3 Idiots எல்லாரும் பார்க்க வேண்டிய படம். இந்த படத்தை என் கூட வேலை பார்க்கும் சீனா, பிலிப்பின்ஸ் மக்கள் கூட விரும்பி பார்த்தாங்க. இதை பார்க்காத தமிழ் மக்களுக்காக ரீமேக் பண்ணியதற்காக ஷங்கரை பாராட்டனும். இதனால இன்னொரு நல்ல விஷயம், multi-starrer படங்கள் பாலிவுட் மாதிரி இங்கேயும் வந்திருக்கு. இனிமே இந்த மாதிரி வந்தா தான் கொஞ்சமாவது மக்கள் தியேட்டர்க்கு வந்து படம் பார்ப்பாங்க.
ஷங்கர்
ஜெயம் ராஜா மாதிரி ரொம்ப நல்லா ரீமேக் பண்ணி இருக்காரு. வசனம் எல்லாம் நல்லா இருக்கு. ஒரிஜினல் படத்துல கொண்டு வந்த அதே பீலிங்க்ஸ் கொண்டு வந்துருக்காரு. பாட்டு எல்லாம் மட்டும் ஷங்கர் படத்துல ஏற்கனவே பார்த்த மாதிரி தான் இருக்கு. படத்துக்கு சரியான ஆட்களை தேர்வு செய்திருக்காரு இலியனா தவிர.
விஜய்
அப்பாடி! ரொம்ப நாள் கழிச்சு பஞ்ச் டயலாக், அடி தடி, ஹீரோயிசம் இல்லாம வர்றாரு. இன்னொரு நல்ல விஷயம் அறிவுரை சொல்ற மாதிரி கிளைமாக்ஸ்ல நீளமான வசனம் கிடையாது. ஆமிர் கான் கூட எல்லாம் இவரை ஒப்பிட முடியாது, பட் நல்லா தான் செஞ்சிருக்காரு. சூர்யா பண்ணி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும், ஏன்னா நம்ம ஊர்ல கலரா இருக்கவன் பொய் சொல்ல மட்டான்ற மாதிரி, கலர் கம்மியா இருக்கறவனை புத்திசாலியா ஒத்துக்க மாட்டாங்க. படத்துல ஆள் பார்க்க நல்லா இளமையா இருக்காரு.
சத்யராஜ்
போமன் இராணி லெவெலுக்கு கலக்கி இருக்காரு சத்யராஜ். அந்த வசன உச்சரிப்பு மட்டும் ஒரிஜினல் மாதிரி இருக்கணும்னு ஒரு மாதிரியா பேசறது செயற்கையா இருக்கு. அதை மட்டும் சத்யராஜ் பாணிக்கே விட்டு இருக்கலாம்.
ஜீவா
ஜீவாவும் ஷார்மன் ஜோஷிக்கு இணையா கலக்கலா பண்ணி இருக்காரு. இவரு நூறு சதவீதம் சரியானு தேர்வு இந்த ரோலுக்கு.
ஸ்ரீகாந்த்
இவரும் நல்லா தான் பண்ணி இருக்காரு ஆனா மாதவன் அளவுக்கு இல்லை. இருந்தாலும் பெருசா குறை ஒன்னும் சொல்ல முடியாது.
சத்யன்
இவரு சான்ஸ்ஸே இல்லை. ஜீவாவுக்கும் இவருக்கும் மட்டும் தான் புல் மார்க்ஸ். 3 Idiotsல இந்த ரோல் ரொம்ப முக்கியமானது. இதை இவர விட்டா வேற யாரும் இவ்வளோ நல்லா பண்ணி இருக்க முடியாது.
இலியனா
படத்துல இருந்த ஒரே குறை இவங்க தான். சில இடத்துல பார்க்க முடியலை. குரூப்பா டான்ஸ் ஆடும் போது இவங்கள கண்டு பிடிக்கவே கஷ்டமா இருக்கு. ஒரு காட்சியில இவங்க பேசற லோக்கல் தமிழ் ரொம்ப கொடுமை. வேற யாரையாச்சும் போட்டு இருக்கலாம்.
மத்தப்படி ஒளிப்பதிவு ரொம்ப அருமை. இசை பரவா இல்லை. அஸ்கு லஸ்கா பாட்டு மட்டும் தான் எனக்கு ஞாபகம் இருக்கு. இடைவேளைக்கு அப்புறம் வர பாட்டெல்லாம் கடுப்பேத்துற மாதிரி இருந்துது.
3 Idiots பார்க்கலைன்னா, கண்டிப்பா பார்க்கலாம். இதை தான் பார்க்கணும்னு இல்லை, ஹிந்தி தெரிஞ்சா 3 Idiotsயே பாருங்க.
எள்ளுருண்டை /Ellurundai/Sweet Sesame Balls
8 months ago