Monday, February 1, 2010

குழுப் போட்டி - சிங்கை குழு (Uniquely Singapore)

குழு போட்டிக்காக சிங்கை குழுவின் செயல்பாடுகளையும், தற்போதைய நிலவரத்தையும் தெரிவிப்பதற்காகவே இந்த பதிவு. குழு போட்டியில் வேறு ஏதும் முன்னேற்றம் இருப்பதாக தெரியல, அதான் இப்படி ஒரு பதிவ போட்டு தெரிஞ்சிக்கலாம்னு....

சிங்கை குழுவில் நாங்க ஒரு எட்டு பேர் இருக்கோம். என்னை ஒருங்கினைப்பாளரா, நாம எல்லாரும் சேர்ந்து பண்ணுவோம்னு நான் சொல்லியும் கேட்காம தேர்வு செஞ்சிட்டாங்க;) இப்போ தான் எதுக்குன்னு புரியுது....இவங்க எல்லாரையும் ஒருங்கிணைப்பது ரொம்ப கஷ்டமப்பா:)

சரி இந்த போட்டிக்காக நாங்க போட்ட திட்டம் இது தான்.
1. முதலில் நாங்க தகவல்கள் பரிமாறிக்கொள்ள ஒரு குழு மின்னஞ்சல் முகவரி உருவாக்குதல். (pit-singapore@googlegroups.com)
2. படங்களை பதிவேற்ற பிலிக்கர் மற்றும் பிகாசாவில் ஒரு பொது ஆல்பம் உருவாக்குதல்.

http://www.flickr.com/photos/uniquelysingapore/

http://picasaweb.google.com/unique.singapore


3. அனைவரும் முதலில் தங்களது படங்களை பிலிக்கரில் பதிவேற்ற வேண்டும். அதை நாங்கள் எங்களுக்குள் விமர்சனம் செய்து கொள்வோம்.
4. பின்னர் ஒரு rating வைத்து டாப் 50 படங்களை பிகாசாவில் பதிவேற்றி, அதை போட்டிக்கு அனுப்ப வேண்டும்.

சிங்கப்பூர் பற்றி ஒரு போட்டோ புக் போடணும்னா, முழு சிங்கப்பூரையே இந்த ஐன்பது படங்களில் அடக்க வேண்டும். அதற்காக எங்களால முடிஞ்ச வரைக்கும் இங்குள்ள அணைத்து இடங்களையும், இங்கு வாழும் பல்வேறு இன மக்கள், அவர்களின் விழாக்கள், கலாச்சாரங்கள் ஆகியவற்றை இதில் அடக்க முயற்சிக்கிறோம்.

நாங்க ஒரு இரண்டு, மூன்று பேர் சேர்ந்து இதுவரை 54 படங்களை பிலிக்கரில் பதிவேற்றி இருக்கோம். மற்றவர்களும் இனிமேல் பதிவேற்றுவார்கள் (செய்வீங்க இல்ல?;)

எங்க குறிக்கோள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். யார் இந்த போட்டில கலந்துக்கலைன்னாலும், நாங்க தனித்து போட்டியிட்டாவது எப்படியாவது முதல் இடத்தை பிடித்து விட வேண்டும்:)

8 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பங்களிப்புகளைப் பற்றி விவரமாக பதிவிட்டிருக்கிறீர்கள்.. பாராட்டுகள்.. படங்களும் சிறப்பாக வந்துகொண்டிருக்கின்றன.. பிக்காசா க்ரூப் பப்ளிக் இல்லை போல இருக்கே.. ப்ளிக்கரில் படங்களைப் பார்த்தேன்..

SurveySan said...

thanks for the update.

we will follow up on the retest of the teams.

Sathiya said...

@முத்துலெட்சுமி: நன்றி! பிகாசா குரூப்ல இன்னும் படங்களை பதிவேற்றவில்லை.

@SurveySan: Thank you!

KARTHIK said...

தல எனக்குவேன ஒரு டிக்கெட் எடுத்து அனுப்புங்க நானும் உங்க குருப்போட ஐக்கியம் ஆயிடுறேன்

கலக்குங்க வாழ்துக்கள்

Sathiya said...

@கார்த்திக்: நான் வேணும்னா ஒரு Blank Cheque அனுப்பறேன்....நீங்களே டிக்கெட் வாங்கிக்கோங்க;)

நன்றி கார்த்திக்!

Iyappan Krishnan said...

சிறப்பான முயற்சி. வாழ்த்துகள்

Sathiya said...

@Jeeves: நன்றி Jeeves!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in