர் விழுந்து விழுந்து வேலை பார்ப்பார். எப்போ அவருக்கு மீட்டிங் ரிக்குவெஸ்ட் போடலாம்னு பார்த்தாலும் அவர் காலண்டர் பிசியாவே இருக்கும். பயங்கரமா வேலை செய்யறார் போலன்னு நாங்களும் நெனசிப்போம். ஒரு தடவை அவர் அவரது கணினியை லாக் பண்ணாம எங்கேயோ போயிருந்தார். அப்போன்னு பார்த்து ஒரு மீட்டிங் ரிமைன்டர் கிளிங்னு சத்ததோட அவர் கணினியில இருந்து வந்தது. நானும் ஏதாச்சும் முக்கியமான மீட்டிங் இருக்க போகுதுன்னு உடனே எழுந்து போயி பார்த்தா, இதாங்க அந்த மீட்டிங் ரிக்குவெஸ்ட், "India Times + Rediff Newspaper". இந்த கொடுமைய எங்கிட்டு போயி சொல்ல///

Very good idea I have never thought of this will try this going forward :)

Sathiya said...

ஆஹா என்ன இப்படி கெளம்பிட்டீங்க? வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வினோ!