ஒரு இருபது, முப்பது படத்தை தேடி எடுத்து வச்சுக்கிட்டு எதை போட்டிக்கு தேர்வு செய்யறதுன்னு ரொம்ப கொழம்பி போயிட்டேன். இன்னும் கொழப்பம் தீரலை. வந்து பார்த்தீங்கனா என் தேர்வு சரியான்னு சொல்லிட்டு போங்க.
முதல் படம் போட்டிக்கு, மற்றவை எல்லாம் பார்வைக்கு.
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
9 months ago
9 comments:
கடைசி 2 படங்கள் அட்டகாசமாக உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை போட்டிக்கு அனுப்பலாம்...ரொம்ப பொருத்தமாக இருக்கும்.
BTW, இந்த மாத தலைப்பு ஜோடி. உங்கள் தலைப்பில் தனிமை என்றிருக்கிறது.
ரொம்பத்தான் குழம்பியிருக்கிறீர்கள். மே போட்டிக்கு தலைப்பு ஜோடி, தனிமை இல்லை. படங்கள் சரிதான். ஜோடிக்கண்கள் அழகாக இருக்கிறது. அது என்ன வெள்ளை மயிலா?
சகாதேவன்
@சூர்யா~ ரொம்ப நன்றி. நானும் கடைசி ரெண்டையும் போடலாம்னு நெனச்சேன். ஆனால் அந்த இரண்டு படத்தினுடைய தரம் எனக்கு அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை. அதான். தலைப்பை மாற்றி விட்டேன். அவசரத்துல பழச காப்பி அடிச்சு போட்டா இப்படி தான் நடக்கும்;)
@சகாதேவன்~ ஆமாங்க, உண்மையிலேயே ரொம்ப குழப்பி இருக்கேன், தலைப்பை தப்பா போட்டு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஆம், அவை வெள்ளை மயில்கள் தான்.
கடைசி படம் என் தேர்வு..
கண்கள் படமும் நல்லாயிருக்கு..
படங்கள் அனைத்தும் போட்டிக்கு தகுதி உள்ளவை.கண்ண மூடிகிட்டு எலியைக் கிள்ளுங்கள்.
@புபட்டியன்: வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
@நட்டு: எலியை க்ளிக்கி விட்டேன். நானும் உங்கள மாதிரி கடைசி வண்டியில் ஏறிட்டேன்.
ஐயா வணக்கம்
இது வரைக்கும் நான் பார்த்த வலைப்பூ-க்கள்லஉங்க வலைப்பூவோட பெயர் ரொம்ப புடிச்சுது.. (ஆனா, வடக்குப்பட்டி-ன்னு தானே வரும் இல்லையா?) உங்க உப தலைப்பும் சூப்பர்! நமக்கும் உங்க கொள்கை தாங்க..ஜாலியா பேசி நாலு பேரசிரிக்க வைக்கறதுன்னா எதுவுமே தப்பில்ல! நம்ம வூட்டுப் பக்கம் கொஞ்சம் வந்துட்டுப் போறது..
படங்களை பொறுத்தவரை என் தேர்வு நான்காவது படம்! (ஒரு ஜோடி மீன்கள்) முதல் படம் ஏன் நீங்கள் தேர்வு செய்தீர்கள் என்பதற்கு டெக்னிக்கலாக எதாவது காரணம் இருக்கலாம்.. என்ன ஆயினும்.. வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி திரு பரிசல்காரன் அவர்களே! என் வலைப்பு பேரு பிடிச்சிருக்குன்னு நீங்க தான் முதல்ல சொல்லி இருக்கீங்க, ரொம்ப சந்தோஷம். நான் கூட முதல்ல வடக்குப்பட்டினு தான் வைக்கணும்னு பார்த்தேன், ஆனா கூகிள் மகராஜா வடக்குபட்டு தான் காண்பித்தார். அதான் அதையே வச்சுட்டேன். எனக்கும் நீங்க சொன்ன அந்த மீன்கள் படம் ரொம்ப பிடிச்ச படம். ரொம்ப டெக்னிக்கலா யோசிக்கரோம்னு நெனச்சு தப்பான ஒன்ன தேர்வு செஞ்சிட்டேனு நினைக்கிறேன்;) நம்ம கொள்கையுள்ள ஒரு ஆளை சந்திச்சது ரொம்ப சந்தோஷம். உங்க வீட்டு பக்கம் கண்டிப்பா வரேன்.
படங்களுக்கு இப்படி frame போடுவது எப்படி
Post a Comment