ஆந்திராவில் நடந்த தேர்தலில் சிரஞ்சீவி கட்சி 294 தொகுதிகளில் வெறும் 18 சட்டசபை தொகுதிகளில் தான் வென்றது. ஒரே ஒரு எம்.பி. தொகுதியில் கூட வெற்றி பெற வில்லை.
இவர் தோல்வியை இவரது ரசிகர்களே பல இடங்களில் இனிப்புகள் கொடுத்து கொண்டாடி உள்ளனர். ஏனென்றால் இவர் அரசியலில் வெற்றி பெறுவதற்கு முன்பே சட்டசபை தொகுதிகளில் அவரது கட்சி சார்பாக போட்டியிடுவதற்கு மூன்று முதல் ஐந்து கோடி வரை வாங்கி இருக்கிறார். இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், ஒவ்வொரு தோற்றுப்போன கட்சியும் கண்ணா பின்னாவென்று யோசித்து கொண்டிருக்க, இவர் மட்டும் தனது கட்சியின் தோல்விக்கான காரணத்தை அறிய ஒரு புதிய முறையை கையாண்டிருக்கிறார்.
அவர் தோல்விக்கான காரணம் பற்றி அறிய 10 வாஸ்து ஜோதிட நிபுணர்களை தனது கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கட்சி அலுவலகம் முழுவதும் பார்வையிட வைத்திருக்கிறார். அவர்கள் சிரஞ்சீவியிடம், நீங்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு எந்த வழியை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர் பின்புற வழியை மட்டுமே பயன்படுத்துகிறேன் என்று கூறி இருக்கிறார். உடனே வாஸ்து நிபுணர்கள் அவரிடம், முதலில் பின்புற வழியை அடைத்து விடுங்கள். நீங்கள் கட்சி அலுவலகத்தில் பின்புற வழியை பயன்படுத்தியது தான் தோல்விக்கு காரணம். இனி நீங்கள் முன்புற வழியை மட்டுமே பயன் படுத்தவேண்டும் என்றனர். மேலும் அலுவலகத்தில் சிரஞ்சீவி அமரும் திசைகளையும் மாற்றினர். மேலும் அவரைப்பார்க்க வரும் தொண்டர்கள் காத்திருக்கும் அறையிலும் சிறிது மாற்றம் செய்தனர். பின்னர் வாஸ்து நிபுணர்கள் சிரஞ்சீவி அலுவலகத்தில் உள்ள வாஸ்து குறைபாட்டை சரி செய்து விட்டதாகவும், அடுத்த தேர்தலில் அவர் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றும் கூறியுள்ளனர். அடப்பாவீங்களா!
நல்ல வேளை ஆந்திரால ஒரு கண்ணகி சிலை இல்லை. இருந்திருந்தா இன்னொரு புது பிரச்சனை வந்திருக்கும் போல! எதற்கும் கையை நீட்டிட்டு நிக்கிற மாதிரி ஏதாச்சும் என்.டி.ஆர். சிலை இருக்கானு பாருங்க. என்ன இருந்தாலும் நீங்க இப்படி செய்வீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இதை கவனிக்கவும். உங்க அலுவலகத்தில் கூட வாஸ்து பிரச்சனை இருக்கும்னு நினைக்கிறேன். அட உங்க அலுவலகத்தை தான் பாதி இடிச்சிபுட்டாங்களே...ஒரு வேளை அது தான் காரணமோ? நல்லா பிளான் பண்ணி தான்யா செஞ்சிருக்காய்ங்க!
Thursday, May 21, 2009
நடிகர் சிரஞ்சீவி தேர்தலில் தோற்றது ஏன்?
Posted by Sathiya at 10:21 PM 3 comments
Labels: Nation, Political Views, அரசியல், சமூகம்
Saturday, March 21, 2009
என்ன அழகு எத்தனை அழகு!
அனைவருக்கும் வணக்கம்! ஒரு நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் போடும் பதிவு இது. முதல் பதிவே இந்த மாதிரி போடனுமானு கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. இருந்தாலும் "யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்'னு பெரியவங்க சொல்லிவிட்டு போயிருக்கறதால தவிர்க்க முடியல. அது மட்டும் இல்லாம என்னை மாதிரியே இவரும் நீண்ட நாள் இடைவெளிக்கு அப்புறம் வந்திருக்காரு.
இன்னமும் இளமை மாறாமல் எப்படி அம்சமா இருக்காருன்னு பாருங்க. இந்த படங்களை பார்த்தாலே தெரியுது படம் சூப்பர் ஹிட் ஆயிடும்னு. அதனால எல்லாரும் இப்போவே டிக்கெட் புக் பண்ணி வச்சுக்குங்க.
இந்த படங்களை நான் மும்மூரமா வேலை செஞ்சிட்டிருந்த போது ஒருத்தன் ஈமெயில் பண்ணினான். பார்த்ததும் அப்படியே ஆனந்த கண்ணீர் வந்திருச்சி. சரின்னு அப்படியே எனக்கு தெரிஞ்சவங்களுக்கெல்லாம் அனுப்பி விட்டேன். பதிலுக்கு அவங்க கோவத்துல அனுப்பின வார்த்தைகளை பார்த்ததும் இரத்த கண்ணீரே வந்திருச்சிங்க:(